24 May, 2011

மற்றொரு கல்.




நகம் கடித்துகொண்டிருந்தவனிடம்


அரும்பியது காதல்


காம்பின் குறுகுறுப்பை மறைக்க


உதடு கடிக்கையில் உணர்ந்தேன்


குருதியின் முதல் சுவையை


அடுக்கி வைக்கப்பட்ட


நேர்த்தியான புத்தகங்களில்


அற்ற சொற்களை உடலெங்கும்


ஊரசெய்தான்


விடியலின் தூரத்தில் வெடித்த


வெடிகளின் சத்தத்தில்


உடம்பில் பூத்தன நீலம்..





குளமென மாறிய எனதுள்

அவன் எறிந்தது மரணத்துக்கான ...




2 comments:

peaikaaman said...

நண்பரே ! உண்மையிலேயே இதை கவிதை என்று நம்புகிறீர்களா ?

adhiran said...

கவிதை என்று சொல்லவே இல்லை. அது எனது மன அழுத்தத்தின் விளைவாக நேர்ந்த வரிகள். தீதும் நன்றும் என்கிற பிரிவில் அதை பதிப்பித்துள்ளேன். நீங்கள் கவிதை என்பதை எப்படி வரைமுறை செய்கிறீர்கள் ?