22 August, 2013

மன நிலைக் குறிப்புகள் 03

 


சுரா மீன் வகை, பந்தயக்குதிரை வகையில் தொல்லை தருவதற்காக உடனெருங்கிச் செல், முன் உந்துலகத்தின் தொழில்வாய்ப்பில் பங்கு பற்றும் நோக்குடன் அண்டி அணைத்து நிறுத்து, மேசைப் பந்தாட்டத்தில் எளிதாக தொடர்ந்தடிக்கும் நிலையில் பந்துகளை அருகருகாக பார்த்து வை, வாக்காளர்களுடன் அடிக்கடி தொடர்பு கொண்டு தேர்தல் தொகுதியில் நல்லெண்ணம் பேணு, கணப்பருகில் அணைவாய் அமர், உறுப்பினை மிக ஆதரவு காட்டிப் போற்றிப் பேணு, காலைத்தடவிப் பிடி, முழந்தாளைக் கட்டி அணைத்துக் கொண்டிரு, தழுவிக் கொஞ்சி விளையாடு, குழந்தையை அன்புடன் எடுத்தணைத்து ஆதரவு காட்டு, கவலை கேடு வராமல் பேணு, பரிவோடு கவனி, தளராமல் பதுகா, பகமை கவலை முதலியவற்றை மனதில் வைத்து பேணி வளரச் செய், கலை முதலியவற்றை பேணி ஆதரி, தோட்டம் பாதுகாத்து வளர், செடி கொடி பயிர்களைப் பேணு, நோய் நொடிகளை கவனித்து குணமடையும் படி பணிவிடை செய், நோயாளிகளை கவனித்துப் பேணு, பாலூட்டி வளர், பேணி வளர், ஊட்டுத்தாயாய் உதவு, பண்பின் வளர்ப்பு நிலம், நிழல் தருவதற்காய் வளர்க்கப்படும் மரம், இனப் பெருக்க வகை மாறுபாடுடைய உயிர்களிடையே பால் சார்பற்ற இனப்பெருக்க படி நிலை, கன்னித்தாய்ச்சி, தேனீ-எறும்பு முதலிய உயிர்கள் வகையில் மரபு பேணிகாக்கும் அலியினம், இனத்தாய்ச்சி, பேணிகாப்பு, பாலூட்டி வளர்ப்பு, நோயாளைகளைப் பேணி காப்பவர், குழந்தைகளை பேணி வளர்ப்பவர், ஊட்டுத்தாய், வளர்ப்புத்தாய், தாதி: NURSE – ஆங்கிலம் – தமிழ்ச் சொற்களஞ்சியம் (University of Madras Press 1992)  

ஒரு நாவலைப் படிக்கிற மாதிரி இருக்கில்ல ?

There are two sort of WMDs. One is everybody knows. (If don’t know WMD then please do know. It is mandatory. Surf WMD). Other one is Dictionaries. They are very dangerous WMD stock holders. அகராதி பிடிச்ச அகராதிகள்  !

ஓவிய மனநிலை
 (சூர்யாவும் சந்திராவும் பானுமதியை பெற்றிருக்கிறார்கள். காலையில் இருந்து வீடு ஒரே அமளியாய் இருக்கிறது. போட்டோ எடுக்கப் போனால் விரட்டுகிறான் சூர்யா. அப்பளத்தைப் போட்டு காக்காய் பிடித்திருக்கிறேன். !)
இலக்கிய மனநிலை
Epitaph

L.A.T.

ON THE GROUND
"Hid in the corner, you look so stubborn,
We wait for long. Say, you agree?"
"Ah, I don't know. Leave me, mother!
Leave me. It's all the same to me!"

IN THE GROUND
"Is not the breath of a tired chest heavy?
In tight grave it's always dark, you see?"
"Ah, I don't know. Leave me, people!
Leave me! It's all the same to me!"

OVER THE GROUND
"Did I love passionately with my heart, too?
Evil - did it so anger thee?"
"O my good God, I agree completely!
I'm tired. It's all the same to me!"
- Marina Tsvetaeva.  (
www.lib.ru/POEZIQ/CWETAEWA/sbornik_engl.txt)
தத்துவ மனநிலை
சம்யக் தரிசனம் ( நற்காட்சி): 1. அய்யமின்மை, 2. அவா இன்மை, 3. உவர்ப்பு இன்மை, 4. மயக்கு இன்மை, 5. அறப்பழி நீக்கல், 6. அழிந்தாரைத் தாங்கல், 7. அளவளாவல், 8. அறம் விளக்கல்.
Rocking JAINA…….  to be continued…
 Today:
It is Very impressive ‘Google Logo’ for Claude Debussy.
..............................................................

 
 

21 August, 2013

மனநிலைக் குறிப்புகள் 02


பொதுவான நிலை:

ஷா டின் ராங் ஒரு இளம் ஜென் துறவி. ஏறக்குறைய ஞானம் அடைந்தவர். எதோ ஒன்று அவரை தடுத்து வந்தது. என்னவென்று அறியமுடியாமல் தவித்தார். தேசாந்திரியாக அலைந்தார். ஒரு இடத்தில் அமர விடாமல் அவரது ஆயாசம் தடுத்தது. என்ன அது, எதனால் ஆனது அது, தனது முழு ஞானத்தையும் தடுக்கும் விதி எது என மனசஞ்சலம் அவரை வாட்டியது. இரவு பகல் பாராது அலைந்தார். கிராமங்கள், நகரங்கள் காடுகள், மலைகள் என அவரது அலைச்சல் அவருக்கு பெரும் அயர்வை உண்டு பண்ணியது. ஒரு நாள் அடர் காடொன்றில் ஒரு மூத்த துரவி இருப்பதை அறிந்து அவரிடம் ஆலோசனை பெற முடிவெடுத்தார். நீண்ட பயணத்திற்கு பின் அந்த மூத்த துறவியை சந்தித்தார். அடர்ந்து வளர்ந்த குமிழ் மரத்தின் நிழலில் ஆசுவாசமாக அமர்ந்திருந்த மூத்த துறவி விபரத்தை கேட்டுவிட்டு, ”இனிமையான ஷா டின் ராங்.. அதோ சற்று தொலைவில் முள்முருங்கை மரம் ஒன்று உள்ளது.. அதன் தாழ்வான கிளையில் ஒரு புழுவின் கூடு இருக்கிறது..அதைப் பார்த்துக்கொண்டிரு..” என்று சொல்லிவிட்டு அமைதியாகிவிட்டார். இளம் துறவி அந்த முள் முருங்கை அருகில் சென்று ஒரு புழுவின் கூடு இருப்பதைக் கண்டார். மூத்த துறவி சொன்னது போல அம் மரத்தின் அடியில் அமர்ந்து அந்த கூட்டைப் பார்க்கத் தொடங்கினார். சூரியன் எழாத விடிகாலை வெளிச்சத்தில் அந்த கூட்டுப்புழு வண்ண வண்ண நிறம் கொண்ட பட்டாம்பூச்சியாக தத்தி வெளிவந்தது. வானில் மிதந்த சில நொடிகளில் அன்றைய சூரியனின் முதல் கிரணத்தை இளம் துறவி பட்டாம் பூச்சியின் சிறகில் கண்டார். அவர் முகத்தில் ஒரு புன்னகை எழுந்தது. பின்னாளில் அடர்காட்டில் சக்தி வாய்ந்த இரண்டு துறவிகள் வாழ்ந்து கொண்டிருப்பதாக மக்கள் பேசிக் கொண்டார்கள்.

எனக்கு இதைப் படிக்கும் போது ஒரு நகைச்சுவை ஞாபகத்திற்கு வந்தது. அமெரிக்கத் தம்பதிக்கு ஒரு குழந்தை பிறந்ததாம். குழந்தை பார்ப்பதற்கு ஜப்பானிய சாயலில் இருந்தது கண்டு அந்த அமெரிக்கத் தகப்பன் குழந்தைக்கு ’Some Thing Wrong’ என்று பெயர் வைத்தானாம். அந்த இளம் துறவியின் பெயர் இந்தக் கதையை எனக்கு ஞாபகப்படுத்தியது.

.......................................... 

ஓவிய மனநிலைஇலக்கிய மனநிலை


நண்பர்களே நீங்கள் வாசிக்கும் பியானோவில் கருப்புக் கட்டைகளும் உள்ளன...மற்றும் ஒரு காலத்தில் அவர்களின் கையில் பைபிள் இருந்தது..

தத்துவ மனநிலை

சம்யக் தரிசனம், சம்யக் ஞானம், சம்யக் சாரித்திரம் - மும்மணிகள் !
....................................................................................

Today:

1. Amazing Daulat Beg Oldie.. amazing.. amazing..!

2. Rationalist Dabholkar used to say I am not against God or Religion, I am against Exploitation – in The Hindu.

.........................................................................................

20 August, 2013

மனநிலைக் குறிப்புகள் 01


 

ஓவிய மனநிலை
 
 இலக்கிய மனநிலை:

There was a flock same feathered feeding themselves

There was a clock confronting time with only two spear

There was a block converted ashes by a carpet shell

 

தத்துவ மனநிலை:

ஆதியிலே இருந்தது ஆதி மட்டுமே

 

இன்றய நாள்:

பச்சை விளக்கு காட்டப்பட்டது

39 மனிதர்கள் வாழ்க்கைய கடந்தார்கள்.
 
..............................................................................................................................
 
பதிவர்கள் கூட்டத்திற்கு எனது வாழ்த்துக்கள்.

...............................................................................................