25 November, 2009

அன்பு

அன்பு என்பதே ஒரு ஏமாற்று வேலை. அன்பின் கொல்திறன் திசை மற்றும் தூரத்தை வெல்லும் திறன். அனால் பேரன்பு எதிர்பார்ப்பை நிராகரிக்கிறது. ஏசுவுக்கும் புத்தனுக்கும் மகாவீரருக்கும் வாய்த்தததாக நம்பப்படும் அப்பேரன்பு அனைத்தையும் உள்ளடக்கும் ஆழ்கடல். அதன் அடர்த்தி சாதாரண மனிதனால் இயங்க முடியாத ஒரு சூழலை உருவாக்குகிறது.

அன்பின் பெயரால் அதிகாரம் செலுத்தவே முடியும். பாசம், நேசம்,அக்கறை, பிரியம் என பல சொற்களைத்தான் ஒட்டுமொத்தமாய் அன்பென்று நாம் உருவகம் கொள்கிறோம். காதலைக்கூட அன்பு கேலி செய்கிறது. எதிர்பார்ப்பின்மை மற்றும் மற்றமையை அப்படியே ஏற்றுக்கொள்ளும் தன்மை ஆகியவை மட்டுமே அன்பின் ஆதார அலகுகள். அதை புரிந்துகொள்பவர்களுக்கு அன்பு ஒரு இனிய வாழ்வின் சாத்தியப்பாடுகளை அளிக்கிறது. என்னை பொறுத்தவரையில் அன்பு செய்வது என்பது வேறு அன்பாகவே இருப்பது வேறு. நாம் சாதாரண வெகுமக்கள். நம்மால் அன்பு செலுத்தவே முடியும் பதிலாக அன்பையோ துரோகத்தையோ பரிசாக பெற்றுக்கொண்டு. !

அன்பாகவே இருப்பது தவம். நம்மை போன்றவர்களுக்கு அது தேவையில்லை என்றே தோன்றுகிறது. நமது சூழல் கடுமையான காழ்ப்புணர்ச்சிகளாலும் எதிர் தாக்குதல்களாலும் ஆனது. இதற்காக நாம் எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு கேடயமும் அன்பிற்கு எதிரானது. ஆனால் கேடயங்களை எடுப்பதும் குறுங்கத்திகளை பிரயோகிப்பதும் மனிதர்களின் அடிப்படை இயல்பு. சே.பிருந்தாவின் ஒரு வரி "என் நகங்கள் அன்பாலானவை" எப்போதோ படித்தது. மறக்கமுடியாத படிமம். நாம் அன்பை பிரயோகிக்கிறோம் ஒரு ஆயுதமாக! எதிர்தாக்குதல் யுத்த கடமை.

****


1 comment:

chandra said...

உண்மை ஆதிரன் சாதாரண மனிதர்களுக்கு அன்பு மிகப்பெரிய வன்முறையால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அன்பையும் ஒரு அனுபவமாக பார்ப்பவர்களிடம் துரோகத்தைத் தவிர வேறெதையும் பரிசாக பெற முடியாது என்பதையும் உணர்ந்துவிட்டேன். அன்பு நாய்க்குட்டி போல் போலியாக பின்னால் வருவதையும்,ஏசுவைப்போல் 'நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை உன்னை கைவிடுவதும் இல்லை'. 'ஏலோயி ஏலோயி லாமா சபக்தானி' என்று கெஞ்சுவதையும் பார்த்துவிட்டேன். ஆனால் எல்லாவற்றையும் மீறி அன்பு என்ற மாய வசீகரம் உடைக்க முடியாத இரும்புச் சங்கிலிகளை உடலில் சுற்றி வளைத்துதான் வைத்திருக்கிறது.அதை மிகப் பத்திரமாக நூலினைப் போல் பிரித்தெடுக்கும் முயற்சியைத்தான் செய்துகொண்டிருக்கிறேன்.