28 March, 2011

சாயலற்றுபோகலாம்...


ஒரு வேளை நாளை எனது பயணத்தை தொடங்கிவிடலாம். கிழக்கின் தூர நிலத்தின் கதகதப்பான அமைதி தேடி. காலைபனி கசியும் மிருதுவான நிலத்தில் சில கிழங்குகள் எனக்கு கிடைக்கலாம். ஒரு பகலின் ஏகாந்தம் புல்முனையில் வெளியேறும் காற்றின் ஒலியால் கிடைக்கலாம். வெயிலின் மஞ்சளில் எனது முகம் உருகி சில சொட்டுகள் ஆவியாகலாம். களைப்பற்ற மாலையில் கரும்பாறை சூட்டில் என் நிர்வாணம் குளிர் காயலாம்.


அல்லது


ஒரு இரவு என்னில் நுழையலாம். ஒற்றைக்கரு தானியமாய் சிறகு நீண்ட இளமஞ்சள் கழுத்து நிற பறவையின் அலகில் கவ்வப்பட்டு அதன் இருள்வயிர் சேரலாம். அதன் உதிரம் கலந்து பழுப்பு கழிவாய் அரண்மனை சுவரில் விதைபடலாம். பெருமரமாய் நீண்டு அரண்மனைகதவுகளை பிளக்கலாம். வெட்டுண்டு மரதுண்டுகளாய் மிதக்கலாம் தலைகீழாய் ஓடும் நதியொன்றில்.


அல்லது


ஒரு வேளை நாளை நானொரு பதில் சொல்ல நேரலாம். அதன் விளைவால் எனது நேரங்கள் பறிக்கப்பட்டு எனதுடல் ஒரு பெண்டுலமாய் நடமாட தொடங்கலாம். பனிமூச்செரியும் ஓநாயின் நாவுகள் எனது பாதங்களை சுவைக்கலாம். அதன் சுவை புணரப்பட்ட பிணத்திற்கு உயிர் ஊட்டலாம்.


அன்பே


அதற்குமுன் உனது சாயலை என்னிடமிருந்து எடுத்துவிடு. அது என்னை சாஸ்வதமாகுகிறது. சுயசாயலற்ற உயிரின் காலமாய் வெடிக்கசெய்கிறது. வெளியெங்கும் நிரம்பும் ஒளிதுகலாக்குகிறது. என்னையும் மற்றமையையும் ஒன்றாக்குகிறது. தாங்கவொண்ணா குதூகலத்தின் நீர்துளியாகின்றது. ஆம் அன்பே ... உன் சாயல் ...என்னை மகாவெடிப்பின் காரணியாக்குகிறது..


அன்பே


இன்று மாலை போதுமெனக்கு. ஒரு வேளை நாளை நான்.....


**********************

08 March, 2011

maaaaarch ........ 8

பெண் இனம் என்பது ஒற்றை உயிர் - குட்டி ரேவதி. பிரமாண்டமான கற்பனைக்கு நன்றி சொல்லி இந்த பெண்கள் தினத்தை கொண்டாடும் பெண்களுக்கு என் இனிய வாழ்த்துகளை சொல்கிறேன்.
கடந்த மாதங்களின் சில நாட்கள் உடலை மூலதனமாகிய நாற்பத்தைந்து பெண்களிடம் அலுவல் ரீதியாக பேச நேர்ந்தது. நாற்பத்தைந்து நாவல்கள்! இந்திய மண்ணின் விதவிதமான முக அமைப்புகள் மற்றும் மொழிகள். (எனக்கு ஒரிய மொழியை பெயர்த்து சொன்ன அந்த ஒரியப் பெண் பேசிய சென்னை தமிழ் ஒரு இனிய அனுபவம்) தாய்லாந்தை தொடர்ந்து இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது உடலை மூலதனமாக்கும் பெண்ணகளை வைத்திருப்பதில். உடலை மூலதனமாக்கும் முதலாளிகள் கணிசமானவர்கள் பெண்களே. இவர்களுக்கான அடியாட்கள் கூட சிலர் பெண்களாக இருக்கிறார்கள். அரசு இவர்களை விபச்சாரிகள் என்று சொல்லவேண்டாம் பாதிக்கப்பட்டவர்கள் (victims) என்று சொல்லுங்கள் என்கிறது. அவர்களை சம்பவ இடத்தில் கைது செய்தால் சிறைக்கு அனுப்பக்கூடாது. பாதுகாப்பு இல்லத்தில் அடைத்து அவர்களது ரத்த உறவினர்களுடன் நீதிமன்றம் மூலமாக அனுப்புகிறார்கள். நான் கவனித்த வரை புதிதாக இந்த பணிக்கு வருபவர்களிடம் குற்றவுணர்வு எதுவுமிருப்பதாக தெரியவில்லை. இது நல்லதா கெட்டதா என்று எனக்கு புரியவில்லை. நிறைய சிக்கல்கள். பெண் இனம் என்பது ஒற்றை உயிர் என்கிறார் குட்டி ரேவதி தனது தளத்தில். யாருக்கு என்கிற கேள்வி என்னை குடைகிறது. (ஒரு ஆணாக இதை சொல்லவில்லை என்பதையும் மனிதன் என்கிற விலாச பார்வையில் புரிதலை சொல்கிறேன் என்பதையும் தெளிவு செய்கிறேன்). வாழ்க்கை இங்கு ஆண், பெண் அல்லது இண் என்று பார்ப்பதில்லை. வாழ்வு என்பது ஒரு குரூர நிகழ்வுப்போக்கு அவ்வளவே.
*****************************************************
இன்று எனது துணையின் பிறந்த நாள்: லியோனார்ட் கோகனின் பாடலை நினைவு கூர்கிறேன்.


If you want a lover
I'll do anything you ask me to
And if you want another kind of love
I'll wear a mask for youIf you
want a partnerTake my hand
Or if you want to strike me down in anger
Here I stand
I'm your man

If you want a boxer
I will step into the ring for you
And if you want a doctor
I'll examine every inch of you
If you want a driver
Climb inside Or if
you want to take me for a ride
You know you can
I'm your man

Ah, the moon's too bright
The chain's too tight
The beast won't go to sleep
I've been running through these promises to
youThat I made and I could not keep
Ah but a man never got a woman back
Not by begging on his knees
Or I'd crawl to you baby
And I'd fall at your feet
And I'd howl at your beauty
Like a dog in heat
And I'd claw at your heart
And I'd tear at your sheet
I'd say please, pleaseI'm your man
And if you've got to sleep
A moment on the road
I will steer for you
And if you want to work the street alone
I'll disappear for you
Or only want to walk with me a whileAcross the sand
I'm your man


*************************

கோவிலுக்கு கூட்டிகிட்டு போ.. என்றாள். கோவிலுக்கு போகலாம் தப்பில்லை. நல்லதுதான்.. சாமிகிட்டதான் போககூடாது என்றேன்.! முறைப்பில் கண்டேன் கடவுளை..!

*************************