30 November, 2009

வருகை

புதுப்புனல் செப்டம்பர் இதழில் அலிஷியா பட்னாய் என்ற பெண் கவியின் கவிதை ஒன்றை கீழே கொடுத்துள்ளேன். அரசியல் கைதியாக சிறையில் இருந்தபோது மகளுக்காக எழுதிய கவிதையென உணரமுடிகிறது. ஆனால் இதன் அகிலத்தன்மை இக்கவிதையின் வீச்சை முழுமை செய்கிறது.

வருகை:

வெள்ளிகிழமைகளில், அம்மா

பூட்டுகளையும் கதவுகளையும்

உடைத்து திறந்து கொண்டு வருகிறாள்

நிமிடங்களை கணக்கிட்டவாறு உன்னோடு

தட்டமாலை விளையாட . அப்பா

தொலைதூரத்தில் சுவரால் சூழப்பட்ட தனது நாளில்

உன்னுடைய கதகதப்பான தேகத்தையும்

உன்னுடைய கணக்கிடப்பட்ட குறைவான நிமிடங்களையும்

கனவு கண்ட வண்ணம் இருக்கிறார்

என்னால் மட்டும் முடியுமானால்

என்னருமை குழந்தையே, என்னால் மட்டும் இந்த

பூட்டுக்கள் எல்லாவற்றிற்குமான காரணத்தை

உனக்கு விளக்க முடியுமானால்

இந்த வாயிற்கதவுகள் எல்லாவற்றிற்குமான காரணத்தை

இந்த கம்பிகள் எல்லாவற்றிற்குமான காரணத்தை

உயரமான சுவர்ர்களுக்கான காரணத்தை

எல்லாவற்றிற்குமான.. எல்லாவற்றிற்குமான

கணக்கிடப்பட்ட நிமிடங்களுக்கான காரணத்தை

அதை மட்டும் என்னால் விளக்க முடியுமானால்

என் அருமை குழந்தையே

என்னால் மட்டும் 'வெளி' யை விழுங்க முடிந்தால்

ஒவ்வொரு சிறைச்சாலையிலிருந்தும் தொலைவாக

தட்டமாலை சுற்றமுடிந்தால் ..

ஹோ.. அப்படி மட்டும் முடிந்தால்

பின் நாம் சுதந்திரமாக விளையாடிக்கொண்டிருக்கலாம்

என் கைகளும்

காலக்கணக்கை

ஆனந்தமாய் தொலைத்துவிடும்..

*****

2 comments:

ஸ்ரீராம். said...

இரண்டு மூன்று முறை படித்தேன். நல்ல கவிதை, நல்ல மொழி பெயர்ப்பு.

kggouthaman said...

நண்பரே - எங்கள் பிளாகில் நீங்க படிச்சு ரசிச்ச கமெண்டை
பதிவு செய்ததற்கு எங்கள் நன்றி!