ஆயிரக் கணக்கான கேலக்சிகளும் அந்த ஆயிரக் கணக்கான கேலக்சிகளை விழுங்கக் கூடிய கருந்துளைகளும் விடை காண முடியாத இயற்கையின் மாபெரும் அற்புதங்கள். பிரபஞ்சமும் பெண்களும் எந்தப் புள்ளியில் இணைகிறார்கள்...?!
ஸ்ரீராமின் கேள்விக்கு பதில் சொல்லுவது போல் என் எண்ணங்களை எழுதுகிறேன். இது முழுவதும் ஒரு ஆணின் மனநிலையில் எழுதப்படுகிறது என்று உணர்ந்தே இருக்கிறேன்.
மொத்த பிரபஞ்சமும் தராசின் ஒருதட்டில் வைத்தால் மறுதட்டில் ஒரு பெண்ணை தவிர வேறு எதை வைக்கமுடியும்! பிரபஞ்சம் என்று நம்மால் காணமுடிவது அனைத்தும் ஒரு பெண்ணிடத்திலும் பருண்மையாக காணமுடியும் என்றே தோன்றுகிறது. பிரபஞ்சத்தின் அறிய முடியா பெரும் புதிர்களையும் அதன் மர்மத்தன்மையையும் ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் பெறலாம். இதை கொஞ்சம் நீட்டி எழுதினால் வைரமுத்துக்களின் சினிமா பாடல்கள் போல ஆகிவிடும் அபாயம் இருக்கிறது.
எனவே நண்பர்களே பாவம் இந்த ஆண்களுக்கு பெண்களை விட்டால் யார்தான் இருக்கிறார்கள்...!
******
வைரமுத்து என்றவுடன் ஜீன்ஸ் படத்தில் ஒரு பாடல் வரி: " பாக்கெட் சைசில் வெண்ணிலவு எனக்கே எனக்கா.. " என்ன வரி பாஸ்..!
******
ஒரு பெண்ணால் சித்ரவதை செய்யப்படுவதை விரும்பும் ஒரு ஆண் - மாசோக்கிசம். ஒரு ஆணால் சித்ரவதை செய்யப்படுவதை விரும்பும் அல்லது விரும்பாத பெண் - சாடிசம். இரண்டு வார்த்தைகளும் இரண்டு ஆண் நாவலாசிரியர்களால் உருவான கருத்தாக்கங்கள். சாடிச நாவலை நான் படிக்கவில்லை. மாசொவின் காதல்தேவதை நாவல் - யுனைடெட் ரைட்டர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது - படித்திருக்கிறேன். 'சர்வ வல்லமை பொருந்திய தேவன் அவனை ஒரு பெண்ணிடம் ஒப்படைத்தான்' என்கிற ஜூடித்தின் வரி எடுத்தாளுகையுடன் எழுதப்பட்ட நாவல், முடியும் போது வாசித்து பாருங்கள்.
******
சர்வ வல்லமை பொருந்திய தேவன் தொடர்ந்து ஆண்களை பெண்களிடம் ஒப்படைத்துகொண்டே இருக்கிறான்..இதில் தேவனுக்கோ ஆணுக்கோ பெண்ணுக்கோ சலிப்பு என்பதே இல்லை..!!!
******
ஆமென்.
*****
5 comments:
highly romanticism
it suppossed to be... !
எவ்வளவு அழகா ஆழமா எழுதுறிங்க,
ரொம்ப ரசிக்கும் படியும், சிந்திக்கும் படியாகவும் இருக்கு...
வைரமுத்துக் கவிதைகளில் ஏராளமான வரிகள் எடுத்துக் காட்டலாம்.
ஆணுக்குப் பெண் போல பெண்ணும் ஆணை நினைக்கலாமில்லை..(நீங்களே சொல்லிட்டீங்க ...ஆணின் நிலையிலிருந்து யோசிக்கிறேன் என்று)
thanks kamalesh.
Post a Comment