03 September, 2010

குறுந்தொகை

பறைபடப் பணிலமார்ப்ப விறைகொள்பு

தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய

நாலூர் கோசர் நன்மொழி போல

வாயா கின்றே தோழி யாய்கழர்

சேயிலை வெள்வேல் விடலையொடு

தொகுவளை முன்கை மடந்தை நட்பே.

--------------------------------------------------- குறுந்தொகையில் - ஔவையின் பாடலிது. பாலைத்திணை. என்னாலியன்ற ஒரு சிறிய பெயர்ப்பு.

சென்றுவிட்டாள் நன்றென்று நம்பி விடலைஅவனை

வென்றுவிட்டாள் கோசர்கள் முன் தெளிந்தமொழிபோல

நன்றுசெய்தான் மடந்தையை மாலையிட்டான் பறை அதிர சங்கூத

கொன்றுவிடு நல்தாயே பதற்றத்தை இனிதாய் வாழ்வாளுன்மகள்.

அல்லது

சென்றுவிட்டாள்
தெளிந்தமொழி போல
அவனுடன் பிடித்துப்போய்.
பறை அதிர
சங்கு ஓத
மணமுடித்தாள்
மாறாத நட்பு
கலங்காதே தாயே.

******************************

விடலை என்றால் தலைவன் என்று அர்த்தமாம்!

**********************

குறுந்தொகையில் ஔவையார் பாடிய பதினைந்து பாடல்களை இப்படி எளி-பெயர்க்க ஆசை!

*********************

4 comments:

Kousalya Raj said...

மிக அருமையான விளக்கம்.. அது என்ன எளி-பெயர்க்க ஆசை...? :))

ம்...தொடரட்டும் உங்கள் எளிமைபடுத்துதல். வாழ்த்துக்கள்.

பத்மா said...

நடத்துங்க ..எனக்கு அப்போவாவது புரியட்டும் ..

adhiran said...

thanks kousalya
thanks padma

எல் கே said...

arumai nanbare