05 April, 2011

எப்போதும் குறையுள்ள வெளிச்சம்.

அவன்

குடிக்கிறான்


கூர்மையடைகிறது


அறிவு


அவள்


குடிக்கிறாள்


இளகுகிறது.


உடல்.


மேலும்


உடலுக்கு


எதிரானது


அறிவு


கொடுபவரின் நேர்மை அறிய


பெறுபவரின் ஒற்றை துரோகம்


போதும்


அவன்


திமிருடன்


வளர்ந்த


பெருமரம்


அவள்


அக்கிளைகளில்


பூக்கும்


தண்மீன்கள்



மேலும்


பறிப்பவர் நேர்மை அறிய


உண்பவர் முகபாவம் போதும்


அவன்


அவளை


சாட்டையால்


அடிக்கிறான்


அவள்


அவனுக்கு


வலியை


கொடுக்கிறாள்


மேலும்


திகைப்படைபவர் வாழ்விழக்கின்றனர்


பார்வையாளர்கள் காயடிக்கப்படுகின்றனர்


அவன்


அவள்


நெடுஞ்சாலை


முடிவுறும்


வனத்தில்


பசிய


இலைகளுக்கிடையே


இளம்பரிதி


மரத்தினை


காண்கிறார்கள்


வெளியெங்கும்


வீசுகிறது


மாம்சம்


பச்சை


வண்ணமாய்



அவன்


அவள்


மாயகணத்தில்


பொய்யாகி


மீள்கிறார்கள்


தெருசாலைகளில்


ஊளையிடும்


நாயின்


ஒலிவடிவில்


மெழுகு தீர்ந்த


திரி கருகும்


ஓசையில்


பிறக்கிறது ...





.............. மீசைக்காரன் நீட்ஷே நினைவில்.

1 comment:

க. சீ. சிவக்குமார் said...

தண்மீன்கள் எனும் பதம் - அது உயரத்திலும் இருப்பதான குறிப்பினோடு இணைந்து என்னை எங்கேயோ மாய வெளியில் ஒரு சிறூ கணம் கிடத்திவிட்டது.