ரமேஷின் வருகையும் பார்த்திபனின் கவிதையும் என்னை புளங்காகிதப் படுத்தியது. நன்றிகள். பார்த்திபன் தொடர்ந்து எழுத என் தளத்தை உபயோகப்படுத்தினால் பெருமகிழ்ச்சி.
********************
போரடித்த களிர் பாத தடமது நான்
பாரழித்த பெருவூழிச் சுழலது நான்
தேரழித்த கருங்காலன் சைதன்யம் நான்
காரழித்து வீழ்ந்தோங்கும் புனலது நான்
ஏலாதெனை மறக்க வென்றாள் அச்சிறுமி
கோலாட்ட முனைப் பார்த்தசையும் சர்ப்பம்போல்
நூலாடும் சிலந்திவலை பதுங்குமது விழி
சேலாடும் செருக்கோடு கான் மறைந்தாள் காண்
உருக்குலைவேனினி மதிகெட்டு உடல்விட்டு
கருநுழைவேனினி நுதல் தட்டி விழிமூடி துகள்துகளாய்
துருவாவேனினி வானேறி இருள் தாளின் வெளிச்ச
மருவாவேனினி எந்நாளும் புள் கொத்தும் புழுவாவேன்.
***********
2 comments:
Thankas for your invitation. But writing has almost become a past thing for me. This one was my first 'kavithai' in 16 years. I hope it won't take me another 16 to write again.
அருமையான கவிதை ஆதிரன்
படிக்கும் போது வார்த்தைகளின் ஜாலம் மனதை கவர்கிறது..
கவிதைகள் இரு விதத்தில் மனம் பற்றும்
ஒன்று கருத்து..அதனுடன் ஒத்து போகும் போது நம் மனதுக்கு பிடித்ததாய் ஆகிறது .மற்றொன்று வார்த்தை ..வார்த்தைகளின் கட்டமைப்பு பிரமிப்பு ஊட்டும்
..அந்த பிரமிப்பு இங்கு இப்பொழுது எனக்கு ..
Post a Comment