சிற்றிதழ் தொடங்குகிறேன். அக்டோபர் நான்காம் வாரம் வெளியிட எண்ணம். விரும்புகிறவர்கள் கட்டுரைகள் மட்டும் அனுப்பலாம். விளம்பரம் கிடையாது. சந்தா கிடையாது. வருடத்திற்கு மூன்று இதழ்கள். 'கிரந்த' போன்று தரமான புத்தகமாக வெளியிட எண்ணம். பேராசைதான். என்ன செய்வது. உயர்வுள்ளல்! ஆதரவு கோருகிறேன். நன்றி.
**************
கடந்த மூன்று வாரங்களாக கழுத்து - முதுகெலும்பில் வீக்கம் ஏற்பட்டு கடும் வலி உணர்வை சமாளித்து வருகிறேன். உடம்பில் கூடவே இருக்கும் வலி என்பது வினோதமான ஒரு ஆன்மீக பயணமாக இருக்கிறது. சில நேரங்களில் அது ஒருவித போதை நிலையை அளிக்கிறது.மேலும் வாழ்நாளில் இல்லாத அளவிற்கு தூக்கத்தில் கனவுகள். நேற்று மதியம் தூக்கத்தில் ஒரு முழு திரைப்படத்தை பார்த்து ரசித்தேன். பழங்குடி கிராமம் ஒன்றில் பேசும் காட்டெருதுகள் நுழைந்து துவசம் செய்கிறது. அதன் தலைவனை மர ஈட்டியால் குத்தி கொல்கிறான் கிராமத்தின் தலைவன். என்னாமா எடுத்திருக்காங்க படத்த ! மருத்துவர்கள் என்னை நான்கு விசயங்களுக்கு தடை செய்திருக்கிறார்கள். 1. இரு சக்கர வாகனம் ஓட்ட கூடாது. 2. பயணம் செய்ய கூடாது 3. கணினி பக்கம் போகக்கூடாது 4. படிக்கக்கூடாது. என்ன வாழ்க்க சார் இது ?!
இன்றுடன் 19 நாட்கள் ஆகிவிட்டது. கூடவே இருந்த ஒரு இனிய காவலாளி இன்று பள்ளிக்கூடம் சென்று இருக்கிறார். மேட்டரை தட்டி விட்டேன் !
**********
No comments:
Post a Comment