பற்றிக்கொண்ட ஒவ்வொன்றும் இற்றுப்போகச்செய்கிறது விரல் நுனிகளை. மீட்பர் இருக்குமிடத்தில் பாவம் என்பது கடமையெனவே விரிகிறது வாழ்வு. கைகளை விரித்து பூமியை அணைக்கிற அன்பிருக்குமிடத்தில் பிரம்பெடுத்து விளாசுகிறது வன்மங்களின் குழந்தை. ஒற்றை நூலில் உருவாக்க முடிகிற அனைத்தையும் ஒற்றை இழுவையில் அவிழ்த்து விடுகிற நுட்பம் தெரிந்தே இருக்கிறது வாழ்விற்கு. நன்று தேவனே அவர்களுக்கு தங்களது வாகனத்தின் பின் இருக்கையில் யாரை அமரவைக்கவேண்டும் என்று தெரிந்தே இருக்கிறது. அமர்ந்தவர்களை எங்கு இறக்கிவிடவேண்டும் என்கிற ரகசியத்தை வைத்துக்கொண்டு அலைகிறேன் நான். இல்லாத ஒன்றிற்காக உன்னில் அறையப்படும் ஆணியின் மீது இயங்கும் சுத்தியலாக நானிருக்கும்போது நீ என்னை மன்னிப்பாயா .... தேவனே.
20 August, 2010
செய்வாயா தேவனே

Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
//இல்லாத ஒன்றிற்காக உன்னில் அறையப்படும் ஆணியின் மீது இயங்கும் சுத்தியலாக நானிருக்கும்போது நீ என்னை மன்னிப்பாயா .... தேவனே//
வலியை உணர்த்தும் வரிகள்..... !
unga blog nalla irukku boss
thanks
kousalya and karthik.
Good one.
இல்லாத ஒன்றிற்காக உன்னில் அறையப்படும் ஆணியின் மீது இயங்கும் சுத்தியலாக நானிருக்கும்போது நீ என்னை மன்னிப்பாயா .... தேவனே.
அருமை.... அருமை.... வாழ்க உங்களின் எழுத்து...
thanks jeyaseelan.
chip on the shoulder என்று கூறுவதுண்டு ...
அன்பும் வன்மையும் சேர்ந்து தான் வாழ்வு ...
ரகசியம் தெரிந்தால் ,ஒற்றை இழுவையில் அவிழ்க்காமல் ஒரு முடி போட்டு வைத்து கொண்டிருப்பது தான் வாழ்கையின் ருசி...
ஒற்றை நூலில் உருவாக்க, ஒப்புவமையும் ,ஒரே stroke இல் வரைந்த படமும் மிகப் பொருத்தம் ..
//இல்லாத ஒன்றிற்காக உன்னில் அறையப்படும் ஆணியின் மீது இயங்கும் சுத்தியலாக நானிருக்கும்போது நீ என்னை மன்னிப்பாயா .... தேவனே. //
ஒரு இழையால் தொங்கிக் கொண்டிருக்கும் வாழ்வின் நிலையறியா வக்கிரம் காட்டும் வரிகள்..மனம் நிறைந்தது...
Post a Comment