கவனமாய் தன் நித்திரையை
தவிர்கிறான் செவ்விழி ததாகன்
சிறுபிசகில் மூடிய விழித்திரையில்
தொங்கும் நெடும்கூந்தல் விரைந்து
நீள்கிறது அவனுள்ளிருக்கும் சிறுமலர்
நோக்கி. தாழம்பூ திரிந்த வாசனையில்
நாசி நடுங்க தரை பிராண்டுகிறான்.
தோல்கிழிந்து நகம் வழி கசியும்
குருதி ருசியை நுகர்கையில்
விறைக்கும் ஞானம் புணர்கிறது
ஞாபகத்தின் செதிலை. உதிரத் தொடங்கும்
காலம் வெளியெங்கும் ஏந்திச்
செல்கிறது ஒளிபொருந்திய
தத்துவத்தை.
விடிந்ததும்
இழந்தைதை எப்படி பெறுவது
என்று தெரியாமல் கிடைத்தை
பார்க்க கிடைத்த முதல்
மனிதனிடம் கைமாற்றுகிறான்
ததாகன்
பின் ஒருபோதும்
கூந்தல் நீண்டு பெண்ணாகிப்போன
அவனை பார்க்கவில்லை
* * * * * *
No comments:
Post a Comment