02 June, 2010

பால்வீதி புணருமொரு தனிமை


துயர் தரும் திரவம் உறிஞ்சி வளர்கிறது உயிர் பயிர். அதன் மொத்த சாரமும் ஈர்த்து உப்பிப் பருக்கிறது பயிர்முனையில் குரோதக் கனி. அதன் ருசி துரோகம். இலைகள் வன்மம். அதன் வண்ணம் கரும் ஊதா. தண்டு போதம். வேர்கள் விருப்பம். ஒவ்வொரு விடியலிலும் ஒரு கனியாகாத இருள் பூ மௌனத்துடன் உதிர்கிறது அதனிடமிருந்து. அது ஒரு மெல்லிய நிழலை வெளியெங்கும் படர விடுகிறது. உதிர்வதற்கு வினாடிகளின் முன்பு தனிமையெனும் மகரந்தத்தை அடிவயிற்றில் ஏந்திய மொனார்க்குகள் தூவிச்செல்கிறது வெளியெங்கும் படர்ந்த நிழலில். கிரணங்களின் முதல் ஸ்பரிசத்தில் புணர்வுச்சம் பெற்று கருக்கொள்கிறது பால்வீதி.
*****************************
திருமொழி வாய்வழி தருமொரு மறுப்பொலி மறுவிழி சிமிட்டொளி குறுகிய கனைப்பொலி பொழிவிலி விழிவழி பிழிந்தது நீர்த்துளி இரங்கினள் துவண்டனள் மிரண்டனள் மருண்டனள் மகிழ்ந்தனன் முகிழ்ந்தனன் மழைத்தது மழைத்தது மழைத்தது.
*****************************
தனிமை புலம்பல் வெறுமை அரற்றல் சகலம் துறத்தல் அகிலம் மறத்தல் பறித்தல் மரித்தல் பிறத்தல் அழித்தல் கழித்தல் களித்தல் சுகித்தல் விளம்பல் விழித்தல் பார்த்தல் கேட்டல் மறைத்தல் சேர்த்தல் தூர்த்தல் வீழ்த்தல் விரிநீர் நுழைதல் அமிழ்துள் நோக்கல் . அழுதல் தொழுதல் மொழிதல் விலகல் .

********************************

அடங்குடா.

*********************************

8 comments:

padma said...

ஹா ஆதிரன் இதெல்லாம் என்ன ? எங்கிருந்து ? என்று கொஞ்சம் யூகிக்கிறேன் ...இல்லை!! என்று நீங்கள் கூறத்தான் போகிறீர்கள்..:)) அதை நான் நம்பியும் விடுவேனோ? எனக்குத்தான் நம்பிக்கை மீது நம்பிக்கை இல்லையே !

அடங்குடா இல்லை
இன்னும் நிறையவே ஆர்ப்பரி(டா) !!!:)))

siva said...

Dear Mahi,
ஒரு கனியாகாத இருள் பூ.As i always try to remember all the things/concepts in my mind as pictures and colors, the above words give me a picture of peacefullness,hope,rest.I feel gratefull to you for this sentence.
thank you.

suresh

Jayaseelan said...

/திருமொழி வாய்வழி தருமொரு மறுப்பொலி மறுவிழி சிமிட்டொளி குறுகிய கனைப்பொலி பொழிவிலி விழிவழி பிழிந்தது நீர்த்துளி இரங்கினள் துவண்டனள் மிரண்டனள் மருண்டனள் மகிழ்ந்தனன் முகிழ்ந்தனன் மழைத்தது மழைத்தது மழைத்தது./

உங்களின் தமிழுக்கு தலைவணங்குகிறேன்...
படித்து முடித்ததும் மனதுக்குள் மழைத்தது மழைத்தது மழைத்தது!!!

வசுமித்ர... said...

ஆடகம் ஏடகம் காடகம் கூடகம் கேடகம் கோடகம் சூடகம் சேடகம் தோடகம் நாடகம் நின் நடை.

பாடகம் போடகம் மாடகம் வேடகம்
ஓடம் கீடம் கூடம் கேடம் கோடம்
சேடம் என் தவம்

ஆட்டல் ஈட்டல் ஊட்டல் ஓட்டல்
காட்டல் கூட்டல் கோட்டல் சூட்டல்
தீட்டல் நாட்டல் நீட்டலென் குறி

ஆணி ஏணி காணி கேணி கோணி
சேணி தூணி தோணி நாணி
பாணி பூணி மாணியெனக்குன் யோனி

ஏத்தல் காத்தல் கோத்தல் சாத்தல்
சீத்தல் சேத்தல் தீத்தல் நீத்தல்
பாத்தல் பூத்தல் மூத்தலில் நீ தோழி

ஆய்தல் ஏய்தல் ஓய்தல் காய்தல்
சாய்தல் தேய்தல் தோய்தல் பாய்தல்
மாய்தல் மூய்தல் மேய்தலென் ஞானம்

ஆல் ஓல் கால் கீல் கோல்
கூல் சால் சூல் சேல்
தால் தோல் நாலென் பொழுது

ஆழ்தல் கீழ்தல் சூழ்தல் தாழ்தல்
போழ்தல் மாழ்தல் வாழ்தல் வீழ்தல்
ஆழ்த்தல் ஊழ்த்தல் தாழ்த்துன் விதி.


அன்புடை மகி ....
அன்னார் மேலே கண்டது சாத்திரபடி வருடம் 1918லே மதுரை தமிழ்ச்சங்க ஸ்தாபகரும் அக்கிராசேனாதிபதியும் பாலநத்தம் ஜமின்தாருமாகிய ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீமான் பொ. பாண்டித்துரைத் தேவரவர்களின் எழுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தமென்னும் முன்னுரையும்...ஸ்ரீமத் கோ. வடிவேலு செட்டியாரவர்களுடைய நிலைமண்டிலவாசிரியப்பா எனும் இணை முன்னுரையுடனும் இன்னும் நமச்சிவாய முதலி,சுப்பாராவையர், கணபதிபிள்ளை, முத்துமாணிக்க கவிராயரோடு, ஸ்ரீமத் சுந்தர நாதம் பிள்ளை முன்னுரையோடு வெளிவந்த நா. கதிரைவேற்பிள்ளையின் தமிழகராதியிலிருந்து தொடையகராதி குறிற்கீழெதுகை
தெய்வவணக்கத்தோடு கூடிய

நடைபிற ழாதரு ணாதனா ரடிதொழ
தொடையகராதியைச் சொல்.

அதிலிருந்து எடுத்தாளப்பட்ட சொற்கள் இறுதி முடி என் வார்த்தைச்சேர்ப்பு.

அன்னாருக்கு இனிய வணக்கமும் ஆசீர்வாதமும்.

மேற்கண்ட ஒவ்வொரு சொல்லுக்கும் விளக்கமென நான்கும் குறையாத விளக்கச்சொற்கள் உள்ளன.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

/////தனிமை புலம்பல் வெறுமை அரற்றல் சகலம் துறத்தல் அகிலம் மறத்தல் பறித்தல் மரித்தல் பிறத்தல் அழித்தல் கழித்தல் களித்தல் சுகித்தல் விளம்பல் விழித்தல் பார்த்தல் கேட்டல் மறைத்தல் சேர்த்தல் தூர்த்தல் வீழ்த்தல் விரிநீர் நுழைதல் அமிழ்துள் நோக்கல் . அழுதல் தொழுதல் மொழிதல் விலகல் . ///////

வார்த்தை கோர்வைகள் மிகவும் அழகு

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

nice

adhiran said...

பத்மா என்னை முபீன் சாதிகா வின் வலை பார்த்தது இது போல் எழுதுதுவதாக என்னை கூறினாலும் எனக்கு புதிதாக பின்னூட்டம் இடும் நண்பர்களை இந்த பதிவு தேடி தந்திருக்கிறது. மிக்க நன்றி நண்பர்களே. தொடர்கிறேன். நேரம் கிடைக்கும் போது. நன்றி.

padma sorery.

thanks jeyaseelan.
thamks sankar-panithului.
thanks suresh. it gives you rest. I proud.

adhiran said...

vasu as usual, u r diffrent maker. u got it. thanks.