25 January, 2011

சொற்குருகு

தானம் பெற்ற விளைநிலங்களில் சற்று ஈரம் செய்ய நாம் முடிவுசெய்தோம் திருவாசகா.. பின் கருவிகள் கொண்டு அறுவடைக்காலம் வரை காத்திருந்தோம். இல்குருகு கூவித் தொடங்கிய வசந்தம் கழிய வரக்காணோம் அக்காலம்.. துண்டு மேகம் ஒரு பிடி நீரை தெளித்தபோது நாம் நினைத்தோம் புதுவுலகின் தண்சிசு ஜனிக்குமென.. மண் கிளறினாய் திரு வாசகா நானும் சேர்ந்துகொண்டேன் உன்னுடன்.. புழுக்கள் ஊதிபெருக்க பொங்கியநிலம் பூப்படைந்தது.. விதைப்பின் காலமென நெகிழ்மனத்தில் சற்று நொதிநீர் ஊற்றினோம்.. பின் நீர் பொழிந்த மேகமேறி நான் சென்றேன் பூர்வ விதை வாங்க.. வருகையில் நிலம் மலர்த்தியிருந்தது ஓராயிரம் வார்த்தைப் பூக்களை.. நிதானமாய் சொன்னாய் என்னை விதைத்தேன் விளைந்தது வார்த்தைகளென.. நான் விழுங்கிய விதை பூக்கிறது மௌனமாய்..

அறுவடைகருவிகள் வேடிக்கைப் பார்க்க உதிர்த்து வாடுகிறது மூப்பிப் பழுத்த விளை சொற்கள்.. திரு வாசகா வா கடல் நீர் குடிப்போம்.

3 comments:

கோநா said...

திரு ஆசிரிய(ப்பா...) ஆதிரன், பட்டைய கெளப்புறீங்க. ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டும் அர்த்தம் புரியவில்லை, நிகண்டு கொண்டு தேடிப் பார்க்கணும். இருவரும் கடல் நீர் குடிக்க போவது தீராத் தாகத்தை குறிப்பிடுகிறதா?

பத்மா said...

என்னை விதைத்தேன் விளைந்தது வார்த்தைகளென.. நான் விழுங்கிய விதை பூக்கிறது மௌனமாய்..

இது ரொம்ப பிடிச்சுருக்கு ...

welcome back ..
missing your சொல்லுவதெல்லாம் பொய் ..

Raja said...

வழமைகளில் இருந்து வேறுபட்டும் ரசிக்கும்படியுமாக இருக்கிறது...வாழ்த்துக்கள் ஆதிரன்...