**********************************************************
template change play maniya (TCP Maniya) என்கிற மர்மமான நோயினால் பீடிக்கப்பட்டுள்ளேன். மருந்து சொல்லுங்கள்.
***********************************************************
கீழே இருப்பது எனக்கு மிகப்பிடித்த கவிதைகள்: முதல் கவிதை யூமா வாசுகியால் எழுதப்பட்டது. இரண்டாவது மலையாள கவிஞர் என். ஜி. ராதாக்ருஷ்ணன் எழுதியது. மிக மிக அற்புதமான சலனங்களை ஏற்படுத்திய கவிதைகள்.
ஒரு மனிதன் முயலாக.
ஸ்கர்ட்டின் கீழ்விளிம்பை கடித்தபடி
ஜட்டி தெரிய வாசலில் நிற்கிற
சிறுமி புவனா கேட்கிறாள்
முயல் என்ன செய்கிறது
அவளை கவர்வதற்காக
அறையினுள் ரகசியமாக
ஒரு முயல் வளர்பதாக சொல்லியிருந்தேன்
முயல் சாப்பிடுகிறது
எனும் பதிலில் திருப்தியுற்றவளாய்
விளையாடப் போனாள்
எங்கே முயல் காட்டுபார்க்கலாம்
என்று அடுத்தநாள் வந்தால் ஆப்பிளைக் கடித்தபடி
பெரியமுயல் கடித்துவிடும் என்று சொல்ல
சந்தேகச் சிரிப்புடன் வெளியே போனாள்
அவள் சொல்லித்தான் முயல் வளர்ப்பது
மற்ற சிறுவர்களுக்கு தெரிந்தது
வாசலில் கூட்டமாய் வந்து நின்று
என்ன செய்கிறது முயல் என்பவர்களுக்கு
பலதடவைகள் அறைக்குள் எட்டிப்பார்த்து
முயல்பற்றிய நிலவரத்தை சொன்னேன்
நாளாக
அப்படியொரு முயல் இங்கே இல்லை எனும்
உண்மை புரிந்தாலும் நான்
வீட்டை பூட்டி புறப்படும்போது
புவனா கேட்கிறாள்
முயல் எங்கே போகிறது..?
அப்பாவும் நாயும்
என்னைக்காணும் போதெல்லாம் கன்னங்களை இறுக்கிக்கொள்ளும் அப்பா
ரப்பர் பந்து பிதுங்குவது போல முகம் நெளிய புன்னகைத்து
ஒரு நாயை நேசித்திருந்தார் முன்பு.
சோற்றுருண்டை தந்தும் அவ்வப்போது உதைத்தும்.
என்னை விரும்பாத தந்தை
நாயை நேசிக்க காரணமென்னவோ
இன்று புரிகிறது எனக்கு
சோறு கொடுத்து வள்ளல் ஆகலாம்
உதைதந்து அதிகாரம் கொள்ளலாம்
நாயும் வாலாட்டும்
மனிதக்குழந்தையை வளர்ப்பது சற்று சிரமம்
வெள்ளைச் சிமிட்டிச் சுவரில்
கரியால் அவன் ஒரு படம் வரைந்து வைப்பான்.
************************************************
5 comments:
vasu keeps talking about this poetry often...
மீள்வாசிப்பிலும் முயல் துள்ளுகிறது. நன்றி மகி!
ராதாக்ருஷ்ணன் - புதுசு.
டெம்பிளேட்டுகளை மாற்றுங்கள். வியாதி அல்ல விளையாட்டுதான்.
சில கட்டுப்பாடுகள் எடுத்துக்கொள்ளலாம்.
1. நம் எழுத்துக்கு தக்க டெம்பிளேட் முக்கியம் (அசப்பில் போர்னோ சைட் போல தோன்றுவதைத் தவிர்க்கவும். சில போர்னோ சைட்டுகள் கருநிற பின்னணி கொண்டவை)
2. நமக்கென்று ஒரு வர்ணம் அல்லது பல வர்ணங்கள் என நிறுவிக்கொள்ளலாம். வர்ணக் கூச்சல் கண்களை மட்டும் குழப்புவதில்லை (காலடியில் நான் பயன்படுத்துவது இரண்டே வண்ணங்கள்தாம் - சாம்பல் மற்றும் ஊதா)
3. நல்ல வலைத்தளத்தின் அடையாளங்கள் சில:
3.1. குறைந்த எடை (கண்டமேனிக்கு விட்ஜெட்கள் (widgets / gadgets) சேர்த்து லோடிங் டைம்மை அதிகம் செய்யக்கூடாது)
3.2. எளிதான நடை (easy navigation - வாசகர்கள் பெரிதும் பயன்படுத்தும் லிங்குகள் முதலில் வருவது. மற்றவை கடைசியில்)
3.3. நம்பகத்தன்மை (நம் காசுக்கோ அல்லது நேரத்துக்கோ இது குந்தகம் தராது என்ற எண்ணம் வாசகர்களிடம் ஏற்படவேண்டும்)
3.4. தள அமைதி (குறுக்கும் நெடுக்கும் ஓடுகிற வாசகங்கள் அல்லது திடீரென தோன்றுகின்ற பாப்-அப்கள் இல்லாமல் இருப்பது)
4. எழுத்துரு (font) மற்றும் அவற்றின் அளவுகள் (font size) ஒரே தரத்தில் இருப்பது நன்று
5. பின்னணி மென்மையான வண்ணத்தில் இருக்குமானால் எழுத்துக்கள் அடர்வான நிறத்தில் இருத்தல் நலம் (மஞ்சள் நிற பின்னணியில் வெண்ணெழுத்துக்களை வாசிக்க முடியாதல்லவா? அதேபோல் கீழ்க்கண்ட நிறப்பிணைப்புகளைத் தவிர்க்கலாம்
பின்னணி நிறம்-எழுத்து நிறம்
ஊதா - கருப்பு
வெள்ளை - மென்ஊதா
சிவப்பு - கருப்பு / ஊதா / பழுப்பு
பழுப்பு - கருப்பு
6. வலைப்பூவின் எதிர்பார்ப்புகள், தகுதிகள் மற்றும் சாத்தியங்கள் புரிந்து கொண்டு தளத்தை வடிவமைத்தல் சிறப்பு
6.1. கம்யூனிஷம் தான் உங்கள் பிரதான நிறுவல் என்றால் சிவப்பு நிற அடிப்படையை தவிர்க்க முடியாது
6.2. வானம் என்று பெயர் கொண்ட வலைப்பூவுக்கு ரோஜா பூநிறத்தில் பின்னணி அமைப்பதை விட ஊதா நிறம் உகந்தது
6.3. படிப்பவர்களில் வயதானவர்கள், பார்வை குறைப்பாடுகள் (நிறக்குருடு உட்பட), மற்றும் சிறுதிரையில் பதிவைப் படிப்பவர்கள் (செல்போன் மாதிரி) செளகர்யங்களை கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்
6.4. வலைத்தளம் ஒரே வடிவமைப்பில் இருந்தால் அலுத்துப்போக வாய்ப்புண்டு. இதைத் தவிர்க்க அவ்வப்போது சில மாறுதல்கள் கொண்டு வரலாம். சடாரென வானவில் பின்னணியில் இருந்து பீரங்கிகள் அணிவகுப்பு பின்னணிக்கு மாற்றுவது வாடிக்கையான வாசகர்களுக்கு அதிர்ச்சியளிக்கலாம்
6.5. ஒவ்வாமை ஏற்படுத்தும் நிறங்களைத் தவிர்க்கலாம் (மென்சிவப்பு பின்னணி, சிவப்பு பின்னணி போன்றவைகள்)
6.6. நாம் எழுதுவது மட்டும் கருத்தல்ல; வலைப்பூவின் வடிவமைப்பே ஒரு கருத்துதான்.
6.7. படிப்பவர்கள் வசதி, காலமாற்றம், ஊடக மாற்றங்கள் மற்றும் நடைமுறை கருத்துக்கள் போன்றவற்றுக்கு ஏற்ப வடிவமைப்பில் அவ்வப்போது புத்தாக்கம் செய்யவேண்டும் (சமீபத்திய உதாரணம் சாருநிவேதிதா வலைத்தளம் :)))
7. கண்களுக்கு கனிவான வலைத்தளம் என்பது அதன் எளிமையான தோற்றத்தால்தான் சாத்தியமாகிறது என்ற புரிதல் அவசியம்
8. இலவசமாகக் கிடைக்கிற காரணத்தால் டெம்பிளேட்டுகளை அடிக்கடி மாற்றுதல் கருத்தியல் ரீதியான நம் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும்
9. முக்கியமாக, இடுகைகளுக்குப் பயன்படுத்துகிற படங்கள் காப்பி ரைட் பிரச்சினையில்லாமல் இருக்கிறதா எனக் கவனித்துப் போடவும்
10. அதிமுக்கியமாக, நம் வலைப்பூவின் வடிவமைப்பு கட்டுப்பாடு மொத்தமும் நம் கைவசம் இருக்கிறதா என்பது முக்கியம் (சிறு மாறுதலுக்குக் கூட அடுத்தவரை நம்புகிற நிலை இல்லாமல் இருக்க வேண்டும்)
இது உங்களுக்குப் பயன்படும் என நம்புகிறேன். கண்ணுக்கு(ம்) கனிவான வலைப்பூவாக ஆதிரன் திகழ என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!!
//இலவசமாகக் கிடைக்கிற காரணத்தால் டெம்பிளேட்டுகளை அடிக்கடி மாற்றுதல் கருத்தியல் ரீதியான நம் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும்//
I will try to not play again. thanks jega.
thanks kotravai. we know that.
ஜகன் இந்த பின்னூட்டம் எல்லாரும் படிக்க வேண்டியது.அருமையாக ideas சொல்லி இருக்கிறீர்கள் .
ஆதிரன் ரசித்த கவிதைகள் அருமை...
உங்கள் மனதுக்கு இசைந்த படி வரும் வரை மாற்றிக்கொண்டே இருக்கலாம் .இது வெறும் டெம்பிளேட் தானே ?:))
Thanks Adhiran.
Thanks Padma..
If you like, I will post this comment in my blog.
Post a Comment