காமா ....
மழைநீரின் ருசியறியா மணல்வனம்
நீ. பெருவெப்பத்தின் தகிப்பறியா நீரூற்று
நான். திசையறியா வெள்ளத்தின் உடைபொருள்
அது. ஒரு சங்கீதக்காரனின் வெயில்நாளின் மழையுடை
நீ. அடரிரவின் ஒளி உடைக்கும் தவளைச்சத்தம்
நான். திறந்தவுடன் கொட்டிவிடும் பெருமழை
அது. காய்ந்த நிலவில் மகரந்தம் தேடும் ஈக்களின் வாசம்
நீ. இரைக்கெனவூளையிடும் ஓநாயின் வேட்கை
நான். கொள்கலன் அற்று நிரம்பிவழியும் பேரமுதம்
அது.
காமா .....
சருகொலியின் பயப்பரப்பு நீ. சயனத்தில்
ககனத்தீ நான். அமைவிடத்தின் அடியாழம்
அது. ஸ்தூலத்தின் நெடுமருவி நீ. பொழிவிழந்த
காட்டெருதின் வகையறியா பெருங்கூவல்
நான். ஜாமத்தில் திரண்டிருக்கும் பொழிவெளுச்சம்
அது. தூமத்தின் கலி ஏற்றும் மாறன் நீ. மண்புழுதிக்காட்டில்
கலி கொள்ளும் தூறன் நான். விசும்பெல்லாம்
எழுந்தடங்கும் ஊழியோசை அது.
*******
2 comments:
ஒண்ணும் புரியலை... நமக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம்க...
கொள்கலன் அற்று நிரம்பிவழியும் பேரமுதம்
class adhiran
Post a Comment