எல்லாம் கிடைத்துவிடுகிறது
நொடிகளுக்குள்
ஒரு தீவு
பசிய ஒளியுடன் ஆம்பர் மணக்கும்
குளிர் மரங்கள்
ஆழ்கடல் கூட்டிச்செல்லும்
குட்டிதிமிங்கலம் பேசும்
நீலச்சுடர் கடல் கதைகள்
நிகழ்த்திய சாகசங்களுக்கு கிடைக்கும்
முடிவுறா கன்னி முத்தம்
ஒரு நாடு அல்லது இருக்கும் நாட்டின்
நிரந்தர அமைதியும் இனிய மாலை
ரோஜாக்காடுகளுக்குள் புணர்ந்து கொழிக்கும்
மனிதர்களும் தடைச்சான்றுகளை
கூளங்கலாக்கி எரித்துகுளிர்காய
மக்கள்களை அழைக்கும் மென்னரசு
எதைக்கேட்டாலும் தரும்
சக்தி கொண்ட
ஒரு கடவுள் அதனிடம்
ஒன்றும் வேண்டாம் என
அடம்பிடிக்கும் குழந்தை
புகையிலை மணக்கும் ஈரப்பெண்
நட்சத்திரங்களை கடக்கும்
அவளுடனான நீண்ட பயணம்
இன்னும்
இன்னும்
நிறைய கிடைக்கும் நொடிகளில்
நிறுத்தத்தில் எரியும் சிவப்பு விளக்கு
மாறும் வரை.
3 comments:
கனவுகளில் எல்லாமும் கிடைத்துவிடுகின்றன,,,நீண்ட நாளைக்குப் பிறகான கவிதை...நன்றாக வந்திருக்கிறது...வாழ்த்துக்கள் ஆதிரன்...
superb
என்னே பிரமாதமான கனவுத் தருணம்
Post a Comment