சர்ப்பத்தீண்டல் நீ என் பெண்ணே ஏறும் விஷம் நான்
தூறல் நிமித்தம் நீ என் பெண்ணே மழையுண்ணும் இல்லாப்பறவை நான்
கானல் அற்ற நீள்சாலை நீ என் பெண்ணே வாழும் அபத்தம் நான்
விரி கை மாரி நீ பெண்ணே தீ மிதிக்கும் பக்தன் நான்
சொல் துறந்த வன பட்சி நீ என் பெண்ணே சிறுகாற்று மென்தூசி நான்
வான் புகுந்த கருநீலம் நீ என் பெண்ணே ஒற்றைச் சுடர் பெற்ற திரிமெழுகு நான்
திசையற்ற மாகாளி நீ என் பெண்ணே கலி கொள்ளும் சிறு தெய்வம் நான்
வலியற்ற மென்தும்பை நீ என் பெண்ணே விழிபிழியும் ஒரு துளி நான்
நீ பெற்றது காதல் என்றாலும் என் பெண்ணே காதல் என்றில்லைஎன்றாலும் காதல்
காதல் வழி நான் பெற்றது என் பெண்ணே காதல் வளி காதல் வலி
பெரும் பாலை நீ என் பெண்ணே சிறுமணல் நான்
பெருங்காதல் நீ என் பெண்ணே சிறு காமம் நான்
பெருங்களிப்பு நீ என் பெண்ணே சிறு கேவல் நான்
பெரு நடனம் நீ என் பெண்ணே விரலசைவு நான்
பாரதி நீ என் பெண்ணே அவன் மீசை நான்
சாரதி நீ என் பெண்ணே அச்சாணி இல்லா சக்கரம் நான்
நீ ரதி நீ என் பெண்ணே அம்பெய்தும் பெருங்காமன் நான்
காதலி நீ என் பெண்ணே காதலன் ...
*********************************
5 comments:
நீண்ட நாள் மௌனத்திற்கு பிறகு ...அருமை அழகு
விரி கை மாரி ஆஹா !கற்பனையும் விரிகிறது
welcome back adhiran
அன்பு ஆதிரன்,
எப்படி இருக்கிறீர்கள் ஆதிரன்? நிறைய வாசிப்பு உங்களுடையது, படிப்பின் பின்புலமும், அனுபவங்களும் உங்களுக்கு வாய்க்கப்பெற்ற நண்பர்களும் மிகப்பெரிய பலம் உங்களுக்கு... உங்களின் சில கவிதை எனக்கு ஆச்சரியமாய் இருக்கும்... என்ன ஒரு சொல்லாடல், வீச்சு என்று. இப்போதும் படிக்கிறேன் உங்கள் கவிதைகள் கொஞ்சம் நீர்க்கிறதாய் படுகிறது எனக்கு. இந்த கவிதை கூட எனக்கு சாதாரணமாக இருப்பதாகப்படுகிறது. ஒரு சில வரிகளில் தெரியும் ஆதிரன், நெடுக இல்லை என்பது வருத்தமே. யாருக்கோ சொல்ல முற்படும் விஷயங்கள் அல்லது எதுவோ உணர்த்த விரும்பும் விஷயங்களை எங்கோ ஒரு ஓரத்தில் முடக்கி, அதன் பொருட்டாய் மேலும் வளர்த்ததாகப்படுகிறது... என் கனிப்பு தவறாகலாம் ஆனாலும் எனக்கு ஏனோ ஒரு கட்டாயத்தின் பேரில் எழுதியதாய்ப்படுகிறது... இந்த கவிதை... அல்லது சொற்சித்திரம் அல்லது ஒரு அப்ஸ்டராக்ட் ஆர்ட் எதுவோ ஒன்று.
அன்புடன்
ராகவன்
jalli adichittrukken ragavan. passing very bad mental state. thanks.
கவிதை நீ ! ரசிகன் நான்
'என் பெண்ணே'
The problem with this poem, according to me, is you have already written something like this two or three times. Despite some good phrases (பெரு நடனம் நீ என் பெண்ணே விரலசைவு நான், சிறுகாற்று மென்தூசி நான்), it has a teja vu feeling. You could've saved those phrases for some other poem. 'You are this; I am that' is a format done and dusted with from Bharathi to Vairamuthu.
.Parthi.
Post a Comment