20 June, 2010

அந்தகம்


1
இளவனமூங்கில் பச்சையில் கசியுமுனது ஈரம் பிரிக்கிற வாசம். தனரேகை விம்மியவழியடைத்து இடைவெளி தேடித்தவிக்கிறது சுவாசம். சொட்டுச்சொட்டாக ஊசியிலைமுனைகளில் திரள்கிறது உயிர். கனியென பறித்தெடுத்துண்ணும் வாய்வழி கோரைப்பற்கள் நீள்கிறது உதடு கிழித்து. நெகிழ்நிலமாகிறது உடலமெனும் சொல் விருட்சம். சதுப்புகளில் கால்பரப்பி சிலிர்த்து பிளிறுகிறது களிர். பேயரவம் உணர்ந்து துளையூருகிற புற்றீசல்களின் ரெக்கைகள் மிதக்கின்ற ககனம் துண்டுகளாய் சிதற வெளியெங்கும் குவிகிறது பாதரசப்புழுக்கள். பொழிந்த காற்றை உறிஞ்சும் நுண்துளை சருமம். நிமிர் ரோமக்காட்டின் களிப்பிரவாகம். தகனத்தில் பூத்த நெருப்பை விழுங்கும் நாபி.
2
இருளற்றது கானகம் கொள்பட்சிகள். வெளிச்சமும் அற்றது அவைகள். உன் சருமவெளிர்மென்வெண்மை போன்றவைகள் அவற்றின் துளிர் இறகுகள். மற்றவைகள் பறக்கும். இவை மிதக்கும். அடர்கானகத்திற்கு வெளியும் இல்லை அவை உள்ளும் இல்லை. நெகிழ்ந்துகுழைவானவுன் தேகம்போல அவை மிகமிருதுவானவைகள். விழியற்றவைகளுக்கு திசையுமில்லை வழியுமில்லை. உன் பூர்வ வாசம் போதும். அவைகளுக்கு நான் என்று பேர். நித்தியவெளிச்சத்தில் உன்னை இலகுவாய் தொடரும் அன்றில் வீழ்ந்து மடியும்.

3
விழியெல்லாம் வெளிச்சம். அந்தகம் சுகம். சூன்யம்.

*************

3 comments:

பத்மா said...

பாதரச புழுக்கள் .....அருமை

நெருப்பை விழுங்கும் நாபி ....விழுங்கி?

அந்தகம் மட்டும் சுகம் இல்லை ..அதை புரிந்து காத்திருத்தலும் சுகம் தான் ..

ஏ அப்பா பயமாத்தான் இருக்கு.

Unknown said...

வித்தியாசமான அனுபவம்.
நன்றி :)

adhiran said...

why fear padma?

thanks arumugam. keep read and say something. thanks a lot.