16 December, 2009

இரண்டு புத்தகங்கள்

*********
இது ஐம்பதாவது பதிவு!
*********
மனங்கொத்தி பறவை
மூலைவீட்டுக் காம்பவுண்டின்
தொட்டத்துக்குள்ளிருந்து
வெட்டிப்போட்ட கொத்துச்
செடிகள் அழைக்கிறது
வியர்வை சொட்ட
நெடுந்தூரம் போய்விட்ட
அவன் பெயர் சொல்லி.
--------- அவனைப்போல ஒரு கவிதை - தொகுப்பில்
கீதாஞ்சலி பிரியதர்சினி .
சில அபாரமான மற்றும அ-பாரமான கவிதைகளை கொண்டிருக்கும் இப்புத்தகம் எனக்கு ஒரு இனிய வாசிப்பனுபவம்.
********
வாசகப்புலி வெளியேற விடாமல்தடுக்கும் மாய சர்க்கக்கூண்டுகள்:
ஆதியிலே சொல்லிருக்க அதிலிருந்து வெளியேருங்கதைகளில் புகுந்த மனிதமார்கள் பசியாற பெண்களையுண்டாக்கியதாலே கலவியின்பம் பெற்று கதைகள் பற்றி அறியவேண்டியதை மறந்து இல்லறம் கலந்ததினாலே சாமான்யனாகி குழந்தைகுட்டிகளை பெற்றுக்கொண்டும் வளர்த்துக்கொண்டும் விவசாயஞ்செய்து பிழைக்கத்தொடங்கியதாலே ஈரக்கதைகளெல்லாம் மழைக்குள் புகுகவெனவும் பாறைக்கதைகளெல்லாம் மலைக்குள் புகுகவெனவும் வசமான கதைகளெல்லாம் வானத்துள் புகுகவெனவும் மாயக் கதைகளெல்லாம் மருவி மண்ணுக்குள் புகுகவெனவும் யோகப்பெருந்தேவன் உலகுகாக்கும் உன்னதபுருசனின் சக்தியானவளாலே சாபம்பெற சக்திமனவாளன் தானுங்கெட்டு தனைச்சேர்ந்த மனிதமாரும் கெட கதைபற்றிஏதுமறியாமல் புழுத்துப்போனவர்கலானதாலே சம்சாரத்திலே உழன்று உயிர்கொழிக்கிறாரென்றும் மருண்டு புலம்பத்தொடங்கிய நாளிலே நாரதனாம் காலக்கண்ணன் கண்விழித்து உலகம்பூராவும் அழியும்படிக்கும் மனிதமாரின் புத்தி போச்சு.. கெட்ட பேய்களின் ஆட்டம் விஞ்சி போச்சு.. எல்லாத்தையும் ஒருவழி பண்னோனுமென கைலாயம் போய் கதற, பாத்தா சக்தி ... இதுனல்லதாப்படலைன்னு போயி புருசன்காரன்கிட்ட இந்தா நீ உடனே ஒருகாரியஞ்செய் சட்டுன்னு உன்சுக்கிலத்த காத்தாக்கி பூலோகத்துல துப்பிடு சொன்னதும் விஷயத்தை ஞானத்துலே அறிஞ்ச ஈசன் அவ சொன்ன மாதிரியே துப்ப வாயுக்கொளாறாலே மூனாஞ்ஜாமத்துக்கு மேலே முள்ளுகருவேலைக்குள்ள ஒதுங்குன பானா வெங்கடேசனுக்கு உச்சந்தலையில விழுக அவரும் தலையத்தொடச்சவாக்கில நமச்சிவாயான்னு ஒரு சொல்ல வெளியேத்த அந்த சொல்லு தாம்பேரு டிரிஷ்டாம்னு சொல்லிக்கிட்டு அவரோட வீட்டு விட்டத்துலே தொங்கிகிட்டு விடாம பேச தொடங்க வந்துச்சு வெங்கடேசனுக்கு தாண்டவரய்யன் கதை..
உலகமக்களே ஒன்றுகூடுங்கள் தாண்டவராயன் கதை படியுங்கள் . பெறுங்கள் இந்த ஜென்ம பலனை.
******

4 comments:

ஸ்ரீராம். said...

ஆங்கிலத்தில் நேரு மிக நீள வாக்கியங்களை முற்றுப் புள்ளி வைக்காமல் எழுதுவாராம்...அது போல ஒரு வரி எத்தனைதான் நீளும்?

adhiran said...

ஸ்ரீராம், முடிந்தால் தாண்டவராயன் கதை நாவலை வாசியுங்கள். அதைப்படித்த பாதிப்புதான் இந்த நீண்ட வரி! தமிழ் புனைவுலகின் உச்சங்களில் ஒன்று இப்புதினம்.

ஸ்ரீராம். said...

என்ன ஆச்சு...

'சட்' 'சட்'டென இரண்டு மாறுதல்கள். ஒன்று இச்சை என்ற தலைப்புடன் ஒரு கவிதையைப் படித்து பதிலுழுதிச் சென்றபின் அது தலைப்பு மாறியதோடல்லாமல், வேறு சில வரிகளையும் ஏற்றிக் கொண்டது.
இரண்டு இப்போது டெம்ப்ளேட் மாற்றி கவர்ச்சிகரமான வண்ணங்களுடன் காட்சி அளிக்கிறது.

vasu said...

Try to change the template......