தெருவை கடக்கும்போது நாம் எவற்றையெல்லாம் கடக்கிறோம். நமது மூளையின் - அவரவர்மூளையின் - அனுபவ சேகரிப்புகளில் இருந்து அத்தெருவில் நிகழும் நிகழ்வுகளை நமது மனம் உள்வாங்கும். சில நிகழ்வுகள் நம்மை நெகிழச் செய்யும். சில நிகழ்வுகள் நம்மை அருவருக்கவைக்கும். சிலநிகழ்வுகள் நமக்கு சிரிப்பை வரவழைக்கும். சில நிகழ்வுகள் எரிச்சலுணர்வு அளிக்கும். சில நிகழ்வுகள் நமது பால்யத்தை மீட்டுக்கும். சில நிகழ்வுகள் நம்மை கோபம் கொள்ளச்செய்யும். இப்படி பல வகைமைகளுக்கு நம்மை இழுத்தடித்து விடும் ஒரு நெரிசல் மிகுந்த கடைவீதி.
அனாலும் ஒரு மனிதனுக்கு இவ்வகையான பலதரப்பட்ட உணர்வுகளுக்கு ஆட்படுத்த ஒரு தெரு தான் வேண்டுமென்பதில்லை. அறையில் அமர்திருக்கும் போது கேட்கக்கிடைக்கும் எதிர்பாராத ஒரு ஒலித்துணுக்கு போதும்.
வசந்தபாலனை குறைசொல்ல முடியாது. யதார்த்த சினிமா என்கிற மண்ணாங்கட்டி ட்ரெண்டில் தமிழ் சினிமா ஜந்துக்கள் ஊறித்திளையும் போது. அங்காடிதெரு அப்பிடியான ஒரு ட்ரென்டெட் சினிமா. விசு, வி.சேகர் போன்றவர்களின் படங்கள் ஞாபகம் இருக்கிறதா. அவ்வகைப்படங்களின் டிஜிடல் வண்ணம்தான் இவ்வகைப்படங்கள். தொழில்நுட்பம் கூட்டப்பட்ட, நம்பகத்தன்மை கூட்டப்பட்ட கணினி மய ஓரங்க நாடகங்கள் இவை. ஜாதகாரன் பொய் சொல்லக்கூடும். கணினி ஜாதகம் பொய் சொல்லாதது!
தெரு. நின்றுபார்த்தால் தெரிவதெல்லாம் யதார்த்தம் என்று சொல்லமுடியுமா. சரவணா ஸ்டோர்ஸ் - மன்னிக்கவும் செந்தில் முருகன் ஸ்டோர்ஸ் பற்றிய எதிர்மறையான திரைக்கத்திக்கு - மறுபடியும் மன்னிக்கவும் - திரைக்கதைக்கு அன்னாச்சிகளிடமிருந்து தனிக்கருத்து ஏதும் வரவில்லைஎன்றால், இங்கு யதார்த்தம் என்றால் என்ன என்கிற என்குழப்பம் என்னோடு போகட்டும்.
இனிய புனைவெழுத்தாளர் திரு ஜெயமோகனின் உரையாடல் யதார்த்தத்தின் உச்சம் என்று சொல்லும் நண்பர்களுக்கு, மறைந்த வசனகர்த்தா எ.எல். நாராயணனின் (பெயர் சரியா? 'வாழ்வேமாயம்' போன்ற படங்களில் எழுதியவர்) வசனங்களையும் மறையாத இயக்குனர் கே.பாக்கியராஜ் அவர்களையும் நினைவில் கொள்ள வேண்டும். நிச்சயம் திரு ஜெயமோகனின் வசனம் சிறப்பான ஒன்று. அகில உலகமும் மேற்சொல்லும் "யாருன்னு கேட்டா... சிரிச்சேன்" உரையாடல் எனக்கும் பிடிக்கும்.
இப்படியான நச்சென்ற வசனங்களின் பட்டியலை தொடர்பதிவாக எழுத முதலில் ஜெகன்னாதனை அழைக்கிறேன். அப்புறம் க.சீ.சிவக்குமாரையும் அழைக்கிறேன்.
எனக்கு பிடித்த மூன்று:
ஏம்மா.. ஒத்தபுள்ளையோட நிறுத்திட்டயேம்மா. (மணிரத்தினம் - தளபதி படத்தில் ஸ்ரீவித்யாவைப் பார்த்து ஒரு பெண்)
ம்ம்ம்.. மெண்டல் னு எழுதிக்குடுங்க. (காவேரி தொடரில் பாஸ்கர் சக்தி)
ஓர்மை உண்டோ ஈமுகம் - சுரேஷ்கோபி தனது படங்களில் அடிக்கடி உபயோகிப்பார்.!
எதையோ எழுதப்போய் எங்கேயோ வந்து நிற்கிறேன்.
ஆக..
வன்முறையின் பல்வேறு வெளிப்பாடுகளில் நுண் வன்முறை என்பது ஒருவகை. கத்தியின்றி குருதி கசியச்செயும் வகை. நண்பர்கள் நல்ல சினிமா என்று நம்பிவேறு தொலைக்கிறார்கள்.நம்பிக்கையை குழைப்பது அல்ல என் பணி. எனவே யதார்த்தம் ரங்கநாதன் தெருவில் ஒவ்வொரு பின் சுவர்களிலும் துப்பப் பட்ட எச்சில் கறைகள் போல கலவையான மற்றும் ரகளையான நிறங்களில் அப்பிக்கிடக்கிறது என்பத்தை நான் நம்புகிறேன்.
மற்றபடிக்கு, மற்றுமொரு நல்ல திரைப்படத்தை தமிழ்மக்களின் பார்வைக்கு வைத்த வசந்தபாலனுக்கு நன்றிகள்.
*************************
முதல் டிஸ்கி:
எதையாவது ஒன்ன உருப்பிடியா சொல்றா கோந்துத்தலையா .. என்று கூவும் நண்பர்களே: உருப்படியாதான் ஆரம்பிச்சேன்.. ஆனா .............. ஆ ........!
**********************
5 comments:
இதுக்கு பேர்தான் குட்டைய கொழப்பறதா?
தப்புப்பண்ணிட்டயேம்ம்மா ... ஒத்தபுள்ளையோட நிறுத்திட்டயேம்மா. (மணிரத்தினம் - தளபதி படத்தில் ஸ்ரீவித்யாவைப் பார்த்து ஒரு பெண்)/
இப்போ சமீபத்துல பஸ்ல வரும்போதுதான், இந்த வசனததைக் கவனிச்சேன். வந்து நண்பர்கள்ட்டல்லாம் சொல்லிச்சொல்லி ஆச்சரியப்பட்டுக்கிட்டிருந்தேன்.
thanks for visit muthuvel.
yes padma.. as usual.
வேட்டைக்காரர்களை விட வசந்தபாலர்கள் பொறுத்துக்கொள்ளத்தக்கவர்கள்.
சிவா பட்டாசு கிளப்பிட்டாரு..
நான் கொஞ்சம் R & D ரகம். நிதானமா தொகுத்திட்டிருக்கேன்.
அழைப்பிற்கு மிக்க நன்றி மகி!
Post a Comment