01 February, 2011

மூன்று முட்டாள் தருணங்கள்

1
14.09.2010 - 29.01.2011 - நாலரை மாத சென்னை வாழ்வு முடிவுக்கு வருகிறது நண்பர்களே.. பெரிதான மாற்றமேதுமில்லை. கிடைத்த அனுபவங்கள் எதிர்பாராதது. எப்பவும் போல சென்னை என்னை மிகுந்த சுனக்கத்துடனே அனுப்புகிறது.. இனிமே இந்த ஊருபக்கமே வரக்கூடாது என்கிற எண்ணம் புதிதாய் சோரம் போகிற ஆண் மனம் போல கிடந்தது குமுறுகிறது. சென்னையில் எனது அனுபவங்களுக்கு உதவிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள். எனது வேலைத் தளம் அடுத்தவாரத்திலிருந்து திண்டுக்கல்.. !
****************
2
'fish that fake orgasm' என்கிற நூலைப் படித்துவருகிறேன். மிருகங்களின் வினோத பழக்கவழகங்களை பற்றிய குறிப்பு நூலது. மேசையில் கிடந்த புத்தகத்தைப் பார்த்துவிட்டு orgasm - அப்படினா என்னப்பா என்று கேட்டான் மகன். லேசான தடுமாற்றத்துடன் அப்படினா glad ன்னு அர்த்தம்டா.. என்றேன். யாரிடம் போய் I am very glad - என்பதற்கு பதிலாக - I am very orgasm - என்று சொல்லப்போகிறான் தெரியவில்லை..! அப்பனுகளுக்கு வர சோதனைகள்தான் எத்தனையெத்தனை..!!
*****************
3
தேர்தல் காலம். மலடாக்கப்பட்ட மனித மனம் பற்றி புரியாமல் மக்கள் தங்களை ஆளுவதற்கு சில மனிதர்களை தேர்தெடுக்கும் வைபவம். உண்மை என்று இங்கு எதுவும் இல்லை. இருப்பதெல்லாம் வாய்மையே..! ஆம்.. வாய்..மை தான் வெல்லும்! தமிழ் சொற்களுக்கு பூடகமில்லை. இந்த வாய் மற்றும் மை சேர்ந்தால் கிடைக்கும் அதிகாரம் என்பது பணங்காய்ச்சி மரம் அல்ல தோப்பு.. ஆளாளுக்கு ஒரு மரத்தை சுவிசில் நட்டிருக்கிறார்கள்..! நாம் இங்கு தண்ணீர் ஊற்ற ஊற்ற மரம் பிச்சுகிட்டு வளரும்.. ! எனவே மக்களே நமது வாக்கு வாளியில் நமது வாழ்வெனும் நீரை நிரப்புவோம் .. ஊற்றுவோம்.. வளரட்டும் அவர்களது தலைமுறைகள்.. நாம் தெருவோரம் நின்று பஞ்சு மிட்டாய் காரனுடன் வியாபாரம் பேசுவோம்.
***********************

1 comment:

Raja said...

நல்ல பதிவு... வாழ்த்துக்கள் நண்பரே....