03 June, 2010

காணாப் போனோம் கண் விழித்தோம்.

சாணி போடுற யானை காணோம் தினம்

கோணி தைக்கிற ஆணை காணோம் தினம்

கேணி இறைக்கிற பெண்ணை காணோம் தினம்

வாணி கொடுக்கிற அன்னம் காணோம் - அதி

வானம் தெரிகிற பூமி காணோம் வழி

பானம் கேட்டிடும் ஞானம் காணோம் வழி

மோனம் தேடும் வேழம் காணோம் வழி

தானம் கேட்கும் தாளம் காணோம் - வழி

சோளம் விளைக்கும் மூலம் காணோம்

மேளம் முழங்கும் பானம் காணோம்

தாளம் இழந்த விந்தம் காணோம்

கூளம் குவியும் சாலை காணோம் - தினம்

அன்றில் என்றொரு பறத்தல் காணோம் அவை

குன்றில் அலைந்திடும் நேரம் காணோம் சில

முன்றில் நிலைத்திடும் வீரம் காணோம் கணம்

அன்றில் முளைத்திடும் விண்ணைக் காணோம் - பகை ஆக

புன்னை என்றொரு சுரத்தை கண்டோம்

தென்னை என்றொரு மரத்தையும் கண்டோம்

புன்னை என்றொரு நிலத்தையும் கண்டோம்

தொன்னை என்பதை கேவலம் என்றோம் - அன்றில்

நன்றென்று நாமத்தை வணங்கிடுவோ மோ

புன்னை நிலமென்று நாமத்தை வணங்கிடுவோ மோ

தென்னை மரமென்று நாமத்தை தூற்றிடுவோ மோ

பொன்னை தரமென்று அனைத்தும் அளந்திடுவோ மோ.

**********************************************

நான் எனது நிலையை இழக்க தேவையான அளவு குழம்பிவிட்டேன்.மேற்கண்ட கவிதையை தெளிவான பொருள்கொள்ளும் மனங்களை நான் வணங்குகிறேன். பொருள் கூற விளம்புகிறேன்.

****************************************************************

5 comments:

பத்மா said...

:)

வசுமித்ர said...

எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். முற்றும்.

adhiran said...

urupadiyaana pinnoottam vasu. thanks.

padma :-0

கபிலன் அருணாசலம் said...

ஆதிரன், என் மனதில் உள்ளதை நிழல் படம் எடுத்து விட்டிர்களோ? ஆழமான கருத்து. மென்மேலும் எழுத்து பணி சிறக்க வாழ்த்துக்கள்.

par said...

நல்லாத்தானே போய்ட்டு இருந்துச்சு? :)