நுதல் மறைத்த குழல் ஒலிக்கும் மணம் அக்கணம் விரியும் அளம் அரித்த விழிக்குளம் வளம் குறையா காயநிலம் நெகிழும் மனம் குழைவிதழ் பூக்கும் நிறம் கீழ்வானின் குணம் ஒற்றை மூச்சு பாலை வெப்பம் கந்தகமடங்கும் உமிழ்நீர்கடல் வெளியேறி விசும்பில் துடிக்கும் உயிர் தெறித்து விழும் திசையற்ற சேலுடலம் விளித்து நிலைக்கும் அகண்ட கருவிழிப் படலம் கொல்வன்மம் கொண்டலையும் நீள்விரல் நகநரிகள் சொல்விசம்பரித்த திண்பல்வரிசை கிழித்தெறியும் கங்குபொறி வேட்கை நன்குசொல் நன்குசொல்லென நாபி துப்பும் ஒலிக்குழப்பம் தீராது தீராது தீராதுயிர் தாகம் புனலூரும் வனமுன் முன் நிலம் வீழும் தொழும்.
3 comments:
பாலையைக் கூறும் பாவையின்... வார்த்தைகளின்றி...மெளனமாய்
mudiyala
நன்றி ஆதிரா வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.
என்ன ரமேஷ் ஒரு வார்த்தையோட நிறுத்திட்ட.. நிறைய சொல்லணும்... !
Post a Comment