ஒரு உரையாடலை கவனித்தேன். நெல்லை விரைவு ரயிலில். காலை ஆறு மணிக்கு. ஆணுக்கு முப்பத்தைந்து வயது இருக்கலாம். பெண்ணுக்கு இருபதுகள். அவன் ராணுவத்தில் இருக்கலாம். அந்த பெண் தகவல் தொழில்நுட்பம். ஒருவரை ஒருவர் அறிமுகமில்லாதவர்கள். அந்த பெண் எதையும் கவனிக்காமல் ஜன்னல் வழி தூரலை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவனுக்கு இருப்பு கொள்ளவில்லை. அவளின் கவனஈர்ப்பை எப்பாடு பட்டாவது பெற்றுவிடவேண்டும். லேசான உடல் நடுக்கம் தெரிந்தது அவனிடம்.
நான் ஒரு ஓரமாக அமர்ந்து கவனித்துக்கொண்டிருந்தேன். ஒருவழியாக ஆரம்பித்தான் பேசுவதற்கு.
"மேடம், உங்க செல்ல கொடுங்க ஒரு நிமிஷம்..."
"எதுக்கு.."
"ஒரு கால் பண்ணிக்கிறேன்.. ப்ளீஸ்.."
"நீங்களே ரெண்டு மூணு செல் வெச்சிருக்கீங்க.. எங்கிட்ட கேக்கிறீங்க.."
"அவுட் கோயிங் இல்ல.. அதான்.. ஹி.. ஹி.."
மொபைலை எடுத்து பார்த்தால் அதில் டவர் இல்லை.
"டவர் இல்லை.." என்கிறாள். நம்பாமல் பார்க்கிறான்.
"ஐயோ சத்தியமா டவர் இல்லை.."
ஐந்து நிமிட மௌனம். வண்டி செங்கல்பட்டை கடக்கிறது.
"என் பெயர் சரவணன்.. ஏர்போர்ஸ்.. உங்க பேரு.."
"சிவகாமி.. "
"என்ன பண்றீங்க.."
"வொர்க்"
"அதான் என்ன வொர்க்.."
"IT கம்பெனி.."
"எங்க.. "
"வேளச்சேரி.. "
மீண்டும் பத்து நிமிட மௌனம்.
"எந்த கம்பெனி.."
"சொலாரிஸ்.."
"சொலாரிஸ் தானா.."
"அது என்ன சொலாரிஸ் தானா..!?"
"இல்ல இல்ல அங்க என்னோட ரெண்டு பிரெண்ட்ஸ் வொர்க் பண்றாங்க.. இப்போ ஸ்டேட்ஸ் ல இருக்காங்க..எந்த காலேஜ்.. ?"
"ஈரோட்.... ட்ரிப்பில் ஈ.."
சில நிமிட மௌனம்.
"ஜன்னல் வழியா திரும்பி பாருங்க.. வானவில்.."
திரும்பிப் பார்க்கிறாள். அழகான வானவில். நிசமாகவே ரசிக்கத் தொடங்கி விட்டாள்.
"கேட் வாசலில் நின்று பார்த்தால் முழுசா தெரியும்.. "
"இல்ல பாதிதான் விழுந்திருக்கு.."
"உங்க மொபைல் நம்பரை தர முடியுமா.."
"எதுக்கு.. "
"பேசுறதுக்குத்தான்.. வேறெதுக்கு கேப்பாங்க.."
"தேவையில்ல.. "
"மொபைல கேட்டவுடனே தந்திட்டீங்களே.. என்னோட நம்பருக்குத்தான் அடிச்சேன்.. உங்களோட நம்பர் எனக்குத்தெரியும்.. "
"பாக்குறதுக்கு டீசன்ட்டா இருக்கீங்க.. நீ அப்படி பண்ண மாட்டீங்கன்னு நெனெச்சேன்.."
"என்னோட நம்பர் உங்க மொபைல் ல இருக்கு.. கண்டிப்பா பேசுங்க.."
மழையில் குடையை பிடித்தவாறு தாம்பரத்தில் இறங்கி சென்றுவிட்டாள். அவனும் இறங்கி மழையில் சந்தோசமாக நனைந்தபடி சென்றுவிட்டான். அவனைப்பார்த்து அவள் பாந்தமான புன்சிரித்ததுவே அவனது சந்தோசத்திற்கு காரணம்.
கேள்வி:
அறிமுகமில்லாத பெண்ணும் ஆணும் அவர்களுக்குள்ளே அறிமுகப்பட்டு நட்பு பாராட்டுவது நடைமுறையில் சாத்தியமா?
பதில்:
ஏறக்குறைய இல்லை.
பெண்ணின் அடிப்படை சுதந்திரத்தில் ஒரு ஆனால் மிகச்சுலபமாக நுழையமுடிகிறது என்று கொள்வோமானால் men are men. brutals. ஆண்கள் காமத்திலிருந்து தொடங்கி காமத்தில் போய் முடிக்க விரும்பும் அறிவிலிகள் மட்டும்தானா? இல்லை என்று எந்த ஆணாவது நிரூபியுங்கள்! அறிமுகமில்லாத பெண்ணிடம் ஒரு காபி சாப்பிட கூப்பிடும் செயல் என்பது சரியா? அந்த பெண்ணிற்கு வானவில் என்று பெயர் வைத்து நானொரு கவிதை எழுதியதை அவளிடம் சொல்லாமல் நான் வந்தது சரியா?

...... தொடர்கிறேன்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
3 comments:
கேள்வி:
அறிமுகமில்லாத பெண்ணும் ஆணும் அவர்களுக்குள்ளே அறிமுகப்பட்டு நட்பு பாராட்டுவது நடைமுறையில் சாத்தியமா?
பதில்:
ஏறக்குறைய இல்லை.
நீங்கள் எந்த யுகத்தில் இருக்கிறீர்கள் ஆதிரன்?
அறிமுகமில்லாத பெண்ணும் ஆணும் அவர்களுக்குள்ளே அறிமுகப்பட்டு நட்பு பாராட்டுவது நடைமுறையில் சாத்தியமா?
பதில்:
ஏறக்குறைய இல்லை.//
என்னப்பா இது?
அன்பு மகி,
சுஜாதா சிறுகதை மாதிரியான ஒரு நிகழ்வு. எஸ்ட்ரோஜென், ஆன்ட்ரோஜென்கள் இசைக்கோப்பாக இணைந்து வரும்போது காதைப் பொத்திக் கொள்ள முடியுமா?
இது இந்தகாலத்தில் அல்ல, செம்புலப் பெயனீர் காலத்தில் இருந்தே.. அன்புடை நெஞ்சங்கள்.. :)) ((:
பொதுப்புத்தி காலத்துக்கு காலம் வேறுபடுகிறது என்பதை நாம் அறியும் போது நாம் வயது விட்டு வயதோ அல்லது பருவம் விட்டுப் பருவமோ தாவியிருப்போம்.
பட்டாம்பூச்சியிலிருந்து கூட்டுப்புழுவுக்கு உருமாற்றம் பெறும் ஒரே உயிரினம் நாம்தான்.
வாலிபத்தில் வசீகரமான விஷயங்கள், அலுக்கும் பருவம் எல்லோரையும் மேற்பார்வையிட வைக்கிறது. இதெல்லாம் வயசுக்கோளாறுதான்.
உங்களுக்கு நினைவிருக்குமானால், நாம் ஒரு காலத்தில் தேடித்தேடி இசைநாடாக்களைச் சேகரித்திருப்போம். காற்றில் அரும்புகிற கானங்கள் எல்லாமே நமக்காக இசைக்கப்பட்டதாகத் தோன்றியிருக்கும். தெருக்கம்பத்தில் அமரும் பறவை கூட ஒரு பாடலைச் சொல்வதாகத் தோன்றும்.
அதற்கு அப்பாலான ஒரு காலத்தில், புதிதாக என்ன இசை வருகிறது என்றே தெரியாமல் வாழத்துவங்குவோம். அப்போது "பழைய பாடல்கள் மாதிரி.." என்ற ஒரு சின்ட்ரோம் வந்து சேரும். இதுவும் வயசுக்கோளாறுதான்!!
ஆண்களை காமப்புத்திக்காரர்கள் என்று சொல்வதை செம வன்மையாகக் கண்டிக்கிறேன். பெண்களைஅந்த மாதிரி சொல்லாததற்கு மென்மையாகக் கண்ணடிக்கிறேன் ;))
காமத்திலிருந்து துவங்குவதுதான் காதல் (அ) கடலை. இதில் ஆண்களை மட்டும் காமக்காரர்களாகக் காட்டுவது அவசரமானது. அந்தோன் செக்காவ் நாய்க்காரச் சீமாட்டியை வாசியுங்கள்.
அப்புறம் 1:
இந்திய ரயில்வே ரொம்பவும் சிறப்பானது இல்லை. ரயில்கள் கனத் தாமதமாக வருகின்றன. நீல நிற இருக்கைகள் பெஞ்ச் போல இறுக்கமாக இருக்கின்றன. நட்டு-ஆணிகள் துருத்திக் கொண்டும், தடபுடா சப்தமாகவும் இருக்கின்றன. கழிப்பறைகள் பற்றி அந்நியன் சொல்வது மெய்யே. மென்மையாக துயிலெழுப்பி பயணச்சீட்டு பார்க்கும் பரிசோதகர்கள் யாரும் இல்லை. சுருக்கமாக ரயில் பயணம் சுகமானதாக இல்லை. எதிர் இருக்கை குமரிகளை (எப்படிப் பட்டவர்களாக இருப்பினும்) பேரழகாக்கிக் காட்டுவது ஒன்றே
நீள் ரயில் பயணங்களின் அனுகூலம்.
இது பற்றி யான் பறைஞ்ச ஒரு இடுகையை (என்றும் சிநேகிதிகள்..! - http://jaganathank.blogspot.com/2009/10/blog-post_21.html) நிங்கள் வாசிப்பது மதி :))
Post a Comment