ஒரு அருமையான நட்பு தினம் பற்றிய பதிவை போட்டிருக்கும் க சீ சிவக்குமாருக்கு இனிய நட்பு வணக்கமுங்க. எழுத்து நடை பொறாமை கொள்ள வைக்கிறது சிவா.
இனிய நண்பர்கள் அனந்தராமகிருஷ்ணன் என்கிற ரமேஷ் மற்றும் அன்புவிடமிருந்து குறுவாழ்த்துக்கள் கிடைத்ததில் மகிழ்ச்சி. நன்றிகள். அப்புறம் ஒரு ஹைராபாத் பிரியாணியிடமிருந்தும் வாழ்த்து வந்தது. பிரியாணிக்கு நன்றி! மற்றபடிக்கு இந்நாளைய பற்றிய எண்ணம் எனக்கும் சிவாவிற்கும் ஒன்றே.
நிற்க..
மயிலாடுதுறைக்கு இரவு பதினோரு மணியில் இறங்கி விடிவதற்குள் நாலு மணிக்கே திரும்ப நேர்ந்ததால் பதினோரு மணிக்கு பேருந்து நிலையத்திலிருந்து ரயில்நிலையத்திற்கு தனது இருசக்கரவாகனத்தில் இறக்கிவிட்ட யாரென்று தெரியாத அந்த இளைஞன் மற்றும் அந்த நேரத்தில் என்னை மூன்றரை கிலோமீட்டர்கள் தூரம் வாகனத்தில் இறக்கிவிட்டு தனது வீட்டுக்கு செல்லும் அளவிற்கான மனநிலையை அவனுக்கு அளித்த அவனது கைபேசியின் மறுமுனையில் பேசிக்கொண்டிருந்த அந்த முகமறியாத யுவதிக்கும் நன்றிகள். மாயவரம்தான் மயிலாடுதுறை என்கிற பயங்கரமான வரலாற்றுத்தெளிவுடன் அங்கு நான் பார்க்க விரும்பிய திருமணஞ்சேரியை பார்காமல் திருச்சி வந்திருக்கிறேன். பார்க்கலாம்.
காலையும் நீயே .. மாலையும் நீயே என்கிற பாடலை கேட்காத இன்றைய மத்தியவயதுக்காரர்கள் இருக்கிறார்களா என்ன. அந்த பாடலின் குரலுக்கு சொந்தக்காரர் ஜிக்கியின் கணவரும் இசையமைப்பாளருமான a.m. ராஜா அவர்கள் . இனிமையும் ஆண்மையும் குழைத்த குரல். தேனிலவின் பாடல்களை கேட்டுப்பாருங்கள். ஸ்ரீனிவாசையும் ராஜாவையும் பிரித்து அறிய முடியாத மூடனாக இருந்திருக்கிறேன். நான் ஏற்கனவே சொன்னதுபோல எனது மூடத்தனத்தை அகற்றுவதற்கு உதவியதில் ரமேஷ் வைத்தியாவுக்கு நிறைய பங்கு உண்டு. இன்று பகலில் ரமேஷிடம் நிறைய நேரம் பேசிக்கொண்டிருந்தேன். முழுக்க முழுக்க ராஜா பற்றியும் அவரது குரல் பற்றியும் அவரது ஒரிஜினல் இசையறிவு பற்றியும் நிறைய சொன்னார். இன்று ராஜாவின் நினைவு தினம். இரவு படுக்கும் முன் காலையும் நீயேவை தனிமையில் கேட்க முயலுங்கள். எல் ஆர் ஈஸ்வரி மற்றும் எம் ஆர் விஜயா ஆகியோரின் குரல் பற்றிய தனிப்பட்ட வைத்தியாவின் கமெண்டை இன்னொரு நாள் சொல்கிறேன். அறிவராசனம் சுவாமி.. என்று தொடங்கும் சமஷ்கிருதப் பாடலை கேட்டிருக்கிறோம். இந்த பாடலை எழுதியது கண்ணதாசன் என்பது சரியா தவறா. அறிந்தவர்கள் சொல்லி உதவுங்கள். இந்த பாடலின் மெட்டில் வைத்தியா எழுதிய பாடலின் முதல் வரியோடு இன்றைக்கு முடிக்கிறேன்.. கஷ்ட ஜீவியம் சுவாமி நஷ்ட ஜாதகம்.. !
************
2 comments:
ஹஹஹா நஷ்ட ஜாதகமா?முழு பாடலையும் வாங்கி எழுதுங்கள்.பாடலை எழுதியவர் கண்ணதாசன் தான் .
ராஜாவின் திருமணத்தின் போது நடந்ததாக ஒரு நிகழ்ச்சி
.ராஜாவும் ஜிக்கியும் திருமணம் செய்து கொண்டதை ராஜா-ஜிக்கி கல்யாணம் என கூவி நாளிதழ் விற்றனராம்.
ராஜாஜிக்கு கல்யாணம் என்று மக்கள் நினைக்க செம வியாபாரம் ஆயிற்றாம் ....என் பாட்டி சொன்னது இது ..
தேன் தான் அந்த குரல் .
அவர் பாடல்கள் பல பிரபலம்
1. நிலவும் மலரும்
2. மயக்கும் மாலை
3. பாட்டு பாடவா
4. தனிமையிலே இனிமை காண முடியுமா
5. மாசிலா உண்மை காதலே
இப்படி பல ....காலையும் நீயே இதிலெல்லாம் மகுடம்
அது சரி திருமணஞ்சேரிக்கு என்ன விஷயமாய் விசிட்?;)
'Harivarasanam' was written by Kumbakudi Kulathur Iyer in 1955.
Post a Comment