18 December, 2009
என்றொரு ஆதிப்பெண் 2
காமா..
சில பலாப்பழங்களின்
நிறங்கள் ஒரு எலுமிச்சையின் நிறமாய்
ஒத்திருப்பதை பற்றியும் ஒரு
காக்கையின் நிறமில்லாமல்
இருப்பதைப்பற்றியும் யோசிக்க
ஏலாதவான் நான்.
ஒற்றை எலுமிச்சையுடன்
குன்றேரும் என்முன் கண்மறைவில்
வெளிச்ச சாகசம் புரியும் நிலவுப்பாதை
முழுவதும் காற்று சொரியும் வாசனை நீ.
இம்முறை பத்மவியூகத்தில் எனக்கு
அளிக்கப்பட்டிருப்பது அரசிவேட்டை
எப்பொழுதும்போலவே வெளியேறதெரியாதவன்
நானொருவனே. வனப்பூக்களின் வாசனையில்
துளிர்க்கும் அரசியை காணப்புகும்
உள்ளுணர்வு அது.
காமா..
பின்னிரவின் களைப்பில்
பாறையிடுக்குகளில் நான் சாய்கையில்
வூதாக்கதிர்களின் துணை கொண்டு
என் கண் பிளக்கிறாள் அரசி
****************
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
நல்ல நடை
அருமை
1) ஏன் மறுபடி பழைய விதமாய் நிற மாற்றம்?
2) குன்றேரும் - குன்றேறும்?
3) வூதாக்கதிர்கள் - ஊதாக் கதிர்கள்?
டெம்ப்ளட் மாற்றம் ஒரு முக்கியமான அறிவுரையை ஏற்று!
குன்றேறும்' தான் சரி.
வூதா என்பது கவிதைக்காக.
நன்றி ஸ்ரீராம், தியாவின் பேனா.
ம்ம்ம்.. வித்தியாசமாதான்யிருக்கு.. :)
கவிதை அருமை ஆதிரன்.
வெளிச்ச சாகசம் புரியும் நிலவுப்பாதையில் அபிமன்யு ...ஹ்ம்ம் கண் திறந்ததும் வெளி (வழி) தெரிந்ததா?
Post a Comment