29 January, 2010

வாழ்வு ஆப் தங்கராசு 2

*******************************

"...... இல்லையென்றால் நான் ஒப்புக்கொள்கிறேன் இது முதல்முறை இல்லையென்பதை. உனக்கு எது தேவைப்படவையில்லை என்பதை எனக்கு தெளிவு படுத்துவதன் மூலம் உனக்கு எது தேவை என்பதை எனக்கு தெளிவாக சொல்லுகிறாய்.."

"இல்லை என்பதை சொல்லவே நான் எப்போதும் பிரியப்படுகிறேன். ஆனாலும் அது எனக்கு நானாக சொல்லிக்கொள்ளும் பொய் என்பதை நீ அறிந்துகொள்வது எனக்கு குறைவான விதத்தில் ஏமாற்றமே"

" எதையும் நீ நேரடியாக சொல்ல மாட்டாயா.. தொடக்கத்தில் என்னிடம் நீ ஐம்பத்து ஐந்து நிமிடங்களுக்கு குறையாமல் பேசுவதில்லை.. நேராகவும் சரி .. கைபேசியிலும் சரி.. அனால் இப்போது உனக்கு ஏனோ நான் பிடிக்காமல் போய் விட்டேன்.."

"ஆமாம்.. நான் ஆரம்பத்தில் உன் பேச்சுக்கு விருப்பப்பட்டேன் .. இப்போழுதும்தான்.. உன் பேச்சு எனக்கு புரியாவிட்டாலும் எனக்கு பிடித்திருந்தது.. இப்போது நீ பேசுவது எனக்கு புரியவில்லை என்றாலும் என் மனதில் ஒருவகையான கிறக்கத்தை ஏற்படுத்துகிறது.. "

"பிறகென்ன.. நானும் அதைத்தானே சொல்கிறேன் என்பது ஏன் உனக்கு புரியவில்லை.. நான் சொல்லவருவது என்னவென்றால் நீ பேசுவதும் எனக்கு புரியவில்லை.. ஆரம்பத்திலும் சரி .. இப்பொழுதும் சரி.. ஆனால் எனக்கு பிடிகிறது உன்னை.."

"சரிவிடு.. சொல்லு அப்புறம்... "

"சரி.. அப்புறம்.."

"அப்புறம் என்ன.. எல்லாம் எப்பயும் போல் போய் கொண்டிருக்கிறது.. நீ இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறாய்.."

"படுத்திருக்கிறேன்.."

"யார் கூட.."

"உனக்கு வேற வேலையே கிடையாதா.. ஏன் இப்படி பேசுகிறாய்.. சரி சொல்லு .. நீ எப்போது வருவாய்.."

"எதுக்கு படுக்கவா.. "

"நான் வைத்துவிடுகிறேன்.. உனக்கு கிறுக்கு பிடித்துக்கொண்டுவிட்டது.. "

"பிறகு.. என்ன சொன்னாலும் நீ கேட்க மாட்டேன் என்கிறாய்.. இப்போது கூடவா நான் பேசுவது புரியவில்லை உனக்கு.. எனக்கு நீ வேண்டும்.. "

"நானா.."

"இல்லாமல் உன் பெரியப்பாவா.. நீதான்.. நீ மட்டுமேதான்.."

"என்னை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறாய்.. நீ பேசுவது எனொக்கொன்றும் புரியவில்லை.. ஆனால் எனக்கும் நீ வேண்டும்.. நீ என்றால் நீ மட்டுமே வேண்டும்.."

"என்னதான் சொல்லவருகிறாய்.. நான் சொல்வதையே நீயும் சொல்வதினால் சரியாய்போய்விடுமா.. எனக்கொன்றும் புரியவில்லை.. உன் மனதறித்து சொல்.. உன்னிடம் எத்தனை முறை கேட்பது..

".......... ஒப்புக்கொள்கிறேன் .. இது முதல்முறை இல்லை என்பதை.."

*********************************

மறுபடியும் முதலில் இருந்தா...என்று வெறுப்பேறி ஒட்டுகேட்பத்தை நிறுத்திவிட்டு தண்ணியடிக்க போய்விட்டான் தங்கராசு.!

********************************

27 January, 2010

சொல்லுவதெல்லாம் பொய் 6

***************
08.03.1992

00.08

எனக்கு நேராதது உனக்கு வாய்த்தது. காதல். என்னைவிட ஐந்து வயது மூத்தவன் என்றாலும் அவன் எனக்கு நண்பனாய் அறிமுகமானான். காமுகன், பெண் என்றால் வழியிலிருக்கும் கிணற்றைத்தாண்டிவிடுவான். அதே போல நின்றிருந்த ஒரு மாட்டுவண்டியை ஏறித் தாண்டியபோது விழுந்து காலை முறித்துக்கொண்ட நாளில் நான் அவனை முதலில் பார்த்தேன். காலொடிந்தது அவனுக்கு உறைக்கவில்லை காணச்செல்லும் பெண்ணை தவறவிடக்கூடாது. முடியாமல் போனது அவளைப்பார்க்க. மூன்று மாதங்கள் தினமும் ஒரு தடவை அப்பெண்ணை தவறவிட்டது பற்றி பேசிவிடுவான். தொண்ணூற்று ஏழாம் நாள் அதே பெண்ணை மீண்டும் பார்த்தபின்தான் அந்த பேச்சு நின்றது. அவனை நீ காதலித்தாய். உனக்கு தெரியாதுடா அவன்தான் இனி எல்லாம் என்றாய். புரியவில்லை. எனக்கும் நீ சொல்லும்போது கோவம் எதுவும் வரவில்லை என்பது ஆச்சர்யம்தான். எனது பத்து வருட நண்பனை நீ காதலிக்கிறாய். இது விதியின்றி வேறு என்ன. அவனிடம் சொல்லிவிட்டாயா. இல்லை ஆனால் அவனுக்கு தெரியும். உன் குரலில் இருந்த உறுதி எனக்கு லேசான பயத்தை அளித்ததை நான் உன்னிடம் மறைத்துவிட்டேன். அப்பெடிஎன்றால் ஏன்அவன் என்னிடம் சொல்லவில்லை. எனக்கு கடுமையான கோபம் வந்தது. மனதை படிப்பதில் நீ கில்லாடி. அவனை கோபித்து ஒரு பிரயோசனமும் இல்லை என்கிறாய். நான் மலைத்துப்போய் நிற்கிறேன். என்னை நோக்கிய அவனது எண்ணம் என்னால் உருவாக்கப்பட்டது, என்கிறாய். வயலில் தண்ணீர் பாயச்சுபவன் தனக்கு தேவையான வரப்பில் நீர் திருப்பி விடுவதைப்போல அவனை, அவன் எண்ணபாய்ச்சலை என்விழி நோக்கி திருப்பி விட்டேன் அவனறியாமல் என்கிறாய். மூன்று மாதங்களாய் அவனும் ஒரு வினோத பிராணி போலவே செயல்படுவது இதற்காகத்தானோ. சிறை சென்று வந்ததால் ஏற்பட்ட குளறுபடி என்றே எண்ணிஇருந்தேன். வெறும் பணத்திற்காக அவன் அந்த திருட்டை செய்திருப்பான் என்று எனக்கும் நம்பிக்கையில்லை. எதோ ஒன்று அவனை ஈர்த்திருக்கிறது. கிருபா வின் கும்பலில் எதற்காக தன்னை இணைத்துக்கொண்டான் என்று அவனாலேயே சொல்லமுடியவில்லை என்பது எனக்கு நினைவில் வருகிறது. குடிப்பதை நிறுத்தியிருந்தான். புகைப்பதையும் கூட. அவன் வாய் நாற்றத்தை குறைக்க மருந்துகள் எடுத்துக்கொள்கிறான். நாட்டு வைத்தியத்தை தவிர எதற்கும் போகாதவன் மணிக்குமார் டாக்டரிடம் தன்னுடல் சோதனையை செய்துகொள்கிறான். இத்தனை வருடங்கள் நீ அவனை பார்க்கும் போதும் சாதரணமாய் தான் இருந்திருக்கிறாய். திடீரென்று என்ன அவன் மீது காதல். திருமணம் வேண்டாமென்று உறுதியடன் இருந்த நீ எங்கே. எல்லாவற்றிலும் மகத்தான ஆச்சர்யம் அப்பாவும் அம்மாவும் ஒப்புக்கொண்டது. உனக்கும் ராமனுக்கும் திருமணம். அவன் நமது ஜாதி என்பதுமட்டும்தானா அவர்களுக்கு காரணம். ஏராளமிருக்கிறது மறுப்பதற்கு. அவர்களால் முடியாது என்று நீ ஒற்றை வார்த்தையில் உறுதி செய்கிறாய். டிஷோசாவுக்கு பெரும் மகிழ்ச்சி. என்னமா நடக்கிறது

09.07.1994
00.09

டிசொசாவுக்கு அடிபடவில்லை. நல்லவேளை. விடிந்தால் திருமணம். ராமன் ஒரு முறை-கடைசிமுறை என்று சொன்னான்-குடிப்பதற்கு விருப்பம் தெரிவித்தான். நான் வாங்கிவர வெளியேறும்போது டிசோசா குறுக்கிட்டாள். நகருக்குள் எதோ வாங்க வேண்டுமாம். லச்சுமி திரையரங்கம் அருகில் பெட்ரோல் போட திரும்பியபோது ஆட்டோ ஒன்று பின்புறம் இடித்தது. அவன் தாயை திட்டியவாறு வண்டியை கீழே விட்டேன். டிசோசா தடுமாறி விழாமல் குதித்து நின்றிருந்தாள்.
எனக்கு நெற்றியில் ரத்தம். இடது கால் முழுவதும் வலி. வாயிலிருந்தும் ரத்தம். டிசோசா பொறுமையாய் வாயை துடைத்து விட்டு. வாயை திறந்து காட்டு என்றாள். தொண்டைக்குழியை பார்த்து விட்டு, ஈறுலதான் அடி போல வேற எங்கடா என்கிறாள். எதுக்கு இப்படி அசிங்கமா பேசுற என்கிறாள். எனக்கு எதையும் கேட்க முடியவில்லை. வலி. அதே ஆட்டோ காரனை அழைத்து அவளை ஏற்றி விட்டுவிட்டு மோகனம் நர்சிங் ஹோமுக்கு போனேன். இடது கணுக்காலில் மேல் சின்ன விரிசல் எலும்பில் உண்டாயிருந்தது. கட்டிப்போட்டு இரண்டு தையல்களை நெற்றியில் போட்டு, படுக்கையில் படுக்க வைத்துவிட்டார்கள். புது மாப்பிளை ராமனுக்கு என்னால் சரக்கு வாங்கித்தர முடியவில்லை. வருத்தமாய் இருந்தது. ஆனால் கிருபா அவனுக்கு வாங்கி கொடுத்து குடிக்கச்சொள்ளியும் ராமன் குடிக்கவில்லை. உன்னிடம் கேட்டு நானும் நீயும் ஒரு நாள் குடிக்க வேண்டுமடா என்று மணக்கோலத்துடன் மருத்துவ அறையில் வந்து சொன்னான். என்ன சொல்றான் என்று கேட்கிறாய். அவனை நீயும் ஒருமையில் அழைக்கத்தொடங்கியிருக்கிறாய். திருமணத்திற்கு முன் அவனை நீ பன்மையில் அழைப்பாய். நாளைக்கு வர்றோம் என்றுவிட்டு வாடா போகலாம் என்று அவனை அழைத்துச்செல்கிறாய். குட்டி ஆட்டுக்கு இலைதளை காட்டி அழைத்துப்போகும் இடைச்சியை போல. அவனும் ஆடு போலவே பின்தொடர்கிறான். அன்றே தனசேகரனும் அவன் மனைவியை அழைத்துக்கொண்டு என்னைப்பார்க்க வந்திருந்தான். மூன்று வருடங்களுக்கு முன் அவளை முழுதாகப்பார்த்தது. இப்பொழுது அவள் தொலைபேசி நிலையத்திற்கு வேலைக்கு போவதில்லையாம். குழந்தையை பார்க்க நேரம் போதவில்லை என்றான். பெண் குழந்தை. அவளின் முகம் எனக்கு மிகப்பரிச்சயமான ஒன்றாய் இருந்து. வெளியேறும்போது தனசேகரனை முன்னால் போகவிட்டு என்னை திரும்ப பார்த்து சிரித்தாள். எனக்கு அந்த சிரிப்பு அவஷ்த்தையை அளித்தது. அந்த அவஷ்த்தையை நான் சிரிப்பாய் மாற்றி மோகனம் மருத்துவமனையின் நர்ஸ் நந்துவிடம் அளித்தேன். மறுநாள் அவள் எனக்கு அளித்த தேநீர் உப்புகரித்தத்து.

*************************

23 January, 2010

காதற்புள்.




******************************
நண்ப...
ஒரு துரோகத்தின் விலை
காதலைத் தவிர என்னவாய் இருக்க
முடியும்
திரும்பவியலாத நீள் பயணத்தின்
முடிவை அறிய அந்த சிறு
துரோகம் போதுமானதாய்
இருக்கும்போது
கால் இடறும் பளபளப்பும்
ஒழுங்குமற்றதொரு கல்லை
எடுத்து எதிர்வரும் எனது
சட்டைப்பைக்குள் வைக்கும் காதலை
நான் துரோகத்திற்கு விற்றுவிடுவது
எந்தவிதத்தில் நியாயமில்லாமல் போகும்

நண்ப..
நதியொன்றின் குறுக்கில்
நிரப்பப்படும் கருங்கற்களை
காதல் என்று சொல்லாமல்
என்ன செய்வது
கற்களினிடை நுண்ணிய துவாரங்களில்
கசிந்து வெளியேறும் நீரை
நீ துரோகமென்று விளிக்கும்போது

நண்ப...
மாலைக்கருக்கலில்
கூரிய அலகில் இரைகவ்வி
பறக்கும் பசும் புள்ளின் எச்சம்
விடியக் காலை கருக்கலில்
தலைமீது விழுவது காதலின்
துரோகமென்கிறேன் ..
நீ
துரோகத்தின் காதலென்கிறாய்.

*********************

சில நேரங்களில்...?

*********
நீ

ஆமையின் ஓடு போல
நான் சுமந்து திரிகிற
என்னால் உதிர்கவே முடியாத
என் தனிமை.

உயிர் விளையாட்டு.

இதொரு
உயிர்ச்சேதம் நிகழ்த்தக்கூடிய
கண்ணாமூச்சு விளையாட்டு
நீயும் நானுமே
ஆட்டக்காரர்கள்
எனக்கெவ்வளவு தொலைவோ
அவ்வளவு நெருக்கமும் நீ
என் எல்லாமும் நீ
என் எதுவுமில்லாததும் நீ
நீ என் அன்பை
வார்த்தையாக யாசிக்கிற போதெல்லாம்
சொறகளற்று வாயடைத்துப் போன
சகிக்கமுடியாத மௌனம் பதிலாகிறது
மெல்லிய திட்டமிடலுடன் கூடிய
காத்திருப்புதான் -
ஒரு பல்லியின் வேட்டையாடலைப்போல,
உன் கவனம் முழுமையும்
என்னை நோக்கி நகர.
நானொரு கொடூர மிருகம்
நம்பினால் நம்புங்கள்
என் கூர் பல்லும் நகங்களும்
அன்பாலானது
.

NRI


அதொரு பொருட்காட்சி


மேலே நிலா


ஜெயின்ட்வீல், டோரா டோரா


கொலம்பஸ் கப்பல் நடுவே


ஒட்டக சவாரியும்




பாலைவனமிழந்து


இணையிழந்து


காமவுணர்விழந்து


காதலுமிழந்து


நகரத்தில் சம்பாதிக்கிறது


ஒட்டகம் -


ஒரு பயங்கர கனவு போல


விபரீத கற்பனை போல


சுஜாதா கதையில் விபத்தில்


ரத்தம் படியாத அரிசி திரட்டிய


நடைமுறை நிஜம் போல.


*****************
வீடு முழுக்க வானம் - தொகுப்பிலிருந்து : என் புலன்களுக்கு நெருக்கமான கவிஞர் சே. பிருந்தா.
************************************************************************

நான் பெண்

ஒரு காட்டாறு
ஒரு பேரருவி ஓர் ஆழக்கடல்
ஓர் அடைமழை நீர் நான்
கரும்பாறை மலை
பசும் வயல் வெளி
ஒரு விதை
ஒரு காடு
நிலம் நான்
உடல் காலம்
உள்ளம் காற்று
கண்கள் நெருப்பு
நானே ஆகாயம்
நானே அண்டம்
எனக்கென்ன எல்லைகள்
நான் இயற்கை
நான் பெண்

.................. எனக்கு கவிதை முகம் என்கிற தொகுப்பில் : அனாரின் இந்த வைரமுத்து பாணியிலான கவிதைக்கு எனது விளையாட்டுத்தனமான எதிர் கவிதை:

நான் ஆண்

ஒரு உடைபடும் கரை
ஒரு உள் வாங்கும் நிலம்
ஒரு நீர் அடர்த்தி
ஒரு மண்வாசனை
மேகம் நான்
சரிவில் வளரும் போதைப்புல்
காளைமாடு நான்
களிமண்
மூங்கில் கீற்று
மேல்படியும் புழுதி நான்
அகாலம் உடல்
உள்ளம் காலம்
கண்கள் துவர்ப்பு
நானே நீலம்
நானே குரல்
என் எல்லை நீ
நானும் இயற்கை
நான் ஆண்.



****************************************
இப்படி கிறுக்குத்தனங்கள் செய்து வறண்ட பொழுதுகளை சரிசெய்யவேண்டி இருக்கிறது நண்பர்களே.. என்ன செய்வது?

*********************************************


21 January, 2010

இரவில் தோன்றும் கடல் தேவதை.

**********************
முதல் ஜாமம்

வயதேறியதொரு கனவின் விளிம்பில்
பிறந்த கதை சொல்லலானாள் கடல் தேவதை
சிவப்படங்கிய தொடுவானத்தின்
கிடைமட்டத்தில் செய்வதறியாது
கிடந்த ஆழியின் ஆழத்தில்
ஒரு துளி தன்
உப்புத்தன்மை இழந்தது
நிறபிரிகையின் ஏழாம் நிறத்தில்
ஆழி ஒளிர்ந்த கணம்
ஏற்பட்டதொரு சூன்ய அழுத்தத்தில்
பருண்மை கொண்டாள் அவள்
அண்ட சராசரங்கள் நடுங்கியொலித்ததாக
மேற்கு மலை நத்தையொன்று
கூறித்திரிந்தது யாரும் அறியாதது
வெயில் பட்டு உதிர்ந்த செதில்களின் நடுவே
ஈரங்காயாமல் உறங்கிக்கிடந்தவளை
என் அறைக்கு கொண்டு வந்தேன்
தடித்த கனவின் முடிவில்
அவளை யாளி என அழைக்கத்தொடங்கினேன்

இரண்டாம் ஜாமம்

ஆதிக்கனியறியாத யாளியின்
நிர்வாணம் வெட்கமின்றி இருந்தது
ஒளியறியாத வேர்த்தண்டின் வெளிறிய
வண்ணத்தில் மிளிர்கிறது அவளது தோள்
வெளிச்சப்புள்ளிகளாய் கண்கள்
சிறகுகளற்ற அகன்ற முதுகின் வெகுகீழே
நெகிழ்ந்த பிருஷ்டம் பற்றி இறுக்குகிறேன்
இயல்பென உடை அகற்றுகிறாள்
என்னுடம்பிலிருந்து கிளம்பி பரவுகிறது
வெட்கம்
சட்டென்று உப்பரித்த நீராய் மாறி
அறைமுழுதும் நிரம்பி அனைத்தையும்
மூழ்கச்செய்கிறாள் நிதானமாக
எல்லா நீரையும் குடித்து அறையை
சுத்தம் செய்கிறேன்
தரையில் கிடந்த யாளி
வெட்கத்துடன் என்னுடயை
இழுத்து போர்த்திக்கொள்கிறாள்
பின்பு நாட்குறிப்பில் பெருமுலைத்திருக்குமரி
பூப்பெய்தினாள் என குறித்துக்கொண்டேன்

மூன்றாம் ஜாமம்

வெளிச்சத்தின் சூழில்
பிறந்த இருளில்
தன் பெயர் பெறுகிறது ஜாமம்
நிலாவின் பாதரசம் குடித்து
அரற்றத் தொடங்கினேன்
யாளி.. யாளி..
குரலில் அம்பெய்திருன்தான் மாரன்
சுயம் துடித்துக்கொண்டிருந்த
சமயலறைச்சாம்பலில்
திளைத்துக்கொண்டிருந்தாள்
பூனையுருவில் யாளி
அவளது விழிகள் கங்கு பொறிந்தன
விரல் நகங்களை சுவற்றில்
சுரண்டும் ஒலியில் உள்ளழைக்கிறாள்
சமயலறைக்குள்ளான பயணம்
நீள்கிறது யுகங்களாய் ...
ஒரு காற்புள்ளியின் பிறகு
தெறித்துச் சிதறிய சமையலறைக் கத்திகளில்
தோய்ந்திருக்கிறது யாளியின்
நிணம்

நான்காம் ஜாமம்

சகலமும் துறந்து
எச்சிலொழுக உறங்குகிறாள் யாளி
ஆகப்பெரிய பிச்சைப்பாத்திரத்துடன்
தேவதையின் நிதம்பக்கனி பெற
விண்மணிப்பாதங்கலடியில் அமர்ந்திருக்கிறேன்
ஈரத்த்தவுட்டின் வாசனை கசிகிறது
அவளது உடலில் நீள்கிறது ஜாமம்
பாசாங்கற்ற காத்திருப்பின் இடையில்
கூந்தலுக்குள் மறைந்திருக்கும்
யாளியின் முகத்தில் எப்பொழுதும்
இல்லாதவொரு ஒழுக்கம்
ஜாமத்திற்கான பெரும் இருளை
ஒழுங்கற்ற சிறுவில்லைகளாக சிதறச்செய்கிறது
பிச்சைப்பாத்திரம் வெறுமையாய் இருக்கும்
பொழுதுகள் சகிக்கமாட்டாமல்
நான் விழுங்கிய ஒவ்வொரு வில்லையும்
பேரிரைச்சலுடன் கரைகிறது
யாளி
அமைதியாய் உறங்கிக்கொண்டிருக்கின்றாள்

ஐந்தாம் ஜாமம்

ஜாமம் முழுவதும்
வனமூங்கில் உடையும் சப்தத்துடன்
இழுபடுகிற தேரென
ஆகிப்போனது யாளியின் பருண்மை
கூந்தலே வடம்
குழந்தையின் குரூரத்துடன்
என்மீதேறி உருள்கிறாள் யாளி
விசும்பெங்கும் உப்பின் வாடை
கருக்கலில்
அறை முழுதும் கடந்து
பூக்கள் கலைந்த பீடத்தில்
நிலை கொள்கிறாள் யாளி ...
வண்டல் இழுபடும் நதிக்கரையில் நின்று
பிரபஞ்சமும் கேட்கட்டுமென கூவுகிறேன்
யாளியுடனான ஒவ்வொரு புணர்வும்
ஒரு தேரோட்டம்

ஆறாம் ஜாமம்

யாளியின் புதிர்கூந்தலில்
இரவு முழுதும் தரவியலாத
முத்தமொன்றை பிடுங்கி
சதுப்பேறிய அறை நிலத்தில்
நட்டு வைக்கிறேன்
வளரத்தொடங்கிய விருட்சத்திலிருந்து
பறித்த ஆயிரம் வார்த்தைகளை
தின்று
மீன்குஞ்சுகளை பிரசவிக்கிறாள் யாளி
காற்றைக் குடித்து அறைவெளியில்
நீந்தித் திரிகின்றன அவையாவும்
களி கொள்கிறதவற்றின் வேகம்
அதி ஜாமத்தின் முடிவில்
மலடு நீங்கி பொழிவுற்றன யாளியின் உதடுகள்
இடைவிடாமல் திறந்து மூடும்
கதவிடுக்கில் சிக்கித் தவிக்கிறது
எனதான ஆணவம்

ஏழாம் ஜாமம்

சொற்களை விலை கொடுத்து
கடவுளும் அறியாத வகையில்
காலத்தால் ஆன அறையொன்றை வனைந்து
உள்வைத்து பூட்டுகிறேன்
யாளி ... மீன்களை அக்குளில்
பொதித்தவாறு வெளிவிட வேண்டி இறைஞ்சுகிறாள்
உயிர் போகுமென அறியாமல்
அனைத்தும்
கனவென்று அறியப்படும் சாபத்திலிருந்து
ஒரு புல்லை உருவி
உள்ளங்கையில் வைத்து
தினமும் தொழத்தொடங்குகிறேன்
யாளி வளர்க.....
ஆழி வளர்க....
யாளியான ஆழி வளர்க...
ஆழியான யாளி வளர்க..

எட்டாவதும் கடைசியுமான ஜாமம்

பூரண வெளிச்சம்
துயருற்றுப்பொங்குகிறது ஆழியின் சாபம்
சமையலறையிலிருந்து
வெளியேறிப் பறக்கும் யாளியின்
முதுகில் முளைத்திருக்கிறது
நீண்ட மின்னெலென சிறகு.

*************************************************

ரவி திகம்பனின் நினைவாக - 'கள்ளக்காதல்' - கவிதை தொகுப்பிலிருந்து .

**************************************************

20 January, 2010

புத்தகம்


************************


" இப்போது அவர்கள் முறை, வீடு புகுந்து அடித்தார்கள்" - அடியாள் - ஜோதி நரசிம்மன்


இந்த புத்தகம் என்னை மிகவும் இம்சிக்கிறது. வாழ்நாளில் நான் படித்த உருப்படியான புத்தகங்களில் இதுவும் ஒன்று. எளிய, நேரடியான எழுத்து. தமிழகத்தின் மிக முக்கிய உளவியல் சிக்கலை நேரடியாக பதிவு செய்கிறது. புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் ஒரு புதினத்துக்குரிய அடர்குறிப்புகளை கொண்டுள்ளது. இதனையொட்டிய லக்ஷ்மி சரவனக்குமரின் ஒரு கட்டுரையும் http://www.inioru.com/ - ல் வாசிக்கலாம்.


****************************



18 January, 2010

காமடி பீஸ்


***************************
ஆண்ட்ரியா, ரீமா சென் என்று பெயரிடப்பட்ட இரண்டு பெண் உடல்களுக்கு ஒரு தயாரிப்பாளரை முப்பத்து இரண்டு கோடியை செலவு செய்ய வைக்கலாம் ஒரு திருமண ரத்தையும் செய்துகொள்ளலாம் என்று செல்வராகவன் என்கிற இயக்குனர் திலகம் முடிவுசெய்து விட்டதை த்ரில் படமாக தமிழகம் மற்றும் உலகெங்கும் சென்றவாரம் முதல் திரையில் வெளிச்சம் போட்டு காட்டிகொண்டிருக்கிறார். fuck, boob போன்ற ஹாலிவூட் வார்த்தைகளில் முதல் வார்த்தை ஒலி நீக்கம் சென்சாரினால் செய்யப்பட்டிருகிறது. இரண்டாவது வார்த்தைக்கு அவகளுக்கே அர்த்தம் தெரியாது போல. இரண்டு பெண்களும் ஆங்கிலத்தில் சகட்டுமேனிக்கு திட்டிக்கொல்(ள்)கிறார்கள். கசாப்புக்கடையில் மட்டன்கோலா செய்வதற்காக கறியை கொத்துவதை நாம் பார்த்திருக்கிறோம் அந்த கொத்தை திரைக்கதையில் செய்தது செல்வராகவனுக்கு தன முன்னாள் மனைவியின் மேல் இருக்கும் கோபம் மட்டுமே காரணம் இல்லை, அவர் மீது இருக்கும் காதலும் காரணமாய் இருக்கலாம். படத்தின் பின்னை நவீனத்துவமான கடைசி பிரேம் மட்டும் நன்றாக உள்ளது. ஆனால் இரண்டாம் பாகம் என்கிற கண்ணிவெடியை அவரது மூலையிலே புதைத்துக்கொள்ள வேண்டும். (தொடரும் என்கிற வார்த்தையை பார்த்து மக்களின் டாக் அப்படித்தான் இருந்தது). படத்தில் காமடி டிராக்கே இல்லை கதாநாயகன் கார்த்தியை தவிர. மொத்தத்தில் ஹாலிவூடை பகடி .. இல்லை பிரதி எடுக்கும் காமடி பீஸ் இந்த சினிமா. இப்படத்தை எம் ஜி ஆர் பிறந்த தினத்தன்று பார்த்தது தொலைத்தது என் ஊழ்வினை.

**************************

17 January, 2010

ஜனவரி 17

*************

இப்போதைக்கு நான் ரசிக்கும் ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா. தமிழில் ஒருத்தர் கூட இல்லை. (பாவாடை தாவணியில் பார்த்த ஜமுனா ராணி, ஊர்பட்ட திறமையை வைத்துக்கொண்டு மொக்கையான ஹீரோக்களுடன் குத்தாட்டம் போட்ட ஷோபனா, எவர்க்ரீன் ஷோபா, எலும்பே இல்லை என்று பாடிவிட்டு போன சில்க் ஸ்மீதா (சில பெண்கள் பெயர் தெரியாது, ஒன்றிரண்டு படங்களில் நடித்துவிட்டு காணாமல் போனவர்களை நான் கணக்கில் கொள்ளவில்லை) ஆகியோர் தவிர்த்து). பழைய ஹிந்தி பாட்டி நர்கிஸ், கொஞ்சம் வயசாகிப்போன நந்திதாதாஸ், தபு போன்ற தேவதைகளை சினிமாவில் நான் அடக்கவில்லை. மற்றபடிக்கு நான் தமிழிலும் ஹிந்தியிலும் மிகக்குறைவாகவே படங்கள் பார்க்கிறேன். அதனால் பல வாய்ப்புகளை நான் இழந்திருக்கக்கூடும்! சரி உலக சினிமாக்களில் என்னை கொன்று கொண்டிருக்கும் இரண்டு பெயர்கள், சல்மா ஹையக், பெனலோப் க்ரூஸ்

இதையெல்லாம் படித்தால் உங்களக்கு என்ன தெரிகிறது?

நான் நாற்பது வயதை தொட இன்னும் இரண்டே முக்கால் வருடம் முழுதாக இருக்கிறது என்பது தெரிகிறது!

*************

எனக்கு பிடித்த நடிகர் கண்டியில் பிறந்த மருதூர் கோபாலன் ராமச்சந்திரன். விழுப்புரம் சின்னையாபிள்ளை மன்றாயர் கணேசனை எனக்கு பிடிக்காது. மேற்படி மருதூறார் தான் நடித்த திருடாதே படத்தில் 'திருடாதே பாப்பா திருடாதே' என்ற பாடலுக்கு தனது உடலசைவுகளை வெளிப்படுத்தும் விதம் என்னக்கு பெரும் சிலாக்கியத்தை ஏற்படுத்தும். நிறைய படங்களில் அவரின் துல்லிய உடலசைவுகள் பெரும் ஆராய்ச்சிக்கு உட்பட்டவை. தனது மொத்த தேவைகளையும் முன் தீர்மானித்து மிகத்துல்லியமான திட்டமிடுதலால் இயக்கப்பட்டு, அவைகள் அவரால் நிறைவேற்றப்பட்டது. உண்மையிலேயே ஓர் ஆணழகன். அவருக்கு மீசை பொருந்தாமல் போனது வரலாற்று நகைமுரண். மன்றாயர் ஒரு மண்ணாங்கட்டி என்று சொல்வதை விட களிமண் என்கிற வார்த்தை சரியாக இருக்கும் - எல்லா இயக்குனர்களும் அவரவர்களுக்கு தேவையான பாத்திரத்தை தங்கள் கைகளாலேயே செய்து கொண்டார்கள். நாட்டியபேரொளி பத்மினியின் நடனத்தை மறைந்திருந்து பார்த்த போது கலை பொம்மை, ஸ்ரீதேவியுடன் டூயட் பாடும்போது பிழை பொம்மை. மன்றாயர் சாகும் வரை காரோட்டத்தெரியாது என்று சொல்கிறார்கள் - உண்மையாய் இருக்குமானால் அது முரண் நகையின் வரலாறு.

*******

சிரிப்பு நடிகர்கள்: சந்திரபாபு, நாகேஷ், காக்கா, தவிர்க்கமுடியாமல் வடிவேலு. இவர்கள் எல்லாம் பெரும் ஆளுமைகள். தமிழ் சினிமாவால் உலக அரங்கிற்கு செல்ல முடியாமல் வீணாய்ப்போனவர்கள்.

சரளாவையும் ஆச்சியையும் விட்டால் தமிழில் சிரிப்பு நடிகைகள் என்ற வகைக்கு ஆளே இல்லை. துயரம். இரண்டு பெரும் அவுட் ஆப் பீல்ட். குஷ்பூ போன்ற காமடிகளை நான் கணக்கில் சேர்க்கவில்லை.

********

இப்போதைய தமிழ் சினிமாவில் செக்ஸி வுமன் என்று என்னைக்கேட்டால் சிவா மனசுல சக்தி, மதுரை சம்பவம் படங்களின் கதாநாயகி. இதை எழுதும்போது அவரது பெயர் தெரியவில்லை.

********

இன்றைக்கு மருதூறார் பிறந்த தினம். அவரைப்பற்றி எழுதலாமென்று நினைத்து எதையோ எழுதிக்கொண்டிருக்கிறேன். தமிழ் சினிமா என்றாலும் ராமச்சந்திரன் என்றாலும் மோகன் ராஜகோபால நாயுடு ராதாகிருஷ்ணனை மறக்கமுடியாது. வாழ்க அன்னார்களது நாமம்.

*********

15 January, 2010

HOW TO RECRUIT THE RIGHT PERSON FOR THE JOB?

இந்த படத்துக்கும் மேட்டர்ருக்கும் தொடர்பில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.




******************************
HOW TO RECRUIT THE RIGHT PERSON FOR THE JOB?

Put about 100 bricks in some Particular order in a closed Room with an Open window.

Then send 2 or 3 candidates in
The room and close the door.

Leave them alone and come back
After 6 hours and then analyze
The situation.

If they are counting the
Bricks.
Put them in the accounts
Department.

If they are recounting them..
Put them in auditing ..

If they have messed up the
Whole place with the bricks.
Put them in engineering.

If they are arranging the
Bricks in some strange order.
Put them in planning.

If they are throwing the
Bricks at each other.
Put them in operations .

If they are sleeping.
Put them in security.

If they have broken the bricks
Into pieces.
Put them in information
Technology.

If they are sitting idle.
Put them in human resources.

If they say they have tried
Different combinations, yet
Not a brick has
Been moved. Put them in sales.

If they have already left for
The day.
Put them in marketing...


If they are staring out of the
Window.
Put them on strategic
Planning..

And then last but not least.
If they are talking to each
Other and not a single brick
Has been
Moved.

Congratulate them and put them
In Top management

--------------------------------------------------------------------------------

Life is not about waiting for the storms to pass..
it's about learning how to dance in the rain.


---------------------------------------------------------------------------------

என்றொரு ஆதிப்பெண் 4

****************

காமா...

இலைத்துளியின் மேலேயும்

தடாகநீரின் ஆழத்திலும் ஒரேநேரத்தில்

பறக்கும் ஆகாய பறவை நீ

நீரில்விழும் எச்சத்துளியில் களைந்து

மேலேறிப்பரவும் சிறுவட்ட அலைவிரிசல் நான்

களைப்புற்று முகமமிழ்ந்துறுஞ்சும்

வேட்டை மிருகத்தின் தாகம் அது.

காமா..

உயிரெடுத்து வலைப்பின்னும்

உறுபசி சிலந்தியின் இரைக்கான காத்திருப்பு நீ..

இலையிலிருந்து உருண்டுவிழுந்து

வலையின் மீது தொங்கும் சிறுபனித்துளி நான்..

மழைநின்றகருவானில் குளிர்நிலவின் எரிதல் அது.

காமா..

அசந்தர்ப்பங்களின் மீது வன்மத்துடன்

காலம் செய்யும் முத்தத்தெறிப்பு நீ..

முடிவுறா சந்தர்ப்பங்களை தவறவிடும்

ஒழுங்கீனச் சோம்பல் நான்...

மன்னிப்பை உண்டு கொழுக்கும் கடல்பிராணி அது..

காமா..

முத்தம் நீ..

அம்முத்து நான்..

அமுதம் அது.

**********

சொல்லுவதெல்லாம் பொய் 5


***************

21.09.2000 வியாழக்கிழமை
00.07
தவிரவும் இன்று முதல் நான் நாட்குறிப்பை எழுதப்போவதில்லை அங்கயற்கண்ணி. எங்கிருக்கிறாய் நீ. மூன்று நாளாயிற்று நீ தொலைந்து போய். ஒரு வருடத்தில் எனக்கு மூன்று மரணம் அதிகம்தானே. மரணம் கண்டு மிரளும் என்னை மரணத்தாலேயே அடிக்கிறது வாழ்வு. இதோ பார் ராமனை, உன் காதல் கணவன் பேயறைந்ததுபோல் சுருண்டுகிடக்கிறான். அவனையும் இழந்துவிடுவேனோ. முதல் முறையாக நான் இறந்துபோனால் நல்லது என்று படுகிறது. மரணம் எவ்வளவு நிம்மதி. விடுதலை. ஆம். ஆனால் எதோ பயம். கற்பனை செய்யமுடியாத மிரட்சி. ஆழ்துளைக்கினற்றுக்குள் விழுந்துவிட்ட நடுக்கம். அப்பாவின் இறப்பு எதிர்பார்த்தது. அம்மா எதிர்பார்க்கவில்லை என்றாலும் அப்பா இல்லாத அம்மா இல்லாத அம்மாதான். அவளுக்கு அது தெரிந்தே இருந்திருக்கின்றது. இல்லையென்றால் அப்பா போன நாற்பது நாட்களில் புன்னகைத்த முகத்துடன் தூக்கத்திலேயே எப்படி இறக்க முடியும். உறங்கப்போகும்போது அம்மா. விடிந்ததும் உடல். புன்னகைக்கும் முகம் கொண்ட உடல். நிச்சயமாக அவள் சிரித்துக்கொண்டுதான் இருந்தாள். தெரியுமா, உறங்கப்போகும் முன் அவள் என்னிடம் சொன்னாள்: அவளத்தேடிப்போகாத.. அவளா வருவா.. நீ கவனமா இரு..எங்கப்போனாலும் ராமனக்கூட்டிகிட்டு போ..' நான் குமுதவல்லியை சொல்லுகிறாள் என்று நினைத்தேன் ஆனால் அம்மா உன்னைப்பற்றிதான் சொல்லியிருக்கிறாள். ஆனால் நான் இப்போது என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லை. தேடிப்போகாத என்றும் சொன்னாள். போனால் ராமனைக்கூட்டிகிட்டு போ என்றும் சொன்னாள். எதை செய்வது. ஒரு வாய் உணவு உண்ணும் தெம்பு கூட இப்போது ராமனிடம் இல்லை. எவ்வளவு உல்லாசமாக திரிந்த திருடன் இவன். மூன்று நாட்களாய் எதையோ முனுமுனுத்துக்கொண்டிருக்கிறான் விடாமல். கண்களில் நீர் வழிவது குறையவில்லை. என்னடா சொல்கிறாய் என்று கேட்டால், உதட்டை கோணிகொள்கிறான். உன்னிப்பாக கேட்டால் 'அதை தொட்டிருக்கக்கூடாது.. அது ஊழிப்பேய்.. சிலையில்லை.. கோரதாண்டவம்.. பாவம் செஞ்சுட்டேன்.. அதான் கண்ணனை கொன்னுட்டா.. அவளையும் தூக்கிக்கிட்டு போய்ட்டா.. அது சிலையில்ல .. கோரதாண்டவம்..' இவற்றை தவிர அவன் வாயில் ஒரு வார்த்தையில்லை. கண்களில் ஒளி மங்கிக்கொண்டிருக்கிறது. உதடுகளில் எச்சில் வழிந்தவண்ணம் சுருண்டுகிடக்கிர்றான். உனக்கு கண்ணனின் மரணம் தெரிந்திருக்கிறது அங்கயற்கண்ணி. என்ன பாவம் செய்தாய் அப்படி உன் மகனை காவு கொடுக்குமளவுக்கு. இவன் என்னவென்றால் எல்லாவற்றிற்கும் அவன்தான் காரணம் என்று புலம்புகிறான். குழந்தை இறந்த போது நான் வாங்கி கொடுத்த உடையை போட்டிருந்தான். நன் திருடியதுதான் பாவமாகிவிட்டதோ. மூன்று மரணம், உன்னைக்காணவில்லை, ராமனை தேற்றவேண்டும் ஒரு எளிமையான மனிதனுக்கு இவ்வளவும் நேர்ந்தால் என்னதான் செய்வது. குமுதவல்லி போனதுகூட நான் எனது வன்மமான செய்கைகளில் பிரதிபலன் என தேற்றிக்கொள்ள முடிந்தது. இந்த நாளில் நான் இற்றுப்போகும்படியான நிகழ்வுகளை எப்படி எதிர்கொள்வது. குழந்தை கண்ணனின் ஆசன வாயிலிருந்து தொடர்ந்து வெளியேறிய வாயுவையும் திரவத்தையும் ஏன் யாராலும் நிறுத்த முடியவில்லை. அவன் அழும் தெம்பிழந்து அரற்றி அமைதியாகி சலனமில்லாமல் அடங்கிப்போனது நாடகமில்லாமல் வேறென்ன. அது எப்படி உண்மையாக முடியும். வெள்ளைத்துணியில் அவனை பொட்டலமாய் கட்டியபோது நீ எப்படி பார்த்துக்கொண்டிருந்தாய் கண்ணில் ஒரு துளி நீர் இல்லாமல். ராமன் செய்த ஓலம் ஊர் இதுவரை பார்த்தறியாதது . நீர்தெளித்து மண்ணைத்தோண்டி ஒரு விதையைப்போல அவனை புதைத்ததை ஒரு நடுக்கமும் இல்லாமல் என்னால் எப்படிச்செய்ய முடிந்தது. எனக்கு ஏன் அப்போது மரணம் நிகழவில்லை. அழுகை வரவில்லை. அங்கயற்கண்ணி நீ எங்கு போய்விட்டாய். உன்னைத்தேடித்தான் இனி என் பயணம் என்பதை நீ முடிவுசெய்துவிட்டாயா. டிசோசா வரச்சொல்லியிருக்கிறாள். அவளும் வரும் போது ராமனை கூட அழைத்து வரச்சொல்லியிருப்பது இவையெல்லாம் எதோ ஏற்கனவே செயல் படுத்தப்பட்ட நடைமுறைகள் போன்றதொரு தோற்றத்தை எனக்கு ஏற்படுத்துகிறது. புதிதாக வெத்திலைப்பாக்கு போடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் ஜாதகக்காரர் கொடுத்த சுவடியை வேறு கொண்டுவரவேண்டுமாம். என்ன நடக்கிறது அங்கயற்கண்ணி, எங்கிருக்கிறாய் நீ.. ஜாதகக்காரர் சொன்னது போல உன்னை காண சுவடிக்காலத்துக்குள் நுழயவேண்டுமா.

***************
தொடரும்...
**************




14 January, 2010

நண்பர்களே....

பொங்கல் வாழ்த்துக்கள். எல்லோருக்கும்.

13 January, 2010

காதல்



1994-1995 : இவ்வருடங்கள் நான் காதலில் உச்சக்கிறுக்கு கொண்டிருந்த நாட்கள். மகாக்கவி பாரதியின் இரண்டே பாடல்களை திரும்பத்திரும்ப படித்துக்கொண்டிருப்பேன். அவைகளை ஒரு முறைப்படித்தால் என் காதலுக்காக உடனே இரண்டு கவிதைகளை எழுதிவிடுவேன். நான் எழுதிய கவிதைகள்தான் என் கடிதங்களில் இருக்கும் பாரதியைப்பற்றி ஒரு குறிப்பும் இருக்காது! இன்றைக்கும் அவைகளைப்படித்தால் எனக்கு காதல் கவிதைகளை எழுதுவதில் எந்த சிறமமுமிருக்காது.

பாரதியின் சின்னஞ்சிறு சிறுகிளியே கண்ணம்மா செல்வக்களஞ்சியமே, சுட்டு விழி சுடர்தான் ஆகிய இரண்டும்தான் அவை. முதல் கவிதையில் - அன்பு தருவதிலே உனக்குநேர் ஆகுமோர் தெய்வமுண்டோ -என்ற வரியும் இரண்டாவது கவிதையில் - பட்டு கருநீலப்புடவை பதித்த நல்வயிரம் நட்டநடு நிசியில் தெரியும் நட்சத்திறங்களடி - என்ற வரியும் என்னை பித்து பிடிக்க வைத்தவை.

பாரதியின் ஒவ்வொரு அணுவும் காதல்.

அவருடைய மற்றொரு கவிதையில் என் காதலை நிறைத்துக்கொண்டேன். அது இவ்வாறு தொடர்கிறது என்று எண்ணுகிறேன்:

நெரிந்த திரைக்கடலில் நின்முகங்கண்டேன்
நீல விசும்பினிடை நின்முகங்கண்டேன்
திரிந்த நுரைதநிடை நின்முகங்கண்டேன்
சின்ன குமிழ்களில் நின்முகங்கண்டேன்

பிரிந்து பிரிந்து நிதம் மேகம் அளந்தே
பெற்ற துன் முகமின்றி பிறிதொன்றுமில்லை
சிரித்த ஒலியினுள் கை விலக்கியே
திருமித்தழுவியத்தில் நின்முகங்கண்டேன்

என்ற கவிதை எவ்வளவு நிஜம். காதல் அந்த அனுபவத்தை எனக்கு வழங்கியது. என் கவிதை வரிகளின் ஆதிச் சொற்கள் மகாகவியினுடையது.

**********

அந்த நாட்களில் நான் படித்த ஒரு மொழிபெயர்ப்பு கவிதையின் தழுவலாக நான் என் காதல் கடிதத்தில் எழுதிய கவிதை(!) கீழே:

*****************
முன்ஜென்மத்தில் நான் ஏதாவது
அதிசயம் புரிந்திருக்க வேண்டும்.
இந்த ஜென்மத்தில் உன்னை எனக்கு அனுப்பியிருக்கிறார்கள்!
ஏதாவது திடுக்கிடும்படி செய்திருப்பேன்
திருக்குறளை இயற்றியிருக்கலாம்
ஒரு பவளத்தீவு மக்களுக்கு சுதந்திரம் அளித்திருக்கலாம்
அல்லது
பஞ்சாயத்து போர்ட் தேர்தலை நடத்தியிருக்கலாம்
எதற்காக உன்னை எனக்கு அனுப்பினார்கள் ?
பெரியகோவிலை கட்டியிருக்க வேண்டும்
மூட்டுவலிக்கு மருந்து கண்டுபிடித்திருக்க வேண்டும்
அல்லது
ஐஸ்கிரீம்.. தொசைசட்டி.. அதிரசம்
கண் மை .... கால்கொலுசு போன்ற
ஏதோவொன்றை கண்டுபிடித்து விட்டேனென்று தோன்றுகிறது
எதற்காக உன்னை எனக்கு அனுப்பி வைத்தார்கள்?
**************

தொன்னுத்தியாராம் வருடம் நான் எழுதிய கடித்தத்தில் இந்த கவிதையை எழுதியிருக்கிறேன். காதல்.!

*******************

பண்ணு சுதி நீ எனக்கு பாட்டினிமை நான் உனக்கு..

*********************

சோமா வனதேவதா...

ரமேஷ் வைத்யாவின் பாட்டை வழியாக கண்டுபிடித்து விட்டேன்.

********************

முல்லைப்பூ வாசம் மூக்குல வீசும்

கன்னிப்பூ வாசம் என் நெஞ்சுக்குள்ளே

அத்த மகளே மெத்த வேணுமா

நித்தம் ஒரு புத்தம்புது முத்தம் கொடுநீ - இந்த

கன்னிப்பெண் கண்ணுக்குள் கொட்டிக்கிடக்குற

கற்பன எத்தனை கோடி - இவ

சிங்காரக்கொண்டைக்கு முல்லைப்பூ வை - அந்த ( முல்லைப்பூ வாசம் ...)

குண்டு விளையாடச் சேக்கலன்னு ரெண்டு

வண்டு கண்ணில் கண்ணீர் வடிச்சவளே - நான்

தோத்த வருத்தத்த அழுது கரைக்கையில்

தேத்தி என் கண்ணீரை தொடச்சவளே

வெடலப்பருவத்து வெளையாட்டுக்கதைஎல்லாம்

நெஞ்சுக்குள்ளே இன்னும் ஞாபகமா ... (இவ சிங்காரக்கொண்டைக்கு...)

வைகை மணல்கூட்டி வீடு கட்டி அந்த

வாசலில் எம்பேர வரஞ்சவளே - அந்த

பாதி விளையாட்டும் படிப்பும் நிறுத்திட்டு

பச்ச கிடுகோரம் மறஞ்சவளே

அழுது பிரிஞ்சாலும் அத்தானுக்குங்கனவு

பொழுது விடுஞ்சாலும் போகலையே ( இவ சிங்காரக்கொண்டைக்கு ...)

சொந்தபந்தம் உள்ள உறவுக்குள்ளே - வேற

சாதி சனமுன்னு பேதமில்ல சொந்தம்

ஆயிரமானாலும் காசு பணத்துல

நீயும் நானும் சமானமில்ல

தோள் தொட்ட கன்னிக்கு பூமால நான் போட

நாள் வந்து சேராம போயிடுமோ - இவ சிங்காரக்கொண்டைக்கு முல்லைப்பூ...

****************

ஆரம்ப தொன்னூறில் எழுதியிருப்பார் என்று நினைக்கிறேன். தொடர்ந்து அவரைப்பற்றி தகவல்களை அறிந்து வருகிறேன். ரமேஷின் அறிவுத்தேட்டமும் மனத்தேவைகளும் வாழ்வின் மீதான அவரின் வன்மமும் எனக்கு மிகப்பெரிய உளவியல் சிக்கலை உருவாக்குகிறது. சுயஎள்ளலும் தார்மீகத்தின் மீது காறித்துப்பும் அவரது இருப்பு முறையும் என்னை கிளர்வு கொள்ளச்செய்கிறது .

********************

ரமேஷ் வைத்யா என்கிற சோமா வனதேவதா .. என் மனநெருக்கமான ஆளுமை.. உன்னை தொடர்ந்து நான் ரசிக்கிறேன்..

உனக்கு என் அன்பு.

**********************

12 January, 2010

சொல்லுவதெல்லாம் பொய் 4

******************

சன்னாசியின் இரண்டாயிரத்து நான்காம் வருட நாட்குறிப்பில் மடித்து வைத்திருந்த காகிதத்தில் அவனது கவிதைக்குறிப்பு. இதற்கு அவன் திருமறை ஒன்பது என தலைப்பிடிருந்தான்.


*****************


ஏதுமற்ற பால்வெளி

சாத்தியமின்மையின் நிதர்சனம்

நிழல்தேடிய பருப்பொருளின் இயலாமைசிரசின்

செங்குத்தாய் வெப்பரேகை

பகலின் மொத்த விசாலமும் அடங்கும்

ஒற்றைக்கணம். குறுக்கீடுகள் அற்ற

பாதையின் நடக்கிறேன் துயரம் தோய்ந்த

பாடலாய். எதிர்வருகிறீர்கள் எல்லோரும். நான்

தனியாய் எந்தவொரு துணிவு கனிவு

மற்றும் ஏதுமற்ற பால்வெளியுடன்

உங்களை எதிர்கொள்கிறேன்

உங்களுக்கென்று ஒன்று இருந்ததை

மட்டும்சுட்டிக்காட்டியவண்ணம்

இருக்கிறீர்கள் என்பதைப்பற்றிய ஞானம்

எனக்கில்லாமல் ஒரு பனையேறியின் கவனத்தை

பெற முயற்சித்துக்கொண்டிருபேன்

பனையேறி ஒரு பெண்ணாய் காணும்

நாளில் என் மரணம் உறுதிசெய்யப்படும்

அல்லது எனக்கு நிதமும் ஒன்பது கலயம்

குருதி பனையிலிருந்து பீய்ச்சி தரப்படும்

என்பதான சமிக்கையை பெற

ஒரு சபித்தல்

நிகழும் பின்னான ஒவ்வொரு

முழுநாளும் பனைக்குருதியின்

வெறியால் மழுங்கடிக்கப்படும். நான்

மகிழ்வுகொண்ட பேரிண்பனாக

என்னைக்கற்பனைசெய்ய உதவுமது. என்

பல்லாங்குழிப்பருவம் மேலெழும் நான்

உங்களுக்கு பல்லாங்குழி வித்தையை

அறிவிக்க முயல்வேன் சகலமும் சுலபமும்

இனிமையும் ஆகும் நடைபாதையில்

முற்கள் முளைக்கும் சிறு நெருஞ்சியும் பூக்கலாம்

உங்களுக்கும் அது

பிடிக்கும்அனைத்தும் உணர்ந்த ஞானியென

நான் என்னை அறிவித்துக்கொள்வேன்.

நீங்கள் அனைவரும் மேலும்

என்னை வெறுக்கத்தொடங்குவீர்கள்

அதையறியாமல் நான் பனையேறக்கற்றுக்கொள்வேன்

பனைக்குருதி பீய்ச்ச நான் தனிமையில்

பனை நாடுவேன் நீங்கள்

பனைகள் மூன்றாம் சந்ததிக்கானவைகலென

கதறித்துடிப்பீர்கள். ஏதுமறியாதவன் போல

இருந்து கொள்வேன் எனக்குத்தெரியும்

காலத்தின் வேகம் என்றவாறுநீங்கள்

சுயமாக புலம்பித்திறியும் மனப்பிரழ்வாளநென

என்னை பிரகடனபடுத்துவீர்கள். அதையேற்று

குடும்பங்களும் தெருக்களும் சேர்ந்த

கிராமமொன்றின் நாற்சந்தியில்

மனிதத்தன்மையற்றவனாய் அறியப்படும்

அல்லது வெயிலையோ மழையையோ அணிந்தவுடலுடன்

அலையக்கூடும் வேளையில் அடுத்தது

என்னவென்று நான் மறந்துபோவேன்.

திரும்பப்பெறவியலாதஞாபகச்சிக்கலுக்குள்

அமிழ்ந்துபோவேன். பெயரற்ற வட்டமும்

வெள்ளையுமான பிரகாச உஷை

கொண்ட பள்ளிக்குழந்தைகளின் குறிப்பில்

நிலவென அறியப்பட்ட பெரிய

கோளம் நேர்க்கோட்டில் முகில்களை

விரட்டிக்கொண்டிருக்கும் நேரத்தில்

அக்கிராமத்தின் தாய்நகரின்

அரசகட்டிலில் அமர்ந்தவனின் அறிவிப்பால்

உங்கள் முதுகு மீது கசையடி விழும்

கடவுள் எனும் சொல்லின் தூதர்கள்

அரசன்தான் மருவிக்கடவுளானான் என்று செய்தி

சொல்லிய கணம் நான் எனதான எட்டாவது கலயம்

தேடி மூன்றாம் தெரு கடப்பேன். கடவுள்

மருவி அரசனானான் என திருத்திய பதிப்பில்

அச்சுப்பிழை குறிப்புடன் நாழிதல் கண்டு

சுயமிழந்து பிறழ்வாய் அரற்றத்தொடங்குவேன்.

தாய்நகரிலிருந்து பெருங்கலயம் தரவாகி

பெருமாள் கோவிலின்

முச்சந்தியில் வைக்கப்பட்டிருக்கும். பெருங்கலயம்

மரணமென பறையப்பட்டிருந்த அவ்வூரின்

ஏழாம் தெரு கடந்து ஐந்தாம் கலயத்தில்

நுழைந்து நுழைந்து நுழைந்து

வெளியேற வெளியேற வெளியேற

அடுத்தது என்னவென்று உங்களுக்கு

ஏற்ப்பட்ட குழப்பம் எனக்கு நிகழாவண்ணம்

நான் நான் நான் நான் நான்

ஐந்து முறை நீங்களாக

மாறியதும் ஆறு ஏழு எட்டு தொடர்ந்து

ஒன்பதாம் கலயம் என்னை உங்களிடமிருந்து

மீட்டுத்தரும். பின்பு நான் முற்றிலும்

புதிய வூரில் ஆதி மொழி பேசும்

ஆண்களிடம் நாணயங்கள் பெற்று உடலின்பம்தரும்

பெண்ணாயிருந்து அவர்களுக்கெதிராக வெளியேறி

சகலமும் துறந்த முனிவனொருவனின் பதிவிரதையாவேன்

நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய வென

முனிவன் உச்ச நேரத்தில் உளரும்

போதுகடவுளென அரசன் வருவான்.

வாளுருவி முனிவனைக்கொன்று

என்னை அந்தப்புரம் சேர்ப்பான் பகலிரவற்ற

புணர்வில் அமைச்சனின் மகள்

எனக்கு பிறப்பாள் என தோன்றும்

கணம் சாலையின் ஓரப்பூன்காவில் மண்

கிளரும் கிழவன் தன் பால்யத்தில் செய்த

வன்புணர்ச்சியின் ஞாபகத்தில்

வெடித்த சிரிப்பொன்றாய் மாறி

புல்வெளியில் நடக்கத்தொடங்குவேன்.

இயலாமையால் தொடங்கிய நாளின்

இறுதியில் இரண்டு மைதுனம் கழித்து

தூங்கமுடியாமல் பிரபஞ்சத்தை யோனியாக்கி

பால்வெளியில் வெளியேறியபின் நீங்கள்

பெண்களாய் மாறி நீண்ட அங்கிகள் அணிந்து


வெகுதொலைவில் மனப்பிரழ்வாளனான என்னை
பற்றி சிந்திக்கக்கூடும் என்கிற கற்பனையொன்றின்
விளிம்பில் நான் தூங்கத்தொடங்குவேன்
விடியும் பொது மீண்டும் ஒற்றைப்பாழ்வெளி
சாத்தியமின்மையின் நிதர்சனம்
நிழல் தேடும் பருப்பொருளின் இயலாமை.
வெயில் நிழலற்ற மரமற்ற உங்களை
நான் நான் நானென எதிரொலிக்கும் மலை
பின்பு எல்லாம் முடிந்த உங்களால் யூகிக்கவே
வியலாத தனிமை ஆகியவற்றின் முன்னிலையில்
உங்களை கதறக்கதற புணர்ந்த இந்த பாடலை
முடிவிற்கு அழைத்துவருவேன். பின்பு நீங்களும் நானும்
எதிரெதிர் திசைகளில் கடந்து செல்வோம்
இறைவன் ஆண் பெண் எனப்படுகின்ற பருப்பொருளை
படைத்துக்கொண்டிருப்பான் சொற்கள் மீது எந்த
நம்பிக்கையையும் இழக்காத என்னைப்பார்த்து
வியந்தவாறு.



******************************
தொடரும்
***************************

06 January, 2010

சொல்லுவதெல்லாம் பொய் 3


********

29.04.1997
00.06
போன வெள்ளிக்கிழமை தேனி வந்திருந்தேன். அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. நிறைய சிகரெட் பிடிக்கிறார். ரம் இல்லாமல் இரவு தூங்குவது இல்லை. அம்மாவுக்கு பழகிப்போய்விட்டதாம். அப்படியே உன்னையும் பார்க்க வரலாம் என்று நினைத்தேன். முடியவில்லை. காலையில் வந்து அன்று இரவே ஊர்திரும்ப வேண்டியதாகிவிட்டது. நாள்முழுக்க வீட்டிலேயே இருந்தேன். காலையில் அம்மா தக்காளியும் உழுந்தும் போட்டு சட்டினி அறைத்திருந்தார்கள். சாப்பிட்டு எவ்வளவு நாட்களாயிற்று. எனக்கு அந்த சட்டினி பிடிக்கும் என்று எபோதுமே அம்மாவுக்கு தெரிந்திருக்கிறது. அப்பா மிகவும் சோர்த்து இருந்தார். உடல் ரீதியாகத்தான். மனம் எப்பொழுதும் போல உற்சாகம். சுகவாசி. சுத்தமாக மரண பயம் இல்லை. எனக்கு எப்பவும் போல நிறைய மரண பயம். யோசித்துப்பார்த்தால் அங்கயற்கண்ணி, ஒவ்வொருவருக்கும் தன் மரணத்தை விட தன் தகப்பனின் மரணம்தான் அதிக பயத்தை தரும்போல. அப்பா இறந்துபோவதைப்பற்றி என்னால் கற்பனை கூட செய்யமுடியவில்லை. ஆனால் உனக்கு ஞாபகம் இருக்கிறதா, ஒரு தகப்பனால் மரண பயத்தை விட அதிகப்படியான பயத்தை தரவியலும் என்பதை அப்பா நிரூபித்ததை. அவர் முதலில் கண் தானம் செய்தார். யாரும் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. அடுத்த வருடமே அவர் புகைப்படம் ஒன்று நாளேட்டில் வந்திருந்தது. அவர் தன் உடலை தானம் செய்திருந்தார். மருத்துவக்கல்லூரிக்கு. ஆராய்ச்சிக்கு உதவுமாம். நடுங்கிப்போய்விட்டேன். நாளொன்றுக்கு அனாதைப்பிணங்கள் எத்தனை கிடைக்கின்றன தெரியுமா அரசு மருத்துவமனைகளுக்கு. தமிழ்நாட்டில் மட்டும். இவரின் அறம் ஒரு பிரயோசனமும் இல்லாததது என்பதை எப்படி சொல்லுவேன். தேனிக்கு நான் போயிருந்தபோது நல்ல வெயில். கோடை ஆரம்பிப்பதற்கு முன்னமே இவ்வளவு வெயிலா. சென்னையில் இருப்பது போல உணர்ந்தேன். தேனியில் இந்தளவுக்கு வெயில் அடித்தால் உலகம் வேறு நிலைக்கு மாறுகிறது என்பதை சுலபமாக புரிந்து கொள்ளலாம். பூமிக்கு சனிபிடிக்க தொடங்கிவிட்டது. நீ சொன்ன மாதிரி கவிதை எழுத முயற்சி செய்துபார்த்தேன். சரியாக வரவில்லை. அவற்றின் கருக்களை சிறுகுறிப்புகளாக பத்திரப்படுத்திவைக்கிறேன். எப்பொழுதாவது உன்னிடம் காண்பிப்பதற்கு.

12.12.1998

00.07

குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். ....................................................................................................



..........................................................................................................குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். .................................




இன்றுடன் மூன்று வருடங்கள்.........


02.11.96

00.07


டிசாசொவுடன் சென்னையில் இருந்தேன் இன்று. நம்பமுடியவில்லை. டிசாசோ சென்னைக்கு வந்திருந்தாள். நேராக வீட்டிற்கு வந்து கதைவை தட்டும் போது ஆறேகால் மணி. என்ன கொக்குப்பையா காலையில் சீக்கிரம் எழும்பும் பழக்கத்தை மறந்துவிட்டாயா.. என்கிறாள். கனவு என்றுதான் நினைத்தேன். போர்ச்சுகலில் இருந்து சாந்தோம் ஆலயத்திற்கு வரும் பாதிரியை பார்க்க வந்திருக்கிறாள். அவளுடன் வந்தவர்களை சர்ச்சுக்கு அனுப்பிவிட்டு இங்கே வந்துவிட்டாள். அவள் முதல் முதலில் என்னை கொக்குப்பையா என்று அழைத்தபோது நான் எட்டாம் வகுப்பு முழுப்பரிச்சை விடுமுறையில் இருந்தேன். அங்கயற்கண்ணி பதினோராம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள். நான் ஒன்றும் அவ்வளவு உயரமான பையன் இல்லை. ஆனால் எந்நேரமும் ஒருகாலைத்தூக்கி எதன் மீதாவது வைத்து நின்றுகொண்டிருப்பேன். ஒற்றைக்காலில் நிற்பதனால் கொக்குப்பையன். அவள் அப்படி சொல்லும் வரை அப்படி ஒரு பழக்கம் இருந்ததை நான் உணரவே இல்லை. அதன் பிறகு அதை உணர்ந்தாலும் அந்த பழக்கம் என்னை விலகவில்லை. இந்த விஷயம் அறிந்த பையன்கள் ஒற்றைக்காலைத்தூக்கி ஒன்னுக்கு போகும் நாயை பகடி செய்து என்னை நாயப்பன் என அழைக்கத்தொடங்கினர். இரண்டு பேரும் கிளம்பி நடராசன் கடையில் இட்டிலியை சாப்பிட்டுவிட்டு ஆட்டோவில் ஏறி சாந்தோமில் இறங்கினோம். புனித தாமசின் பிணத்தின் மேல் நின்றிருந்த வழிபாட்டு ஆலயம். மிகஅழகான கட்டிடம் அங்கயற்கண்ணி. 'பென் துமா' வென போர்த்துகீசியர்களால் ஆயிரத்து ஐநூற்று இருபத்து மூன்றாம் வருடம் முசல்மானிடமிருந்து மீட்டு கட்டப்பட்ட தேவாலயம். 'பென் துமா' வென்றால் என்னவென்று கேட்டேன். தாமசின் வீடு என்று அர்த்தமாம். தாமஸ் உள்ளூர் அரசியலுக்கு பயந்து வீட்டை விட்டு நாலு கிலோமீட்டர் தெற்கில் இருக்கும் அடர்ந்த காடுடைய குன்றின் நம்ம ஊர் முருகன் சாமி ஸ்டைலில் சென்று தஞ்சம் அடைந்து அங்கிருந்தவாறு புனிதப்பணி செய்து நல்லபேர் பெற்று பின் சொந்த வீட்டில் அடக்கம் பண்ணிவிட்டார்கள். இப்பவும் அந்தகுன்று வீடுகலடர்ந்த கரடாக செயின்ட் தாமஸ் மௌன்ட் என நெரிசலடைந்து கொண்டிருக்கிறது சென்னையில். கடற்கையில் அலைந்தோம். மணல் சிப்பம் ஒன்றை செய்தேன். எப்பொழுதும் போல ஒரு குடிசை. அதில் ஏறி மிதித்து தன் குழந்தைத்தனத்தை வெளிப்படுத்தினாள் டிசொடா. பஸ் ஏற்றிவிட்டு வீட்டுக்கு வந்து அரைப்போத்தல் ரம்மை பக்தவச்சலம் வருவதற்கு முன்பாகவே குடித்துவிட்டு கண்களில் நீர் வழிய வழிய அழுதேன்.

*******************************

தொடரும் ....

**********************************

05 January, 2010

சொல்லுவதெல்லாம் பொய் 2




* * * * * * * ** * *




இடைக்குறிப்பு




சன்னாசி குடும்பத்தை பற்றிய வரைவு விளக்கம்:




ஆசிரியர் பணியை குமுதவல்லியின் புகாரால் விடநேர்ந்த சன்னாசி தற்சமயம் சென்னையில் ஒரு அரசு தத்தெடுத்த தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிகிறான். இவன் மனைவி மற்றொருவனுடன் ஓடிபோனகதை வேறு காலத்தில் வேறு அத்தியாயத்தில் வரும். இவனுடைய அக்கா அங்கயற்கண்ணி. செவுலி. மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் தங்கராஜ் கௌண்டர் பெற்றோர். இப்போதைக்கு இவர்களை எனக்குத்தெரிந்த தேனிமாவட்டத்தில் தேனி அருகே இருக்கும் பழநிச்செட்டிபட்டியில் வாழ வைத்திருக்கிறேன். பூடகம் நிறைந்த அங்கயற்கண்ணியின் கதை தொன்மத்தில் வரும்.




* * * * * * * * * *









27.12.1991 வியாழன் இரவு.

00.03



ஜாதகக்காரர் மிகவும் பயமுறுத்தி விட்டார். ஆயுள் ஐந்பத்து ஐந்துதானாம். முப்பது வயது இன்றைய தேதிக்கு. இன்னும் இருபத்து ஐந்து வருடங்கள்தான். காலத்தின் வேகம் எனக்கு தெரியும் அதனால்தான் பயம். காலம்தான் எவ்வளவு வேகமானது. பயத்தில் வயிறு கலங்கி இரண்டுமுறை கழிப்பறையை சுத்தம் செய்தேன். ஜாதகக்காரர் முன்ஜென்மங்களைஎல்லாம் விவரித்துக்கொண்டிருந்தார். சோழர் காலத்தில் நான் படைவீரனாகவும் இரண்டு பொண்டாட்டி காரனாகவும் ஏக காலத்திலிருந்ததுதான்இந்த பிறவியில் நான் அடையும் துன்பத்துக்கு காரணம் என்றான். பரிகாரச்செலவு எனக்கு கட்டுபடி ஆகாததால் ஜாதகக்காரரின் சாபத்தையும் சேர்த்து வாங்கும்படி ஆயிற்று. ஆனாலும் அனுமார் கோவிலில் போய் பிரதி வியாழன் சாமி கும்பிடுவது என்கிற எளிய பரிகாரம் எனக்கு பிடித்துப்போய்விட்டது. காலையில் எழுந்து குளித்துவிட்டுத்தான் கோவிலுக்குப்போக வேண்டுமா என்ன, அதுவும் டிசம்பர் குளிரில். நேரத்தில் எழுந்திருப்பதே அதிசயம். பல்தேய்த்து முகம்கழுவியதும் உடல் நடுங்கியது. மெட்ராசில் இவ்வளவு குளிர் என்றால் தேனியில் எப்படி இருக்கும். ஒரு வருடத்திற்கு வாராவாரம் வியாழகிழமை அனுமார்கோவிலுக்கு சென்று வந்தால் நல்லது என்றால், அதை செய்வதில் ஒன்றும் தப்பில்லை என்றே தோன்றியது. கோவிலில் ஏற்படும் தனிமையும் ஏகாந்தமும் பிறகு அதே வியாழன்களில் வரும் கனகாம்பரம் வைத்த பெண்ணும் - இடது ஆள்காட்டி விரல் பாதி இல்லை - மிகவும் பிடித்துப்போய்விட்டது. அவள் பெயர் அனிதா என்று வைத்துக்கொண்டேன். பெயர் தெரியாத எல்லாப்பெண்களும் எனக்கு அனிதாதான். அவளுக்கு அனிதா என்கிற பெயர் பொருத்தமாகத்தான் இருந்தது. அனுமார்கோவிலுக்கும் பெண்களுக்கும் என்ன சம்பந்தம். ஆனாலும் பெண்கள் அனுமார்கோவிலையும் விட்டுவைப்பதில்லை. டிசொசாவிற்கு கர்த்தரை பிடிக்கிற அளவுக்கு கிருஷ்ணனை பிடிக்கும், ராமானை சுத்தமாக பிடிக்காது. எனக்கும் கிருஷ்ணன் தான் . பெண் தெய்வம் காளி. அங்கயற்கண்ணி நீ ராமனைக் கட்டியழும் பெண்.





2 9.12.1991 சனிகிழமை இரவு





00.04





தனித்தன்மை வாய்ந்த இவ்விரவில் உனக்கு நான் எழுத வாய்ந்த தருணம் மிகவும் நெகிழ்வூட்டுவதாயும் வன்தன்மை கொண்டதாயும் உள்ளது. நமதான இத்தனைவருட நட்பில் நான் உனக்கு கடிதம் எழுதக்கூடும் என்று காலக்கடவுளுக்கு கூட தெரியாது என்கிற என் நம்பிக்கை எவ்விதத்திலும் மூடநம்பிக்கையல்ல. உன் செயல்கள் மீதான என் நம்பிக்கைஇன்மை உன்னால் எந்தவித தடங்கலும் இல்லாமல் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சிலைத்திருட்டு தொடர்பாக சிறையிலடைக்கப்பட்டிருக்கிறாய். வாழ்வில் முதல்முறையாக இயற்கையாக்கப்பட்ட சமூக நிஜம் உன்னை வந்தடைந்திருக்கிறது. உன் செல்லரித்த மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்தப்பட்ட வீராப்பு சொற்கள் எந்த பயனுமின்றி குழந்தைகள் விட்டெறிந்த பாடப்புத்தகங்கள் போல உனக்காகாக ஒதுக்கப்பட்ட தனியறையில் சிதறிக்கிடக்கக் கூடும். தனிமை சிறிதுமற்ற உன் பாதைகள் விசும்பில் அலைவுறும் கோள்களின் நிரந்தர விளையாட்டென கொண்டாய். வருத்தங்களும் ஆசீர்வாதங்களும் கொண்ட என் மனம் உன்னை தினமும் வேவு பார்த்துக்கொண்டிருக்கிறது. பனிக்குள் கசிந்து வெளியேறும் நீர்த்துளி போல என்னிடமிருந்து நழுவிச்சென்றுவிட்டாய். இப்போது உனக்கு வாய்த்திருக்கும் இத்தனிமை உனக்கான கருணைக்கடவுளால் விரும்பி அளிக்கப்பட்டது. பீடிப்புகை கிடைக்காமல் நீ மனச்சோர்வு கொள்ளக்கூடும். இது வாழ்க்கை உனக்கு ஆதரவாக அளித்த கொடைத்தருணம் . விளையாட்டாகவும் இயல்பு மாறாமலும் உன்னை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டிய தருணம். இதுகாறும் நீ புணர்த்த மொத்தப் பெண்களின் மகிழ்வுவாசனை உன்னைக்காக்கும். உன் உறுதியற்ற நிலைப்பாடு எனக்கு மிகுந்த சோர்வை அளிக்கிறது ராமா.






31.12.1999
00.05
இன்று ஒரு இடத்தில் நூறு ரூபாய் திருடினேன் அங்கயற்கண்ணி. எல்லாம் உன் மகனுக்ககத்தான். குரோம்பேட்டை சிம்பொனி டெய்லர்ஸ் போயிருந்தேன். மூன்று மாதத்திற்கு முன் சௌந்தரபாண்டி இறந்தபோது போனது. நீ ஒரு தடவை அவனை பார்த்திருக்கிறாய். எனக்கு பள்ளித்தோழன். தொன்னூறில் குரோம்பேட்டைக்கு வந்தான் தையல்காரனாக. காடுமாடு போல கம்பீரமாய் இருப்பான். அவன் இறக்கும் போது முப்பத்தேழு கிலோதான் இருந்தான். ரத்தப்புற்று அவனைத்தாக்கியபோது அவனை விட நான்தான் அதிகம் பயந்து போனேன். அவனை பார்க்கவே போகவில்லை. ஐந்துமாதத்தில் இறந்து போனான். சாவுக்கு போய் மூஞ்சியைகூட பார்க்கவில்லை. அழுகைவரவில்லை. பயம். சுடுகாட்டிற்கு போகும் வழியில் பாதியிலேயே வந்துவிட்டேன். இன்றைக்கு சும்மா அந்தப்பக்கம் போயிருந்தேன். கையில் காசு இல்லை. வருசப்பிறப்பிற்குஉன் மகனுக்கு ஒரு உடை எடுக்கலாம் என்று நினைத்திருந்தேன். முடியவில்லை. டெய்லர் கடையில் சண்முகம் இருப்பான் எதையாவது தைத்து வாங்கலாம் என்று போயிருந்தேன். ஆள் இல்லை. கடையில் காஜா பையன் மட்டும் இருந்தான். உட்கார்ந்து டேபிளை நோண்டிக்கொண்டிருந்தபோது தையலளவு நோட்டில் அந்த நூறு ரூபாய் தாள் இருந்ததை பார்த்தேன். அதை கொண்டுதான் தாம்பரம் பஜாரில் உன் மகனுக்கு உடை வாங்கினேன். காபி நிறத்தில் வெள்ளைப்பூ போட்ட சட்டையும் திரௌசரும். நாளைக்கு வருசப்பிறப்பு. ஆனால் நான் அடுத்த மாதம் தான் ஊருக்கு வருவேன். அதுவரைக்கும் இந்த உடையை நான் தர முடியாது. யாரிடம் கொடுத்து விடுவது. பேசாமல் நீ மெட்ராசுக்கு மாற்றலாகி வந்துவிடு அங்கயற்கண்ணி. உன் குடும்பத்திற்கு என் வீடு சரியாய் இருக்கும். என் ஒருவனுக்காக இந்த வீடு சற்று பெரியதுதான். ராமனும் நீயும் உன் மகனுடன் வசதியாய் இருக்கலாம். எனக்கும் சாப்பாட்டு பிரச்சனை இல்லை. நான் சொன்னால் டிசொசாவும் வந்து விடுவாள். டிசோசா வந்தால் எனக்கு நிம்மதி வந்துவிடும் என்று உனக்கு தெரியும்தானே. கடலலை கேட்கும் இந்த அரசுகுடியிருப்புக்கள் மாலைக்காற்றுக்கு பேர்போனது. கடலை உனக்கு எவ்வளவு பிடிக்கும். பார் நான் கடலின் முன்னூறு மீட்டர் தூரத்தில் வாழ்கிறேன். கடலைப்பார்த்து ஒருமாதத்திற்கு மேல் ஆயிற்று. தினமும் கடலை கேட்கிறேன் என்பதுதான் மிச்சம். கடல் உன்னை அதிகம் ஞாபகப்படுத்துகிறது அங்கயற்கண்ணி. நமது பால்ய நினைவுகள் என்னை பெரிய ஆயாச ஆழத்துள் அமிழ்த்துகிறது. கடலறியாத எனக்கு உன் கற்பனைச்சிப்பிகளை கொடுத்த காலங்களை நான் கடற்கரை மணல்த்துகள்களில் தேடுகிறேன். புத்தாண்டு கொண்டாட்ட கூச்சலில் கரைத்து கொண்டிருக்கிறது கடல். எனக்கு நம் குடும்ப ஞாபகம் நிலவின் பால் வெளிச்சம் போல பொங்குகிறது. அழுதால் சற்று இளைப்பாறல் கிடைக்கும். முடியவில்லை. நான் கடல் பார்க்க போகிறேன். உன்னைப்பற்றி நினைக்கவும் குமுதவல்லியை மறக்கவும் கடல் உதவுமெனப்படுகிறது.

* * * * * * * * *
தொடரும்
* * * * * * * *


குறிப்பு

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

சொல்லுவதெல்லாம் பொய் - பற்றிய முன்குறிப்பு.

இந்த நாவலை நான்-லீனியர் வகைமையில் பெரும்கதையாடளாக எழுதுகிற முடிவிலிருக்கிறேன். மேலும் இது எடிட் செய்யப்படாமல் அப்படியே இடுகிற பதிவு. எழுத்துப்பிழைகள் மன்னிக்கக்கூடியவையே. நாவலை முடித்த பிறகு ரீ-எடிட் செய்யும் எண்ணம் உள்ளது. இப்போதைக்கு மாதம் மூன்று அத்தியாயங்கள் எழுத நினைத்திருக்கிறேன்.

ஒப்புதல்:

இந்த நாவல் சுத்த கற்பனையால் ஆனது. நிஜ ஆளுமைகளின் பிரதிமை

தெரிந்தால் முற்றிலும் அது தற்செயல். ஆனாலும் இதில் வரும் நிலமும்

சூழலும் ஏறக்குறைய உண்மைகள்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

04 January, 2010

சொல்லுவதெல்லாம் பொய் 1

*******************


கவனமாய் கேள் விவேகி. இது நான் சொல்லப்போகும் கதைகளின் கூட்டம். குழப்பம் விளைவிக்கும் இக்கதைகளின் காலம் முன்னுக்கு பின் முரணானது. இதன் சம்பவங்கள் நேரடியானவை என நீங்கள் நம்பினால் நீங்கள் எமாற்றப்படுகிறீர்கள். நான் எனும் சன்னா தனக்குள் நிகழ்ந்த கற்கால சிந்தனைகள் இவை. விளையாட்டுச்சீட்டுகளை கலைக்கத்தொடங்குகிறேன். விவேகி வா. இது நமக்கான சமர். கவனமாய் இரு.




********




சன்னாசியின் நாட்குறிப்பு


00.00

15.07.1998 இரவு பத்து இருபதுக்கு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மணிக்கு அறுபது கிலோமீட்டர் வேகத்தில் தடாலென விழுந்தேன். பத்து வினாடிகளுக்கு அம்மா அப்பா நீ என யாரும் நினைவுக்கு வரவில்லை. நமது கஷ்டமெல்லாம் முழுவதுமாக தோன்றி மறைந்தது. மறுநாள் மாமனானது அறிந்தேன். அப்பா எவ்வளவு மகிழ்ச்சியடைந்திருப்பார். எதையும் நிம்மதியாக அனுபவிக்க முடியவில்லை பார்த்தாயா. ஒரு வாரம் ஒரு வருடம் போல் உள்ளது. உன் திருமணத்துக்கு முதல் நாள் இரவும் இதுபோல நான் வண்டியிலிருந்து விழுந்தது ஞாபகத்திற்கு வருகிறது. எவ்வளவு வேடிக்கை. இப்பொழுதெல்லாம் எனக்குக் கீழிருப்பவர்களிடம் கூட நேராக பார்த்து பேச முடியவில்லை. யாராவது ஜோக் அடித்தாலும் சிரிக்க எனக்கு தகுதி இருக்கிறதா என்று யோசிக்கிறேன். என் மூளை செயல் இழந்துவிட்டதாகவே தோன்றுகிறது. என்ன நடந்தாலும் என் மனம் தோல்வியை மட்டும் ஒப்புக்கொள்ள மறுக்கிறது. பசித்தாலும் நிறைய உண்ண மறுக்கிறது. இப்போதைக்கு என் இடதுகை எழுத மறுக்கிறது. அங்கயற்கண்ணி கை சரியாகட்டும் நிறைய எழுதுகிறேன்.

*******

26.02.1991 செயவ்வாய் இரவு.

00.01
அருவருக்க தக்க ஈனப்பிறவி என உலகில் ஏதேனும் உள்ளதா. தெரியவில்லை. ஒரு பட்டியலைப் பார்க்கலாம்: குஷ்டம் கண்ட உள்ளாடை கிழிந்த தெருவில் கிடக்கும் நீக்ரோ பிச்சைக்காரி, சொறிநாய், மலம் உண்ணும் பன்றி, பீழை தெறிக்கும் கழுதை, முருங்கைபிசின் போல வடியும் புண்களுடன் அம்மை கண்ட வேசி மற்றும் என்னால் கற்பனை செய்யவியலாத அவரவர்களுக்கு தக்க விதமாய் கற்பனை செய்யப்படும் பிம்பங்கள். இவைகளெல்லாம் தன்னளவில் புனிதமாகவும் தனித்தன்மை வாய்ந்ததாகவும் நியாயப்படுத்த கூடியதாகவும் அதே சமயத்தில் இயற்கையின் பேராதிக்ககூறின் ஒரு அழகாகவும் இருக்கிறது. எனில், அருவருக்கத்தகுந்த ஈனப்பிறவி என ஏதேனும் உண்மையில் இருக்கிறதா என்றால், இருக்கிறது மேலும் அதை இரண்டு வகையாக பிரிக்க முடியும். முதலாவதாக அருவருக்கத்தகுந்த ஈனப்பிறவி என எண்ணுகிற உணர்வு, ஒரு மனதின் வாழ்வு நீளத்தில் - மனிதனின் வாழ்வு நீளம் அல்ல - இவ்வுணர்வுக்கு பல்வேறு படிநிலைகள் உள்ளன. அவற்றின் அதிர்வுகளை அவ்வந்த மனமே தீர்மானிக்கும். தீர்மானிக்க வேண்டும். தீர்மானித்துக்கொள்ளும். இரண்டாவதாக, தன்னிலையையே அருவருக்கத்தகுந்த ஈனப்பிறவி என்று உணர்கிற தருணம். இது ஒரு வகையான அகவய நிகழ்வுப்போக்கு. தன்னைத்தானே அருவருக்கத்தகுந்த ஈனப்பிறவி என்று உணர்கிற தருணம் என்பது அந்த மனத்தின் படிக்கற்கள் போல. அதன் எடைக்கு தகுந்து அதன் வாழ்வுதிசை மாறும். இவ்வகையான உணர்வின் முதல் அறிமுகத்தின் போது ஏற்படும் மன உடைப்புகளை அம்மனம் புறக்கனிக்குமேயானால் பின் எப்போதும் அதேவகையான நிலையில் அம்மனம் இயங்கக்கூடும். என் மனம் என்னை அருவருக்கத்தகுந்த ஈனப்பிறவியாக உணர்ந்த கணம் இன்று எனக்கு வாய்த்தது. அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி நான் என்ன முடிவு செய்ய வேண்டும் என்று டிசோசாவிடம் கேட்கலாமென்று முடிவு செய்தேன்.

********

09.05.1991 புதன் இரவு.

00.02
மற்ற பெண்களைப்போலவே அவளும் ஒரு ஆணுக்கு மனைவியாய் இருந்தாள். அவள் மனவெளியைப்போன்றே அவள் உலகமும் மிகச்சிறியது. நகரின் ஒரு கட்டணதொலைபேசி நிலையத்தில் அவளது வலது ஆள்காட்டி விரலும் வலது காதுமடலும் கருத்துப்போகுமளவுக்கு வேலை செய்தாள். அவளது கணவன் நூற்பாலை ஒன்றில் வரைமுறையற்ற நேரங்களில் வேலை செய்தான். அந்த நூற்பாலையின் முதலாளி இனிய இரவொன்றில் தனது வீட்டு முற்றத்தில் அமர்ந்து பக்கார்டி ரம்மும் முந்திரிக்கொட்டையும் சாபிடப்பிடிக்காமல் ஏற்பட்ட சிறு மனக்கிளர்வினால் தன் ஆலையில் தொழிலாளர்களின் பணிக்காலம் முறைப்படுத்தப்படவேண்டும் என்கிற முடிவை வந்தடைந்தான். மறுநாள் முதல் பதினைந்து நாட்களுக்கு அவளின் கணவன் இரவுப்பணி செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டான். சில சந்தர்ப்பங்களில் அவள் மனவெளியில் எங்கோ கிடந்த கல்லைப்புரட்டியத்தில் அவள் கணவனின் நெருங்கிய நண்பனாகிய நான் அந்த பதினைந்து இரவுகளில் அவளை இருபத்தியேழு முறை புணர்ந்தேன். காத்திரமான அவளது கருப்பு உடல் என்னால் குழைவாக்கப்பட்டதாக ஒரு சில இரவுகளிலேயே நம்பத்தொடங்கியிருந்தேன். அவள் உடம்பின் ஒவ்வொரு புள்ளியும் என்னால் புரிந்துகொள்ளத்தக்கதாய் இருந்தது. ஆனால் அவளின் மன வெளி எனக்கு சற்றும் விளங்காதவை. அவளின் ஞாபகத்தொகுப்பில் சில வீடுகள் இந்த நகரின் கிழக்கில் இருக்கும் மூன்று வீதிகளின் வரைவு விளக்கமும் திரையரங்குகளின் வழிப்பாதையும் காமதேனு தொலைபேசி நிலையமும் ராஜாராம் தையல்கடையும் கணவனின் தோல் வாசனையும் அம்மாவின் கூந்தலும் அப்பாவினால் ஏற்பட்ட காயத்தழும்பும் குழப்பமான பல்வேறு வகையான தொடர் எண்களும் அவள் பாட்டி வைத்து கொடுக்கும் மாங்காய் பச்சடி இனிப்பும் இன்னும் என்னால் விளங்கமுடியாத விஷயங்களாலும் நிரம்பிக்கிடந்தன. மற்ற எல்லாப்பெண்களைப்போலவே அவளும் மற்ற எல்லா வேலைகளையும் செய்தாள். நகரில் அவளுக்கென்று சொல்லப்பட்ட வீட்டில் அவள் தனதான குடும்பத்தை நிர்வகித்தாள். ஒவ்வொரு இரவும் நான் கொண்டு சென்ற அரைக்கிலோ இனிப்பு பதார்த்தத்தை சில நிமிடங்களில் தின்று தீர்த்துவிடுவாள். பதினைந்தாவது இரவில் இனிப்பை தின்றவாறு சொன்னாள்: மொத நாளே சொல்லலாம்னு நெனச்சேன்.. நீ எப்பிடிப்பட்ட வாத்தியார்னு எனக்கு தெரியாது.. ஆனா நீ சரியான ஆம்பள.. உடனே நான் கேட்டேன், அப்படி எத்தன ஆம்பளைகள உனக்கு தெரியும்..' பின்எப்போதும் அவள் என்னை அனுமதிக்கவேயில்லை. அவளின் கணவன் எப்போதும் போல என் நண்பனாகவே இருந்தான்.

****************

தொடரும்..

***************

நிலம்

விழாக்கால நெரிசலாய் திமிர்கிறது

மூளைசெதில்களில் பிரவகிக்கும் உனக்கான

கற்பனைச்சுரபி. வழிகிறது ரணத்தின் நிணம்.

தூர நாயின் ஓலம் மரணத்தையொத்தது அல்ல

மாறாக அன்பின் அலறலது. தேவையின்

அடிப்படைகூச்சலும் கூட. பொருண்மையற்ற

நுண்ணிய தர்க்கத்தால் பிரியநேரும்

துயரத்தை என் பாதத்தில் உணர்த்துகிறாய்

சிதைவுறும் பண்பாட்டு கழிவுகளில் பற்றியெரிந்து

பிரகாசிக்கிறாய். உற்சாகக்கூப்பாட்டில்

சிவக்கிறதுன் குதம். நீர்கசியும் ஒரு முகடோ

அல்லது

பள்ளத்தாக்கின் நுனியோ போதுமானதாய்

வீழ்ந்துகிடக்கிறாய் சிறுகுழந்தையின்

விழிவெளுப்பாய். இயல்பின் இயல்பாய்

மரணம் நோக்கிய சுவாசத்துடன் விரியும்

உன்னுள் மதம்

கொண்ட விலங்கின் வன்மை புதைக்கப்படுகிறது.

உணவுக்கு

என் விதைகள் போதுமானதாய் இல்லையென

புனையபபடும் பாடத்திட்டத்தில் உன்

காலம் மெல்லிய கம்பியில் நடந்து

வித்தை காட்டும் சிறுமியின் கால்களில்

இருக்கும் செருப்பு போன்ற விநோதமும்

பயங்கரமும் கூடியது.

உன் இயக்கவியல்

தந்திரத்திலும் அதன் சமன்பாடுகளின் துல்லியத்திலும்

இற்று விழும் சவங்கள் விழிகளை

திறந்தே வைத்திருக்கின்றன பசிய

முதலையின் வாய்போல. காக்கைகளின்

உணவிற்கு குறைவற்ற

நிலத்தில் எந்நேரமும் என் தலைக்குள்

சுடுகாட்டு வாசம்.

எனக்கு உன்னைப்பற்றிய அக்கறைஎதுவும்

இல்லைஎன்பதற்காகவே சட்டைப்பையில்

சிறிது வண்டல் போட்டு ஒரு பிள்ளைப்பூச்சியை

வளர்க்கிறேன். நீ தருவதைவிட அதிக

குறுகுறுப்பை தருகிறது என் நெஞ்சில்.

சமயங்களில் அது வயிற்றுப்பகுதிக்கு தப்புகிறது

அச்சமயங்களில் நெஞ்சை விட வயிறு நிறைய

சிதைவுகளுக்கு ஆளாகிறது. அதற்கு உணவு

தயாரிப்பதினாலேயே உன் நினைவை

என்னால் கடந்துவிட முடிகிறது. மேலும்

நிலையான நீண்ட காலம் பற்றிய

நம்பிக்கை எனக்கில்லை என்கிற என்

கூடுதல் பலவீனத்தையும் நீயறிவாய்.

முழங்காலும் நெஞ்சும் உன்மீதுவிழ இருகைகள்

அறைந்து தொழுவதும் பிரவகிக்கும் கண்ணீரின்

மூலம் நெகிழும் என்மனதை சிருமதுவூற்றி

எரிப்பதும் உனக்கு பொருட்டல்ல என்பது மட்டுமே

உன்னதத்தின் கூட்டுச்சதி. மரணத்தின்

சங்கேதமாகிப்போன

உன்பற்றிய நினைவை அழிக்கவல்ல ஆயுதம்தேடி

நானலையத்தேவையான சிறகுகளை வைத்திருக்கும்

தேவதைகள் நிலமே நிலமே என கூவியூற்றுகிறார்கள்

கிரகணங்களின் திரவத்தை

நான் குடித்துக்கொண்டிருக்கிறேன்.

**********************************