அகவன் மகளே யகவன் மகளே
மனவுக்கோப் பன்ன நன்னெடுங்கூந்தல்
அகவன் மகளே பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டே. அவர்
நன்நெடுங்குன்றம் பாடிய பாட்டே
*************************************** குறுந்தொகை 23 - அவ்வையார்.
பாடு பெண்ணே குறிசொல்லி
சங்குவெண் கூந்தல் பெண்ணே பாடு
மீண்டும் மீண்டும்
தலைவியின் பசலைக்கு
வேரானவனின் சிறப்பைக் குறித்தே
பாடு.
*****************************************
முட்டு வேன்கொ றாக்கு வேன்கொல்
ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்
டாஅ வொல்லெனக் கூவு வேன்கொல்
அலமர லசைவளி யலைப்பவென்
உயவுநோ யறியாது துஞ்சு மூர்க்கே. ************************************************ குறுந்தொகை 28 - அவ்வையார்
காதலன் அருகிலில்லாமல்
நான் படும் வேதனையை
அறியாமல்
சுழன்று வீசும் தென்றலின் பின்
இனிதாக உறங்கும் ஊர்பயல்களை
முட்டிக் கொல்வதாஅன்றி தாக்கிக்
கொல்வதாவென அன்றிலும் ஐயோவென கத்துவதாவென.... அறியேன் நான்
*************************************************************
8 comments:
சங்கு வெண் கூந்தல்?
எப்படி?
ஊர் பயல்கள் :))))
பாவம் அவர்கள் என்ன செய்ய முடியும் ?
முட்டுவேன் கொல் தாக்குவேன் கொல்
ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு
‘ஆஅ!ஒல்’ எனக் கூவுவேன் கொல்
அலமரல் அசைவளி அலைப்ப, என்
உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே.
- ஒளவை.
எங்கேயாவது முட்டிக்கொள்ள வேண்டும் போலிருக்கிறது. ஒரு கம்பை எடுத்து என்னையே நாலு அடி போட்டுக்கொள்ளத் தோன்றுகிறது. ஆத்திரம் தாங்காமல் ஓவென்று கத்த வேண்டும் போலிருக்கிறது. இந்தக்காற்றும் என் காமத்தைப் பெருக்கி தூங்கவிடாமல் அடிக்க, இந்த ஊரார் மட்டும் என் நோவு அறியாமல் தூங்குகிறார்களே.
கொங்குதேர் வாழ்க்கை.
விளக்கம் எஸ். சிவக்குமார்.
மகி உங்களது கவிதையை நீங்கள் பெயர்த்தது போல் இப்படி யாராவது எளிபெயர்த்தால் (கொலை செய்தால்) ஏற்றுக்கொள்வீர்களா....
மாட்டேன் வசு. ஆனால் இது சங்கம். எனக்காக செய்யும் பெயர்ப்பு. தெரிந்தே செய்யும் தப்பு. அவ்வளவுதான். நன்றி.
குறி சொல்லும் பெண் வயதானவள் என்பது குறிப்பு பத்மா.
ஏற்றுக்கொள்ள முடியாது மகி.
’முட்டுவேன் கொல்’ என்பதை ஏ.கே.ராமானுஜமும் முட்டிக் கொல்வேன் என்றுதான் மொழிபெயர்த்தார் என்று படித்திருக்கிறேன்.
ஔவையாரே வந்து ஆட்சேபிக்காதவரை anything goes. :)
பழமையில் புதுமை புகுத்திய தங்கள் நடை மிளிரவே செய்கிறது.. அதுவும் பாப்புலரான பாடலுக்கு பெருந்திணைப் பாடலுக்கு...ரசித்தேன்..மகிழ்ந்தேன்.
Post a Comment