கூந்தல் வானில் மிளிர்கிறது
வட்டச்சின்ன நிலா
காக்கை எச்சம்.
பால் குடித்து களியேறி
இணையழைத்துக் கதறுகிறது தவளை
வானில் நிலா.
எதிர்த்து நீந்தி தவித்து'
தள்ளாடி பிளந்து சேர்கிறது
ஆற்றுக்குள் நிலா.
********************************
சிவகுமாரின் பதிவு கண்டதும் களிப்பொன் நிலா புத்தியில் நுழைந்து செய்த சோதனை. !
********************************
2 comments:
எதிர்த்து நீந்தி தவித்து'
தள்ளாடி பிளந்து சேர்கிறது
ஆற்றுக்குள் நிலா.
இது அழகாயிருக்கே !
நிலவென எதைப்பாடினாலும் அது கள்வெறி தான் ,
நேற்று நிலா பார்த்தீங்களா ஆதிரன் ?
ஆ...
புத்த பூர்ணிமா...
ததாகனின் நிர்வாணம்
களங்கமற்ற வெளிச்சம்
எதிரொலிக்காத முத்தம்
நிசப்தம்
தியானம்
அமைதி
சூன்யம்
வெளி
பாழ்
எல்லையற்ற கருணை
பவதி பிக்ஷாந் தேஹி...
புணர மறுத்து
இமை மயிர்கள் தரை புரள
தவஞ்செய்த
புத்தனின் கையில் வந்து வீழ்ந்தது
முற்றிப்பழுத்த யோனிப்பழம்.
Post a Comment