நண்ப
இடைவெளிகளின் பீடபூமியில் பூத்து தளும்புகின்றன மௌனங்கள் வாதை மணம் வீசி. சொற்கரைசலினால் ஆன பானம் தீர்ந்த பார்வைக்குடங்களில் நிரம்பி வழிகிறது வெறுமையின் துயர் கணங்கள். சமரற்ற நிமிடங்களில் தூர்த்த வாளொப்ப களிப்பிழந்து தவிக்கிறது நிணம் தோய்ந்த சிறுவுயிர். நிலவு காய்கிறது.
நண்ப
துணை போன காலங்கள் இனிய பழங்கள். மிருதுவான தோல்கள் இளம்பச்சை. உவர்ப்புக்கும் துவர்ப்புக்கும் இடையேயான இனிப்பு. ஷ்பரிசங்கலாளான ஆன பொன்மஞ்சள் சுளை. நினைவுகளில் மழை கிளப்பும் மணம். மீண்டும் பறிக்க ஏலா அக்காலப்பழங்களை விளைவிக்கிறது பாலை மணற்துகள். வெம்பிக்காய்கிறது பரிதிக்கிரணம்.
நண்ப
நிறைமாத நாட்கள்.
குடம் உடைய பனி இரவாகிறது.
நினைவு வெயிலாகிறது.
4 comments:
இப்படி கூட எழுதமுடியுமா.... கலக்கிட்டீங்க நண்பா....
thanks jeyaseelan. very thanks.
//மீண்டும் பறிக்க ஏலா அக்காலப்பழங்களை விளைவிக்கிறது பாலை //
ஒப்பிட முடியா கற்பனை..
கவிதைக்கும் கட்டுரைக்கும் இடையேயான சுவை..அருமை..
எனக்கு இப்போது ஒரே ஒரு ஆசை ...
பார்வை குடங்களில் ஒரு காலத்தில் நிரம்பிய சொற்கரைசல் பானத்தை ஒரு முறையேனும் பருக வேண்டும் ..
வார்த்தை ஜாலம் ஆதிரன் ......உவக்கத் தோணுகிறது...அதன் பின் வலி சிறு நெருடலாய் இருப்பினும்
"நிறைமாத நாட்கள்.
குடம் உடைய பனி இரவாகிறது."
இது பலே பலே
Post a Comment