21 August, 2013

மனநிலைக் குறிப்புகள் 02


பொதுவான நிலை:

ஷா டின் ராங் ஒரு இளம் ஜென் துறவி. ஏறக்குறைய ஞானம் அடைந்தவர். எதோ ஒன்று அவரை தடுத்து வந்தது. என்னவென்று அறியமுடியாமல் தவித்தார். தேசாந்திரியாக அலைந்தார். ஒரு இடத்தில் அமர விடாமல் அவரது ஆயாசம் தடுத்தது. என்ன அது, எதனால் ஆனது அது, தனது முழு ஞானத்தையும் தடுக்கும் விதி எது என மனசஞ்சலம் அவரை வாட்டியது. இரவு பகல் பாராது அலைந்தார். கிராமங்கள், நகரங்கள் காடுகள், மலைகள் என அவரது அலைச்சல் அவருக்கு பெரும் அயர்வை உண்டு பண்ணியது. ஒரு நாள் அடர் காடொன்றில் ஒரு மூத்த துரவி இருப்பதை அறிந்து அவரிடம் ஆலோசனை பெற முடிவெடுத்தார். நீண்ட பயணத்திற்கு பின் அந்த மூத்த துறவியை சந்தித்தார். அடர்ந்து வளர்ந்த குமிழ் மரத்தின் நிழலில் ஆசுவாசமாக அமர்ந்திருந்த மூத்த துறவி விபரத்தை கேட்டுவிட்டு, ”இனிமையான ஷா டின் ராங்.. அதோ சற்று தொலைவில் முள்முருங்கை மரம் ஒன்று உள்ளது.. அதன் தாழ்வான கிளையில் ஒரு புழுவின் கூடு இருக்கிறது..அதைப் பார்த்துக்கொண்டிரு..” என்று சொல்லிவிட்டு அமைதியாகிவிட்டார். இளம் துறவி அந்த முள் முருங்கை அருகில் சென்று ஒரு புழுவின் கூடு இருப்பதைக் கண்டார். மூத்த துறவி சொன்னது போல அம் மரத்தின் அடியில் அமர்ந்து அந்த கூட்டைப் பார்க்கத் தொடங்கினார். சூரியன் எழாத விடிகாலை வெளிச்சத்தில் அந்த கூட்டுப்புழு வண்ண வண்ண நிறம் கொண்ட பட்டாம்பூச்சியாக தத்தி வெளிவந்தது. வானில் மிதந்த சில நொடிகளில் அன்றைய சூரியனின் முதல் கிரணத்தை இளம் துறவி பட்டாம் பூச்சியின் சிறகில் கண்டார். அவர் முகத்தில் ஒரு புன்னகை எழுந்தது. பின்னாளில் அடர்காட்டில் சக்தி வாய்ந்த இரண்டு துறவிகள் வாழ்ந்து கொண்டிருப்பதாக மக்கள் பேசிக் கொண்டார்கள்.

எனக்கு இதைப் படிக்கும் போது ஒரு நகைச்சுவை ஞாபகத்திற்கு வந்தது. அமெரிக்கத் தம்பதிக்கு ஒரு குழந்தை பிறந்ததாம். குழந்தை பார்ப்பதற்கு ஜப்பானிய சாயலில் இருந்தது கண்டு அந்த அமெரிக்கத் தகப்பன் குழந்தைக்கு ’Some Thing Wrong’ என்று பெயர் வைத்தானாம். அந்த இளம் துறவியின் பெயர் இந்தக் கதையை எனக்கு ஞாபகப்படுத்தியது.

.......................................... 

ஓவிய மனநிலை



இலக்கிய மனநிலை


நண்பர்களே நீங்கள் வாசிக்கும் பியானோவில் கருப்புக் கட்டைகளும் உள்ளன...மற்றும் ஒரு காலத்தில் அவர்களின் கையில் பைபிள் இருந்தது..

தத்துவ மனநிலை

சம்யக் தரிசனம், சம்யக் ஞானம், சம்யக் சாரித்திரம் - மும்மணிகள் !
....................................................................................

Today:

1. Amazing Daulat Beg Oldie.. amazing.. amazing..!

2. Rationalist Dabholkar used to say I am not against God or Religion, I am against Exploitation – in The Hindu.

.........................................................................................

No comments: