20 May, 2010

சுவரில் வாழும் ஜன்னலின் தனிமை - 1

*****************

இடைவிடாத பிரசவ வேதனை உங்கள் உலகம். மரணம் மட்டுமே அதன் ஒரே மருத்துவச்சி- மிர்தாதின் புத்தகத்தில் மிகைல் நைமி.

*****************
என் முன்னாள் இரண்டு விருப்பத்தேர்வுகளை எனது கடவுள் வைத்தான். ஒன்று கொலை மற்றொன்று தற்கொலை. நான் கொலையை தேர்வு செய்த ஒவ்வொரு முறையும் எனது தற்கொலையில் முடிந்ததது, மாறாக ஒரே ஒரு முறை நான் தற்கொலையை தேர்ந்தெடுத்த போது என் கடவுள் என்னைக் கொலை செய்தான்.
******************
அழகிய குளத்தின் முன்னால் நிற்கிறேன். மெல்லிய தென்றலில் ஏற்படும் சிற்றலைப்பரவல்கள் தவிர அமைதியாக இருக்கிறது குளம். சலனமற்றிருக்கிறது என என்னை நம்பவைக்கிறது. ஏனென்றால் அதனடியில் ஒரு பூகம்பமோ அல்லது ஒரு எரிமலைக் குழம்போ இல்லையென அந்த அமைதியின் மூலம் அந்த குளம் என்னிடம் சொல்லுவதாகப்படுகிறது. தென்றலை ரசிக்கும் அமைதியான குளம். அதை எனக்குப் பிடிக்கவில்லை. ஆம், அமைதியும் அழகும் சேர்ந்த அந்த குளத்தை நான் வெறுத்தேன். எனவே நான் என்னாலியன்ற அளவு பெரிய கல்லை எடுத்து அந்த குளத்தில் எறிந்தேன். கணத்துக்குள் கல் நீரில் நுழைந்து ஆழத்தில் அடங்கியது. அதே நேரம் குளம் கலங்கத்தொடங்கிவிட்டது. கலங்கிய குளம் எவ்வளவு அழகானது. ஆதூரம் மிகுந்தது. அதன் ஒவ்வொரு துளியும் எவ்வளவு தூய்மையானது. அதன் படைப்பூக்கம் எவ்வளவு உறுதியானது. எனது மகிழ்ச்சி நிலைகொள்ளவில்லை. என் முன்னால் தெரியும் அனைத்து குளங்களிலும் கல்லைப்போட தொடங்கினேன்.

*********************

ஒரு முறை இறந்து விடுங்கள் இதைப் படிப்பதற்கு முன்னால். அப்படி இறக்க முடியவில்லைஎன்றால் இதை தொடர்வதை நிறுத்திவிட்டு வாழப்போய்விடுங்கள். ஒரு முறை இறந்தவர்களுக்கு மட்டுமே இனிவரும் வரிகளும் அதன் அர்த்தங்களும். ஒரு முறை இறக்க பயம் கொண்டவர்கள் இந்த வரிகளை காகிதத்தில் அச்செடுத்து அந்த காகிதத்தை உங்கள் கழிப்பறையில் தொங்கவிடுங்கள். நீர் கிடைக்காத சந்தர்ப்பங்களில் உங்களுக்கு உதவக்கூடும். மீறிப் படிப்பவர்கள் ஒரு வேளை உற்சாகத்தால் தெருவில் நிர்வாணமாக ஓட நேர்ந்தால் அது நள்ளிரவு நேரமாக இருக்கவேண்டுமென நான் பிரார்த்திக்கிறேன்.

**************************

எல்லோரும் அறிந்த ஒரு ஜென் கதையுடன் தொடங்கலாம்.

சீடன்: அந்த மலையுச்சியை அடைய எங்கிருந்து தொடங்கவேண்டும் குருவே? குரு: மலையுச்சியிலிருந்து.

சீடன்: மலையுச்சி என்றால்? குரு: மரணம்.

எனவே நான் மரணத்திலிருந்து தொடங்குகிறேன். அதற்கு முன்னால் ஒரு விஷயத்தை நான் பதிவு செய்கிறேன். நமது மூளையின் புரிதல் திறன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய் இருக்கிறது. இந்தியாவில் நூறு கோடிப் பேர் என்றால் நூறுவிதமான புரிதல் திறன். நான் எழுதுபவைகளை நான் புரிந்து கொண்ட வண்ணம் படிப்பவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் என தெரிந்தே இருக்கிறேன். நான் நினைத்தவாறு புரிந்து கொள்ள அவசியமில்லை என்பதையும் நான் அறிவேன். அதான் எனது புரிதல்களை சொல்லும் போது உங்களுக்கு ஒவ்வாமை உணர்வு ஏற்பட்டால் தயவுகூர்ந்து என்னை மன்னித்து விட்டு வேறு வேலையைப் பார்க்க கிளம்புங்கள். அதுபோல இந்த கட்டுரையில் நான் விவரிக்கும் அனைத்து ஆண்களுக்கும் கிருஷ்ணன் என்ற பெயரையும் பெண்களுக்கு ராதை என்கிற பெயரையும் உபயோகப்படுத்துகிறேன். இப்பிரபஞ்சத்தில் மேற்படி பெயர் கொண்டவர்களுக்கும் இதில் வரும் ராதை - கிருஷ்ணனுக்கும் துளியும் தொடர்பில்லை.

இனி மூன்று கிருஷ்ணன்கள் இரண்டு ராதைகள் மரணத்தை பார்ப்போம் உதாரணத்திற்கு.

கிருஷ்ணன் ஒன்று: நாற்பத்தியேழு வயதில் கொடைக்கானல் - பள்ளங்கி சாலையில் ஒரு மரக்கூட்டத்திற்கு நடுவில் ஒரு தாழ்வான கிளையில் கையிற்றை கட்டி தனது கழுத்திலும் கட்டி குதித்ததில் குரல் வளை இறுகி இறந்து போனான்.

ஒரு கிருஷ்ணனும் ஒரு ராதையும்: கண் முன்னால் வாகனத்தில் இடிபட்டு இறந்தவனைப் பார்த்து பயத்திலும் அதிர்ச்சியிலும் மயங்கிச்சரிந்தவள் இறந்து போனாள்.

மூன்றாவது கிருஷ்ணன் வாழைப்பழமும் பாலும் குடித்து விட்டு நிறைவாக தூங்கியவன் மாரடைப்பு ஏற்பட்டு தூக்கத்திலேயே உயிர் விட்டான்.

இரண்டாவது ராதையை ஒரு வன்புணர்ச்சி செய்யும்போது அவனது இயக்கத்துக்கு தோதாக அவள் கழுத்தை பிடித்துக்கொண்டான். அவனது இயக்கம் முடிவடையும் ஊழிக்கு முன்பே அவள் உயிர் விட்டிருந்தாள்.

இப்போதைக்கு வன்புணர்ச்சி செய்த கிருஷ்ணனை உயிரோடு விட்டுவிடுவோம். மற்ற மூன்று க்ரிஷ்ணன்களும் இரண்டு ராதைகளும் இப்போது உடல்கள். அவைகள் க்ருஷ்ணன்களோ ராதைகளோ அல்ல. மரணித்தவர்கள் என்கிற ஒன்றில் அவர்கள் ஒற்றுமை அடைந்து விட்டார்கள்.

மரணம் ஒரு முற்றுப்புள்ளி. எவ்வளவு அற்புதமாய் இருக்கிறது இதைக் கேட்பதற்கு. மரணத்திற்கு பின் ஒன்றுமே இல்லை. பிறப்பதற்கு முன் மனிதனுக்கு ஒன்று இருக்கிறது. ஆதி உள்ளுணர்வு என்கிற ஒன்று. அது பற்றி பின்னால் பார்ப்போம்.

மரணத்திற்குப் பின் ஒன்றுமே இல்லை என்கிற ஒரு எளிய மகிழ்வு தரக்கூடிய உண்மையை நான் புரிந்து கொண்டேன். அது எனக்கு மகிழ்ச்சி. எப்படி இந்த தீர்மானம் எமக்குள் வந்தது. அதற்கு முதலில் உயிர் என்ற உடலியக்கத் திறன் முடிவுற்றதும் கிருஷ்ணன் மற்றும் ராதையின் உடல்கள் என்னவாகின்றன என்று சில மருத்துவ ரீதியான தரவுகளை solkiren.

***************

அடுத்த பதிவில்.

***************************************************************************

இந்த கட்டுரையின் தலைப்பு ஒரு ஹிந்தி நாவலில் இருந்து சுடப்பட்டுள்ளது.

*****************************************************************************

6 comments:

கபிலன் அருணாசலம் said...

manam ganakkirathu

Nathanjagk said...

வித்யாசமான விறுவிறுப்பு!
இருப்பு:இறப்பு என்ற விகிதத்தைதாண்டி
இருப்புக்கு முன்:இறப்புக்குப் பின் என்ற அளவையில் நல்லாயிருக்கு ஆதிரன்!
வாங்க செத்து செத்து வெளாடலாம் :)))))))

par said...

At this rate, the day is not far when you will have more templates than posts :)

பத்மா said...

முதலில் தலைப்பு ...
ஜன்னலின் தனிமை .....
இதுவே ஆயிரம் கதை சொல்கிறது ......
அதில் இரண்டு வளைக்கரங்கள் சேர்ந்தால்?


மரணத்திற்கு பின் ஒன்றுமே இல்லை தான் ....மரணம் அடைந்த மனிதர்களை நோக்கும் போது பல சிந்தனைகள் மனதில் ஓடுவதை தவிர்க்க முடியாது தான் .இந்த உடலில் உள்ள வாய் தான் புன்னகைத்து ! கை தான் அணைத்தது மனம் தான் விரும்பியது ..இப்போது அந்த மனம் எங்கே போயிருக்கும்? அப்போது உடல் இறந்தால் மனமும் இறக்குமா? மனது சாகுமா? அப்போது உடல் நிலை என்ன ? உடலுக்கும் மனதுக்கும் சம்பந்தம் உண்டென்றால் மனதின் மரணம் எப்போது? மரணம் ஒரு ஆச்சரியமான விஷயம் தான் ..
மேலும் எழுதுங்கள் .....

குளங்களை சலனிக்க வைப்பது சந்தோசம் தருவதாலா? இல்லை சலனமற்றிருப்பது பொறுக்காமல் போனதாலா ?

adhiran said...

thanks

padma
jagan
parth
kabilan

:-))

பத்மா said...

ஒரே ஒரு முறை நான் தற்கொலையை தேர்ந்தெடுத்த போது என் கடவுள் என்னைக் கொலை செய்தான்.

ஐயோ பாவம்ன்னு சொல்லலாமா ?:))