கடந்த பதிவு மதிமயங்கிய ஒரு பொழுதின் தானறியா வெளிப்பாடு. வருந்துகிறேன். unconcious mind - ல் இவ்வளவு கோர்வையாய் வார்த்தைகள் எனக்கு வரும் என நான் எதிர்பார்க்கவில்லை. போகட்டும். அதன் அர்த்தங்கள் விளங்கா மர்மமாகவே தொடரட்டும்.
***************
வெளிச்சூழலில் வேலை நிமித்தமாக ஏற்படும் மனஅழுத்தம் என்னை கடந்த சில நாட்களாக இம்சித்தது. சுயஉற்சாகம் கொள்ளத்தேவையான சூழலை நானாக ஏற்படுத்திக்கொள்கிற தேவை மிக கடுமையான போராட்டமாக அமைந்து விட்டது. விட்டேத்தியான உணர்வுப்பகிர்வுக்கு தகுந்த தோழமை அருகில் இல்லாமல் போனது எனது துரதிர்ஷ்டம். போகட்டும். இப்போது நினைக்கையில் 'சின்னப்புள்ளத்தனமா' இருந்தாலும் மரணம் சுகம் என்கிற அளவுக்கு போயிருந்தது மனது. மொத்தமாக நான் அப்போது ஒரு வித உறவு முறைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். நட்பின் படிநிலைகளில் ஒரு உச்சபட்ச நிகழ்வுப்போக்கு அது.
'Intimacy' என்கிற வார்த்தைக்கு நேரடியான தமிழ் வார்த்தை இப்போதைக்கு எனக்கு தோன்றவில்லை. ஒரு உறவில் இன்டிமசி என்கிற நிலைக்கு வருவது என்பது என்னைப்பொறுத்தவரை ஒரு கொடுப்பினை. நட்பாகட்டும், மற்ற எந்தவகையான உறவுமுறையாகட்டும் - இன்டிமசி என்பதற்கு அன்யோன்யம் என்று சொல்லலாமா? -
ஒருவருக்கொருவர் கழுத்தை அறுத்துக்கொள்கிற அளவுக்கு சண்டை போடுவார்கள் சில மணித்துளிகளின் இரண்டுபேரும் பிணைந்து கொண்டிருப்பார்கள். ஒரு குற்றவுணர்வும் இருக்காது. வன்மம் மனசளவில் துளி கூட இருக்காது. வருடங்களாக பார்க்காமல் கூட இருப்பார்கள். பார்க்கும் போது பரபரப்பற்ற அன்பு பிரவகிக்கும். அவர்களின் சிறிய அசைவில் கூட ப்ரியம் வழிந்தோடும்.
நாட்கணக்கில் பேசாமல் இருப்பதும் அதற்காக சண்டைபோடுவதும் எல்லாம் துளிநேர இன்பங்களாக மாறிப்போகும். அறிவுரைகளை மாறி மாறி சொல்லிக்கொள்வார்கள். அதை பின்பற்றுவதும் விட்டுவிடுவதும் அவரவர் விருப்பம். நான் சொல்லி ஏன் செய்யவில்லை என்கிற கேள்வி மூளையிலேயே தோன்றாது. இப்படி நிறைய குணாதிசயங்களை வைத்திருக்கும் இந்த அன்யோன்ய உறவு அனைவருக்கும் வாய்க்குமா என்ன. இந்த உறவுமுறையில் கணவன் மனைவி இருந்துவிட்டால் இன்பமே
*************************
இந்த வகையான நட்பினை அடிப்படையாக வைத்து "clerks" என்றொரு ஆங்கிலப்படம் வந்திருக்கிறது. தொண்ணூறுகளின் ஆரம்ப காலப் படமது. தொடர்ச்சியாக இரண்டு மூன்று பாகங்கள் வந்து சக்கை போடு போட்டது. முடிந்தால் பாருங்கள். இந்த படத்தை நானும் சுரேஷும் சேர்ந்து பார்த்து அனுபவித்த தருணங்கள் இனிமையானவை.
*************************
4 comments:
//நாட்கணக்கில் பேசாமல் இருப்பதும் அதற்காக சண்டைபோடுவதும் எல்லாம் துளிநேர இன்பங்களாக மாறிப்போகும். அறிவுரைகளை மாறி மாறி சொல்லிக்கொள்வார்கள். அதை பின்பற்றுவதும் விட்டுவிடுவதும் அவரவர் விருப்பம். நான் சொல்லி ஏன் செய்யவில்லை என்கிற கேள்வி மூளையிலேயே தோன்றாது. இப்படி நிறைய குணாதிசயங்களை வைத்திருக்கும் இந்த அன்யோன்ய உறவு அனைவருக்கும் வாய்க்குமா என்ன. இந்த உறவுமுறையில் கணவன் மனைவி இருந்துவிட்டால் இன்பமே//
அத்தனையும் உண்மைதான் நண்பரே...! உங்கள் எழுத்தை உணர்ந்து படித்தேன்...நன்றி
நன்றி கௌசல்யா மேடம்.
intimacy என்கிற வார்த்தைக்கு சென்னை பல்கலைக்கழக அகராதியில் நெருங்கிய உறவுடைய நிலை, உள்ளார்ந்த பழக்கம் மற்றும் கள்ளப்புணர்ச்சி என்று அர்த்தம் சேர்த்திருக்கிறார்கள். என்னைப்பொருத்தவரை உள்ளார்ந்த பழக்கம் சற்று நெருங்கி வருகிறது. கள்ளப்புணர்ச்சி என்பது தவறு. 'illegal intimacy'என்கிற சட்டம் சார்த்த வார்த்தை கள்ளக்காதலுக்கு உண்டு.
ஹ்ம்ம் ..ஒரு கவிஞனின் ஆழ் மன வார்த்தைகள் கோர்வையாய் வருவதில் ஆச்சரியம் என்ன? இன்னொரு மதி மயங்கும் நேரம் இதன் பொருளும் தெளிவாகலாம் ,,
அன்யோன்ய நட்பு வரம் தான் . ஒரு அணுக்கம் என்று சொல்லலாமா? நீங்கள்கூறும் படி அது ஒரு தம்பதியரிடை தோன்றின் அது கிடைப்பரியா பேறு.சில சமயம் நட்பு அதனினும் மீறி நிற்கும் .நிற்குங்கால் அது வரம் .
மரணம் சுகம் என்ற வார்த்தை ,மிகவும் disturb செய்கிறது ..அதன் பின்னால் உள்ளவற்றை நீங்கள் மட்டுமே justify செய்ய இயலும் .இருப்பினும் அது மிகக் கடுமையான வார்த்தை தான் :( i object .
//'Intimacy' என்கிற வார்த்தைக்கு நேரடியான தமிழ் வார்த்தை இப்போதைக்கு எனக்கு தோன்றவில்லை.//
Anukkam?
Post a Comment